நிறப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: ca:Cromosoma is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
(*திருத்தம்*)
சி (Robot: ca:Cromosoma is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
[[படிமம்:Chromosome.svg|thumb|250px|[[மெய்க்கருவுயிரி]] உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) [[நிறமியன்]](Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு பகுதிகளில் ஒன்று (2) [[மையப்படி]] (Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.]]
 
'''நிறப்புரி''' அல்லது '''நிறமூர்த்தம்''' (''Chromosome'', '''குரோமோசோம்''') என்பது [[மரபியல்]] தகவல்களை கடத்தக்கூடிய [[மரபணு]]க்களைக் கொண்ட, [[உயிரணு]]க்களில் காணப்படும் [[டி.என்.ஏ]] மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த [[புரதம்|புரதங்களையும்]] குறிக்கின்றது. இது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுவில் இருக்கும் [[உயிரணுக் கரு|கருகருவில்]]வில் ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; [[பாக்டீரியா|பாக்டீரியாக்களிலும்]]க்களிலும், மெய்க்கருவுயிரிகளின் [[இழைமணி]]களிலும், [[தாவரம்|தாவரங்களின்]] [[பச்சையவுருமணி]]களிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது<ref>{{cite web | url=http://www.thefreedictionary.com/chromosome | title=Chromosome | author=The Free Dictionary, By Farlex}}</ref><ref>{{cite web | url=http://www.biology-online.org/dictionary/Chromosome | title=Chromosome | author=Biology Online}}</ref>.
 
நிறப்புரியானது, [[மரபணு]]க்களையும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளையும் (கட்டுறுத்திகள்), ஏனைய [[நியூக்கிளியோட்டைடு]] தொடர்களையும் கொண்ட ஒரு தனியான நீளமான டி.என்.ஏ இழையாலானதாகும். இந்த டி.என்.ஏ இழையுடன் இணைந்த சில புரதங்களே டி.என்.ஏ யை ஒரு கட்டுமானத்துக்குள் வைத்திருக்கவும், அதன் தொழிற்பாட்டை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உயிரினங்களின் மரபியல் தகவல்களுக்கான [[மரபுக்குறியீடு]]களைப் பொதுவாக இந்த நிறப்புரிகளே கொண்டிருக்கின்றன. ஆனாலும் சில [[இனம் (உயிரியல்)|இனங்களில்]] [[கணிமி]]களோ, அல்லது வேறு நிறப்புரியல்லாத மரபியல் கூறுகளோ இத்தகைய தகவல் குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன.
மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கருவில் இருக்கும் நிறப்புரியானது புரதங்களுடன் இணைக்கப்பட்டு மிக நெருக்கமாக அடுக்கப்படும்போது [[நிறமியன்]] (Chromatin) என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நெருக்கமான, ஒடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பதனால் கருவினுள் அடக்கப்படுகின்றது. [[கலப்பிரிவு|கலப்பிரிவின்போது]], இந்த நிறப்புரிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கலப்பிரிவின்போது தாய்க்கலத்தில் இருந்து, மகட்கலங்களுக்கு மரபியல் கூறுகள் கடத்தப்பட வேண்டி இருப்பதனால், நிறப்புரிகள் இரட்டிப்பாதலும், பின்னர் பிரிதலும் நிகழ வேண்டும். எனவே உயிரணுக்களில் நிறப்புரிகளை இரட்டிப்பான நிலையிலும், அவ்வாறு இரட்டிப்பாகாத நிலையிலும் காணலாம். இரட்டிப்பாகாத நிலையில் தனி இழையாகவும், இரட்டிப்பான நிலையில் ஒன்றையொன்று ஒத்த, சோடியான இரு பிரதிகளாகவும் காணப்படும். இப்பிரதிகள் அரைநிறவுருக்கள் (Chromatids or Sister chromatids) என அழைக்கப்படும். இந்த அரைநிறவுருக்கள் மையப்படி (Centromere) என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இது நடுவில் இருக்கையில் நிறப்புரி நான்கு கைகளையும், ஒரு முடிவுக்கு அருகில் இருப்பின் இரு கைகளையும் கொண்டிருக்கும். நீண்ட இழைகள் நெடுங்கை இழைகள் எனவும், குறிகியவை குறுங்கை இழைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
 
== வெளி இணைப்புக்கள் ==
[http://www.johnkyrk.com/chromosomestructure.html டி.என்.ஏ யிலிருந்து நிறப்புரியாக்கம்]
 
[[பகுப்பு:பரிணாம உயிரியல்]]
 
{{Link FA|ca}}
{{Link FA|de}}
44,414

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667441" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி