"கல வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Cell Cycle 2-2.svg|thumb|300px|கல வட்ட அவத்தைகளைக் காட்டும் வரைபடம். வெளி வளையத்தால் குறிக்கப்பட்டுள்ள பிரதான அவத்தைகள்: I = [[இடையவத்தை]], M = [[இழையுருப்பிரிவு]]; உள் வளையத்தால் காட்டப்படும் அவத்தைகளும் உப அவத்தைகளும்: M = [[இழையுருப்பிரிவு]], G<sub>1</sub> = [[G1 அவத்தை]], G<sub>2</sub> = [[G2 அவத்தை]], S = [[S அவத்தை]]; வளையத்தால் காட்டப்படாதது: G<sub>0</sub> = [[G0 அவத்தை]].<ref name="isbn0-87893-106-6">{{cite book | author = Cooper GM | authorlink = | editor = | others = | title = The cell: a molecular approach | edition = 2nd | language = | publisher = ASM Press | location = Washington, D.C | year = 2000 | origyear = | pages = | quote = | isbn = 0-87893-106-6 | oclc = | doi = | chapterurl = http://www.ncbi.nlm.nih.gov/books/NBK9876/ | chapter = Chapter 14: The Eukaryotic Cell Cycle}}</ref>]]
ஒரு [[உயிரணு|கலத்தின்]] கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும், அடுத்த கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும் இடையே கலத்தில் நடைபெறும் சகல செயற்பாடுகளும் ஒருமித்து '''கல வட்டம்''' (''cell cycle'', அல்லது ''cell-division cycle'') என அழைக்கப்படும். கலவட்டத்தின் இறுதியில் புதிய கலங்கள் தோற்றுவிக்கப்படும். [[பாக்டீரியா]] கலங்களில் [[இருகூற்றுப் பிளவு]] இறுதியாக நடைபெற்று இரு புதிய கலங்கள் தோற்றுவிக்கப்படும். யூக்கரியோட்டா (மெய்க்கருவுயிரி) கலங்களில் தாய்க்கலத்தை ஒத்த இரு மகட்கலங்கள் தோற்றுவிக்கப்படும் [[இழையுருப்பிரிவு|இழையுருப்பிரிவோ]] அல்லது [[புணரி]] உருவாக்கத்துக்காக நடைபெறும் [[ஒடுக்கற்பிரிவு]] நடைபெறலாம். பொதுவாக இழையுருப்பிரிவு இரண்டு மகட் கலங்களையும், ஒடுக்கற்பிரிவு நான்கு மகட் கலங்களையும் தோற்றுவிக்கின்றன. [[கலப்பிரிவு]] கல வட்டத்தை எல்லைப்படுத்தும் அவத்தையாக இருந்தாலும், அனேகமான கலங்களில் அது கல வட்டத்தின் குறுகிய நேரத்தையே பிடித்திருக்கும். கல வட்டத்தில் கலப்பிரிவு (இழையுருப்பிரிவு அல்லது ஒடுக்கற்பிரிவு) நடைபெறாத அவத்தை '''இடையவத்தை''' என அழைக்கப்படும். இடையவத்தையின் போதே [[உயிரணு|கலம்]] வளர்ச்சியடைவதுடன் ஊட்டச்சத்துக்களையும் சேமிக்கின்றது. பொதுவாக கலவட்டத்தில் இடையவத்தையே மிக நீண்ட அவத்தையாகும். போதியளவு வளர்ச்சியடைந்த பிற்பாடே கலப்பிரிவு நடைபெறும். பல கல வட்டங்கள் பூர்த்தியாக்கப்படுவதாலேயே [[கருக்கட்டல்|கருக்கட்டலின்]] போது உருவாகும் தனிக்கல நுகம் வளர்ச்சியடைந்து பல்கல முழுவுடலி ஆகின்றது. தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் கலத்திரளில் [[இடையவத்தை]], [[இழையுருப்பிரிவு]] அவத்தை ஆகிய இரு அவத்தைகளே உள்ளன. எனினும் வியத்தமடைந்த கலங்கள் G<sub>0</sub> எனும் நிலைக்கும் செல்கின்றன. இது இறுதி கல வட்டத்தின் இறுதியில் பெறப்படும் அவத்தையாகும். இந்நிலையை அடைந்த கலங்கள் மீண்டும் கலவட்டத்துக்குள் சென்று புதிய கலங்களைத் தோற்றுவிப்பதில்லை. தூண்டப்படும் போது சில G<sub>0</sub> அவத்தைக் கலங்கள் மீண்டும் கலவட்டத்துக்குள் உள்வாங்கப்படலாம்.
கல வட்ட அவத்தைகள்:
{| class="wikitable" border="1" style="text-align:center"
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1665295" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி