ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox film | name = டிராகன் 2 | image = How to T..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 80: வரிசை 80:
* {{Metacritic film|how-to-train-your-dragon-2|How to Train Your Dragon 2}}
* {{Metacritic film|how-to-train-your-dragon-2|How to Train Your Dragon 2}}
* {{Mojo title|howtotrainyourdragon2|How to Train Your Dragon 2}}
* {{Mojo title|howtotrainyourdragon2|How to Train Your Dragon 2}}

[[பகுப்பு:2014 ஆங்கிலத் திரைப்படங்கள்]]

14:26, 20 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

டிராகன் 2
படிமம்:How to Train Your Dragon 2 poster.jpg
இயக்கம்டீன் டீபொலிஸ்
தயாரிப்புபோனி அர்னால்டு
திரைக்கதைடீன் டீபொலிஸ்
இசைஜான் பவல்
நடிப்பு
  • ஜே பருசேல்
  • கேட் பிளாஞ்செட்
  • ஜெரார்டு பட்லர்
  • கிரேக் பெர்குசன்
  • அமெரிக்கா பெரரேரா
  • ஜோனா ஹில்
  • கிறிஸ்டோபர் மிண்ட்ஸ்-பிலாஸ்
  • டி.ஜே. மில்லர்
  • கிறிஸ்டன் வீக்
  • Djimon Hounsou
  • கிட் ஹாரிங்டன்
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ் விஷுவல் ஆலோசகர்
படத்தொகுப்புஜான் கே. கார்
கலையகம்டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன்
விநியோகம்20ஆம் நூற்றாண்டு ஃபாக்ஸ்
வெளியீடுமே 16, 2014 (2014-05-16)(2014 கேன்ஸ் திரைப்பட விழா)
சூன் 5, 2014 (ஐக்கிய அரபு அமீரகம்)
சூன் 13, 2014 (அமெரிக்கா)
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$145 மில்லியன்
மொத்த வருவாய்$101,723,435

டிராகன் 2 இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு 3டி கணினி அனிமேஷன் திரைப்படம். இந்த திரைப்படத்தை டீன் டீபொலிஸ் இயக்க, ஜே பருசேல், கேட் பிளாஞ்செட், ஜெரார்டு பட்லர், கிரேக் பெர்குசன், அமெரிக்கா பெரரேரா, ஜோனா ஹில், கிறிஸ்டோபர் மிண்ட்ஸ்-பிலாஸ், டி.ஜே. மில்லர், கிறிஸ்டன் வீக், கிட் ஹாரிங்டன் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள்.

கதை சுருக்கம்

ஒரு அழகிய தீவு. அதில் ராஜாவாக நாயகனின் தந்தை. இவர் நாயகனிடம் தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும் கொடுத்து அழகு பார்க்க நினைக்கிறார். இதற்கு கொஞ்சமும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் நாயகன். இந்த தீவில் அனைவரும் டிராகன்களை தங்களது செல்லப்பிராணியாகவும், வாகனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒருநாள் தனது டிராகனுடன் வானில் சுற்றிக் கொண்டிருக்கிறார் நாயகன். அப்போது இவனைத் தேடி நாயகி வருகிறாள். இருவரும் சேர்ந்து ஒரு வித்தியாசமான தீவைப் பார்க்க, அதன்பிறகு அங்கு செல்கிறார்கள். அங்கு இறங்கும் இவர்களையும், இவர்களது டிராகன்களையும் சிறை பிடிக்கிறது ஒரு கும்பல்.

நாயகன் அவர்களிடம் எதற்காக எங்களை சிறைபிடிக்கிறீர்கள்? எங்கள் டிராகனை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கும்போது, அதில் ஒருவன் இந்த டிராகன்களை கொண்டுபோய், டிராகன்களின் தலைவனிடம் ஒப்படைத்தால் எனக்கு பணம் கிடைக்கும் என்று சொல்கிறார். இந்த டிராகன்களை வைத்து அவர் என்ன செய்வார் என்று கேட்கும்போது, டிராகன்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, எல்லா நாடுகளின் மீதும் போரிடப் போகிறார் என்றும் சொல்கிறார்.

இதை அறிந்த நாயகன், அங்கிருந்து தப்பித்து தனது தந்தையிடம் சென்று நடந்தவற்றை கூறுகிறான். நாயகன் தந்தை நாம் போரிட தயாராக இருக்கவேண்டும் என்று சொல்கிறார். அதை ஏற்காத நாயகன், தான் டிராகன் தலைவனிடம் சென்று சமாதானம் பேசுவதாக கூறுகிறான். இதை வேண்டாமென்று நாயகனின் அப்பா சொல்லியும் கேட்காமல், அங்கிருந்து புறப்பட்டு செல்கிறான் நாயகன். செல்லும் வழியில் ஒரு பெண்ணை பார்க்கிறார். அவள்தான் டிராகன் தலைவன் என்று நினைத்துக் கொள்கிறார் நாயகன். பின்பு, அவள் நாயகனின் தாய் என்பது அவருக்கு தெரிகிறது. நாயகனுடைய அம்மாவும் சில டிராகன்களை தன் கட்டுக்குள் வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் நாயகனை தேடி வரும் அவரது அப்பாவும் இவர்கள் இருக்கும் இடத்திற்கே வருகிறார். அங்கு தனது மனைவியைக் கண்டதும் மகிழ்ச்சியடைகிறார் நாயகனின் தந்தை. மூன்று பேரும் பேசி, டிராகன் தலைவனை எதிர்த்து போரிடலாம் என்று முடிவெடுக்கும் நிலையில், டிராகன் தலைவனே இவர்கள் இடத்திற்கு தன் படைகளோடு வந்து போரிடுகிறான்.

இந்த போரில் நாயகனின் தந்தை இறந்து போகிறார். டிராகனின் தலைவன் அனைத்து டிராகன்களையும் தன் வசப்படுத்தி அழைத்துச் செல்கிறான். போரில் உயிர் பிழைக்கும் நாயகன், மீதமிருக்கும் சிறு டிராகன்களை வைத்து தனது நாட்டையும், தனது டிராகன்களையும் காப்பாற்ற செல்கிறார். இதில் வெற்றி பெற்றாரா? டிராகன்களை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

குரல் கொடுத்த நடிகர்கள்

  • ஜே பருசேல்
  • கேட் பிளாஞ்செட்
  • ஜெரார்டு பட்லர்
  • கிரேக் பெர்குசன்
  • அமெரிக்கா பெரரேரா
  • ஜோனா ஹில்
  • கிறிஸ்டோபர் மிண்ட்ஸ்-பிலாஸ்
  • டி.ஜே. மில்லர்
  • கிறிஸ்டன் வீக்
  • Djimon Hounsou
  • கிட் ஹாரிங்டன்

தமிழ் வெளியீடு

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் டிராகன் 2 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெளியானது.

வீடியோ விளையாட்டு

வெளி இணைப்புகள்