காளி பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{infobox_holiday
{{infobox_holiday
|holiday_name =காளி பூஜை
|holiday_name =காளி பூஜை
|image= Kali By Piyush Kundul .jpg
|image= Shyama Shakespeare Sarani Arnab Dutta 2010.JPG
|caption=
|caption=
|observedby = இந்து (வங்காளிகள், அசாம் மற்றும் ஓடிய மக்கள்)
|observedby = இந்து (வங்காளிகள், அசாம் மற்றும் ஓடிய மக்கள்)

13:10, 13 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

காளி பூஜை
கடைபிடிப்போர்இந்து (வங்காளிகள், அசாம் மற்றும் ஓடிய மக்கள்)
முக்கியத்துவம்துர்கா பூஜைக்கு பின் கிழக்கு இந்தியாவில் மிகப்பெரும் விழா ,
கொண்டாட்டங்கள்பட்டாசுகள்
நாள்சந்திரமானம் படி முடிவு செய்யப்படும்
நிகழ்வுஆண்டுக்கு ஒரு முறை

காளி பூஜை என்பது இந்து தெய்வமான காளி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். இதை சியாம பூஜை என்றும் மகாநிச பூஜை என்றும் அழைப்பர்[1]. இது வங்க நாள்காட்டியின் கார்த்திகை(ஐப்பசி) மாதத்தின் அமாவாசை நாளில் வரும்[2]. இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய மேற்கு வங்கம், ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளி (அமாவாசை) அன்று இப்பண்டிகை வரும். மற்ற மாநிலங்களில் லட்சுமி பூஜை நடத்தப்படும் வேளையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் உள்ள மக்கள் காளி தேவியை வழிபடுகின்றனர்[2]. மகாநிச பூஜை என்பது பீகாரிலும் நேபாளத்தின் மிதிலா பகுதியில் வாழும் மைதிலி மொழி பேசும் மக்களால் செய்யப்படுவது ஆகும்.

வரலாறு

காளி பூஜை மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் பழமையான ஒரு விழாவாகும். ஆரம்பத்தில் இதைப் பழங்குடியினர் செய்து வந்தனர். பின்னர் இவ்வழிபாடு பிராமண வழிபாடாக மாறியது. சைதன்யரின் காலத்தில் கிழக்கு இந்திய மாநிலங்களில் வாழ்ந்த சாக்தர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் பகைமை நிலவியது. அதனை நீக்க இவ்விழா பயன்பட்டது. 19ம் நூற்றாண்டில் அசாம், வங்கத்தில் வாழ்ந்த வசதி படைத்த சமின்தார்கள் காளி பூஜையை நடத்தினர்[3]. அதனால் இவ்விழா பிரபலமடைந்தது. தற்போது வங்கத்திலும், அசாம் போன்ற கிழக்கு மாநிலங்களிலும் துர்கா பூஜைக்கு அடுத்து இரண்டாவது பெரிய விழாவாக காளி பூஜை திகழ்கிறது[4].

வழிபாடு

காளிகாட் காளி தேவி

பக்தர்கள் துர்கா பூஜை போல் காளி பூஜையிலும் அன்னையை மண் சிலையாக வீடுகளிலும், பந்தல்களிலும் (தற்காலிக கோவில்கள்) ஆராதனை செய்கின்றனர். காளி தாந்திரிக மந்திரங்களால் ஆராதனை செய்யப்படுகிறாள். அன்னைக்கு செம்பருத்திப்பூக்கள், கபாலத்தில் மிருக ரத்தம், இனிப்புகள், பருப்புகள் ஆகியன படைக்கப்படுகின்றன. காளி பக்தன் இந்நாளில் இரவு முழுவதும் மாதாவை தியானம் செய்ய வேண்டும்[5]. வீடுகளில் அந்தணர்களை கொண்டு காளியை சாந்த ரூபமாக வழிபாடு செய்யலாம். அன்று சில இடங்களில் மிருக பலி கொடுக்கப்படும். கொல்கத்தாவிலும், அசாம் மாநிலம், குவாஹாட்டியிலும் அன்னை மயானத்தில் உறைவதாக ஐதீகம். அதனால் அங்கும் காளி பூஜை செய்வர்[6] .

பந்தல்களில் காளி சிலையுடன் அவளின் நாயகன் சிவன் சிலையும், பக்தன் ஸ்ரீ ராமகிரிஷ்ணரின் சிலையும் வைக்கபடுகின்றன. சில இடங்களில் புராண கதைகளில் வரும் தசமஹவித்யா என்னும் காளியின் 10 உருவங்களையும் வைப்பர்[7]. மக்கள் இரவு முழுவதும் பந்தல்களுக்கு சென்று அன்னையை ஆராதிப்பர். இந்த இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும்[8]. சில இடங்களில் மாயஜால நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோவிலிலும், அசாமில் உள்ள காமக்யா கோவிலிலும் அன்று வைணவர்களின் காளி பக்தியை எடுத்துக்காட்டும் வகையில் அன்னை மகா லட்சுமியாக வழிபடபடுகிறாள். அன்று அன்னையைக் காண நாடெங்கும் பக்தர்கள் திரள்வர். சிலர் மிருக பலியும் கொடுப்பர். தட்சிணேசுவரம் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் ராமகிருஷ்ணர். அவரின் காலத்தில் இருந்து இன்று காளி வழிபாட்டில் சிறிது மாறுதல் அடைந்துள்ளது[9]. .

மற்ற காளி பூஜைகள்

வங்க நாள்கட்டியின்படி கார்த்திக் (ஐப்பசி) மாதத்தில் வரும் காளி பூஜை தீபன்வித காளி பூஜை எனப்படும். இதுபோல மற்ற மாதங்களிலும் காளி பூஜை செய்யலாம் .மார்கசிர்ஷம் (மார்கழி ) மற்றும் ஜேஷ்ட (ஆனி) மாதத்தில் வரும் பூஜைகள் முறையே ரதந்தி காளி பூஜை மற்றும் பலஹாரிணி காளி பூஜை எனப்படும். பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதாதேவியை சோடஷியாக வழிபட்டார்[10]. வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்[11].

மேற்கோள்கள்

  1. http://www.diwalifestival.org/regional-names-diwali.html
  2. 2.0 2.1 McDermott and Kripal p.72
  3. McDermott p. 173
  4. McDaniel p. 223
  5. McDaniel p. 234
  6. Fuller p. 86
  7. Kinsley p.18
  8. McDaniel pp. 249-50, 54
  9. See Harding pp. 125-6 for a detailed account of the rituals in Dakshineshwar.
  10. Gambhirananda, Swami (1955). Holy Mother Shri Sarada Devi (1st ). Madras: Shri Ramakrishna Ashrama, Madras. பக். 48–51. 
  11. Banerjee, Suresh Chandra (1991) (in Bengali). Shaktiranga Bangabhumi [Bengal, The Abode of Shaktism] (1st ). Kolkata: Ananda Publishers Pvt Ltd. பக். 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7215-022-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_பூஜை&oldid=1692132" இலிருந்து மீள்விக்கப்பட்டது