பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ca:Gat is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி Robot: el:Γάτα is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 93: வரிசை 93:
{{Link FA|af}}
{{Link FA|af}}
{{Link FA|ca}}
{{Link FA|ca}}
{{Link FA|el}}
{{Link FA|eo}}
{{Link FA|eo}}
{{Link FA|es}}
{{Link FA|es}}

06:04, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம்

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால்,அவைகளை பொதுவாக வீட்டில் வளர்க்கப்பட்டு வணங்கினர்.பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர்.அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டது.

உடற்கூறியல்

பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.

பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39 °C (101 - 102.2 °F) வரை காணப்படும். பூனைகள் விரைவான இனபெருக்க விகிதம் கொண்டவை.

மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும். முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும்,பின்னங்கால்களில் நான்கு நகங்களும் பூனைகள் கொண்டு இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை கடத்தாமலிருக்கும் வகையில் மெத்தை போன்ற பாத அமைப்பை பெற்றுள்ளது. நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. மரபணு மற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன. மற்ற சுவைகளை பூனைகள் அறியும்.

பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளை சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.

பூனை வளர்ப்பு

பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆப்ரிக்கர்களே பூனைகளை பழக்கப்படுத்தினர். ஆரம்பத்தில் எலிகள் உண்பதற்காகவே பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர் அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இயல்பு

பூனைகள் இயல்பாக மாமிசப்பட்சிகள் ஆகும். சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைத்தேர்ந்தவை. சிறய தூரம் மட்டுமே வேகமாக இறையை விரட்டி சென்று துரத்தும் திறன் பெற்றவை.

பூனைகள் தனிமையை விரும்பிகளாகும். எனவே நாய்கள், சிங்கங்கள் போல் அல்லாமல், புலிகள்,சிறுத்தைகளைப் போல இனத்துடனும், மனிதர்களிடமும் தனித்தே இருக்கும். நாய்கள் போன்று சிறப்பு கவனங்களை பூனைகள் எதிர் பார்ப்பதில்லை. பூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைகாரர்களாக மாற்றுகிறது.

பழகும் முறை

பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசி தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு.

வகைகள்

பூனைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை காட்டுப்பூனை, மற்றும் வீட்டுப்பூனையாகும். காட்டுப்பூனை என்பது மாமிசம் மட்டுமே உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் வீட்டுப்பூனையானது சைவ உணவையும் உண்ணும்.

பொதுவாக அனைத்து ஆண் பூனைகளும் டாம் என்று அழைக்கப்படுகின்றன, அனைத்து பெண் பூனைகளும் ராணி என்று அழைக்கப்படுகின்றன. பூனை குட்டிகள் கிட்டன், கிட்டி, புசிகேட் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

சுத்தம்

பூனையின் நாக்கில் இருக்கும் மொட்டுக்கள் தன்சுத்தம் செய்ய உதவுகின்றன.

பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடயவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நக்கி முழுமையாக சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும் போது நாக்கில் ஒட்டிக் கொண்டு வரும் ரோம்ங்களை பந்து போல் வாயில் எடுக்கும் திறன் பெற்றவை பூனைகளாகும்.

உணவு

பூனைகள் மாமிசப் பட்சிகளாகும். வீட்டில் உள்ள பூனைகளுக்கு உணவு சரியான விகிதாச்சாரத்தில் கிடைக்கப் பெற வேண்டும். நாய்கள் உண்ணும் உணவை பூனைகள் சாப்பிடுமேயானால் அதன் பார்வை குறைபடும்.

புகழ் பெற்றவர்களின் பூனைகள்

  • நபிகள் நாயகம் பூனைகளை வளர்த்து வந்தார்.
  • போப் xvi பெனிடிக் பூனையை தன் சகோதரன் போல் வளர்த்துள்ளார்.
  • எர்லைட் ஹெர்மிங்வே என்னும் அமெரிக்க கவிஞர் மரபணு குறைபாடுடைய பூனைகளை வள்ர்த்துள்ளார்.அதனால் மரபணு குறைபாடுடைய பூனைகளுக்கு ஹெர்மிங்வே பூனைகள் என்று கூறுவது வழக்கம் ஆனது.
  • முன்னால் அமெரிக்க ஜனாதிபதியான பில்கின்டன் சாக்ஸ் என்று ஒரு பூனை வளர்த்து வந்தார்.ஜனாதிபதியின் பிரத்தியேக அறை,

பத்திரிக்கையாளர் அறை என எங்கு செல்லும் வசதியையும் அது பெற்றிருந்தது.

மேற்கோள்கள்

  1. ITIS. "ITIS Standard Report Page: Felis catus domestica".

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Spoken Wikipedia-3

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனை&oldid=1667857" இலிருந்து மீள்விக்கப்பட்டது