பாண்டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(*உரை திருத்தம்*)
 
====பாண்டவர்களின் பிறப்பு====
யமுனை நதிக்கரையில் [[யாதவர்]] குழு ஒன்று செழிப்பான [[மதுரா]] எனும் நகரை அமைத்து குழு அட்சி முறையை நடத்தி வந்தது.<ref name = "one">Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK</ref> யாதவர் ஆட்சிக் குழுவில் ஒருவரான [[சூரசேனரின்]] மகள் [[பிரதை]], பிரதை சூரசேனரின் உறவினர் [[குந்திபோஜன்]] தத்தெடுத்து [[குந்தி]] என பெயரிட்டு வளர்த்து வந்தார். மண வயதையடைந்த குந்திக்கு சுயவரம் நடந்தது, சுயவரத்தில் கூடியிருந்தவர்களில் [[பாண்டு]]வை தேர்ந்தெடுத்தாள். காலம் கடந்தது, குந்தி மூலமாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாத பாண்டுவுக்கு, இரண்டாவதாக [[மத்ரா]] நகரின் மன்னன் [[சல்லியன்|சல்யனின்]] சகோதரி [[மாத்ரி]]யை முடித்து வைத்தனர். முதல் மனைவிக்கு குழந்தையில்லாத போது இரண்டாவது மனைவியை தேடிக்கொள்ள சாத்திரத்தில் இடம் இருந்தது, ஆனால் குந்தி [[மலடி]]யல்ல அதற்கு முன் உதாரணம் உள்ளது. இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு தன் மூலமாக குழந்தை பிறக்கவில்லை என மனம் நொந்து காட்டிற்கு வேட்டையாடுவதற்காக பாண்டு சென்றுவிடுகிறான். வேட்டையின் போது பாண்டுவின் அம்பு பெண்மானை முயங்கிக் கொண்டிருந்த ஆண் மானை தாக்கிவிடுகிறது. மானின் அருகில் சென்று பார்த்த போது பாண்டுவுக்கு உண்மை தெரிகிறது. [[கிண்டமா]] என்ற முனிவரும் அவரது மனைவியும் காட்டில் சுதந்திரமாக உலவி காதல் செய்யும் நோக்கில் தங்களது தவ வலிமையால் மான்களாக உருவம் மாறியிருந்தனர். இறக்கும் நேரத்தில் கிண்டமா முனிவர் "ஒரு ஆணும் பெண்ணும் காதல் புரிவதை ஆக்ரோசமாக தடுத்துவிட்டாய் உனக்கு காதல் சுகம் என்ன என்பது தெரியாமல் போகக் கடவது எந்த பெண்ணையும் காதல்கொண்டு தொட்டால் உடனே இறந்து போவாய்" என சாபமிட்டார். ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாதவன் அரசன் ஆகமுடியாது என வருந்தி [[பாண்டு]] [[அத்தினாபுரம்]] செல்ல மருத்து [[சதஸ்ருங்க]] வனத்தில் முனிவர்களுடன் தங்கிவிடுகிறான். இச்செய்தி [[அத்தினாபுரம்]] எட்டுகிறது. [[பாண்டு]] இல்லாத நிலையில் அத்தினாபுரத்தின் ஆட்சியை [[பீஷ்மர்]] [[திருதராட்டிரன்|திருதராட்டிரனுக்கு]] வழங்குகிறார். சில மாதங்களில் [[காந்தாரி]] கருத்தரித்தாள் என்ற செய்தி பாண்டுவுக்கு தெரியவே ஆட்சியும் போய், ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆகமுடியாத நிலையில் மனழுத்தமும், சோர்வும், விரக்தியும் அடைந்து பாண்டு ஒரு முடிவெடுத்தான். [[சுவேதகேது]] முனிவரின் நியதிப்படி ஒரு பெண்ணின் கணவர் அவர் விரும்பும் ஒரு ஆணுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம், அதன்படி தன்னுடன் இருந்த குந்தியை அழைத்து, யாராவது ஒரு முனிவரின் மூலமாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள் என வேண்டினான். தேவர்களையே அழைக்க முடியும் போது ஏன்? முனிவர்களை அழைக்க வேண்டும் என கூறி, தர்மத்தின் தலைவன் [[யமன்]] மூலம் [[யுதிஷ்டிரன்]] (தர்மன்), மிகுந்த சக்தி படைத்த [[வாயு பகவான்]] மூலம் [[பீமன்]], தேவர்களின் தலைவனான [[இந்திரன்]] மூலம் [[அருச்சுனன்]], என மூன்று குழந்தைகளை குந்தி பெற்றாள். பாண்டு வேறு ஒரு தேவனை அழைக்க சொன்ன போது " மாட்டேன் மூவருடன் இருந்தாயிற்று நான்காவதாக ஒருவருடன் இருந்தால் என்னை வேசி என்று பெசுவார்கள் அப்படித்தான் தர்மம் சொல்கிறது" என மறுத்துவிடுகிறாள். "நீ வேறு எந்த ஆணிடமும் செல்ல முடியாது" என்பதால் மாத்ரிக்காக ஒரு தேவனை அழைக்கச் சொன்னான். மாத்ரியிடம் கேட்ட போது காலை, மாலை நட்சத்திரங்களான [[அஸ்வினி தேவர்கள்|அஸ்வினி தேவர்களை]] அழைக்கச் சொன்னாள். அஸ்வினி தேவர்கள் எனும் இரட்டையர்கள் மூலம் உலகத்திலேயே மிக அழகான [[ நகுலன்|நகுலனும்]], உலகத்திலேயே எல்லாம் அறிந்த அறிவாளியான [[சகாதேவன்|சகாதேவனும்]] பிறந்தார்கள். இப்படியாக பிறந்தவர்களை பாண்டவர்கள் என்று அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர்.
 
==பஞ்ச பாண்டவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1685121" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி