"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6,018 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி (*விரிவாக்கம்*)
சி (இற்றையாக்கம்)
 
திருத்தந்தை பிரான்சிசுக்கு முன் வாழ்ந்த வேறு இரு திருத்தந்தையர்களுக்கும் "சிறந்த மனிதர்" விருது வழங்கப்பட்டது கருததத் தக்கது. அவர்கள் முறையே [[திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] (1962ஆம் ஆண்டு விருது), [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] (1994ஆம் ஆண்டு விருது) ஆவர்.
==உலக அமைதி பற்றிய செய்தி வழங்கல்: 2014 உயிர்த்தெழுதல் பெருவிழா==
 
வத்திக்கான் நகரின் [[புனித பேதுரு பெருங்கோவில்]] முன்னே அமைந்துள்ள [[புனித பேதுரு சதுக்கம்|புனித பேதுரு சதுக்கத்தில்]] கூடியிருந்த சுமார் 150 ஆயிரம் முன்னிலையில் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] பெருவிழாவான 2014, ஏப்பிரல் 20ஆம நாளன்று திருத்தந்தை பிரான்சிசு ''(உரோமை) நகருக்கும் உலகுக்கும்'' ([[:en:Urbi et Orbi|Urbi et Orbi]]) என்று கூறப்படுகின்ற சிறப்பு ஆசியுரை வழங்கினார். வானொலி, தொலைபேசி, சமூக வலையங்கள் வழியாக கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்த அந்த ஆசியுரையின்போது திருத்தந்தை பிரான்சிசு உலக மக்கள் அனைவருக்கும் அமைதிச் செய்தியை எடுத்துரைத்தார்.
 
உலகம் முழுவதும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை குறிப்பாக, சிரியா நாட்டில் அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறைச் செயல்கள் நடைபெறுபெவது நிற்க வேண்டும் என்றார். அதுபோலவே, உக்ரைன் நாட்டில் இழுபறிநிலை தளர்த்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் நைஜீரியா நாட்டில் நிகழும் கொடூரமான பயங்கரவாதம், ஈராக் நாட்டில் நிலவும் வன்முறை, தென் சூடான் மற்றும் உலகெங்கிலும் வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
2014,மே 24-26 நாள்களில் இசுரயேலுக்கும் பாலத்தீனத்திற்கும் திருப்பயணமாகச் செல்லவிருக்கின்ற திருத்தந்தை பிரான்சிசு அந்த இரு நாடுகளுக்கிடையே அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டார்.
 
மேலும், உலகத்தில் பசி பட்டினியால் மக்கள் அவதியுறுகின்ற நிலையை மாற்றிட அனைவரும் உழைக்க வேண்டும்; பசி பட்டினியால் குறிப்பாக சிறுவர்களும் முதுவயது தாண்டியோரும் வாடுகின்றனர். உலகில் நிகழும் போர்கள், கட்டாய இடம்பெயர்த்தல், வளங்களை வீணடித்தல் போன்றவையும் பசி பட்டினியை அதிகரிக்கின்றன. இந்நிலை மாற வேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிசு.
 
குறிப்பாக, [[எபோலா தீநுண்ம நோய்]] காரணமாக [[கினியா]], [[சியேரா லியோனி|சியேரா லியோனே]], [[லைபீரியா]] போன்ற நாடுகளில் துன்புறும் மக்களைத் திருத்தந்தை நினைவுகூர்ந்தார். மேலும், அக்கறையின்மையாலும் கொடிய வறுமையாலும் பரவுகின்ற நோய்கள் காரணமாக உலகில் எத்துணையோ மக்கள் இன்னல்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, அந்நிலையை மாற்றிட அனைவரும் உழைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
வழக்கம்போல, திருத்தந்தை தம் உரையின் முடிவில் நகைச்சுவையோடு கீழ்வருமாறு கூறினார்: "அவ்வளவு தான்! உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! எல்லாரும் போய் நன்றாக விருந்துண்ணுங்கள்!"<ref>[http://www.usatoday.com/story/news/world/2014/04/20/pope-easter-religion-rome/7926551/ 2014ஆம் ஆண்டு உயிர்த்தெழுதல் விழா அமைதிச் செய்தி]</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1649346" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி