கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14: வரிசை 14:
| studio = ஈராஸ் இன்டர்நேசனல் <br>மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்
| studio = ஈராஸ் இன்டர்நேசனல் <br>மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்
| distributor =
| distributor =
| released = {{Film date|2014|04|11|df=y|ref1=<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Kochadaiyaan-On-Rajini-Birthday/articleshow/14636491.cms |title=Kochadaiyaan On Rajini Birthday |work=[[Times of India]] |date = 3 July 2012 | accessdate=3 July 2012}}</ref>}}
| released = {{Film date|2014|05|01|df=y|ref1=<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Kochadaiyaan-On-Rajini-Birthday/articleshow/14636491.cms |title=Kochadaiyaan On Rajini Birthday |work=[[Times of India]] |date = 3 July 2012 | accessdate=3 July 2012}}</ref>}}
| runtime =
| runtime =
| country = {{Film India}}
| country = {{Film India}}

16:52, 30 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

கோச்சடையான்
படிமம்:Kochadaiiyaan.jpg
இயக்கம்சௌந்தர்யா ஆர். அஸ்வின்
தயாரிப்புசுனில் லுலா
கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜீவ் மேனன்
கலையகம்ஈராஸ் இன்டர்நேசனல்
மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுமே 1, 2014 (2014-05-01)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

கோச்சடையான் என்பது சௌந்தர்யா அஸ்வின் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் கதை அமைத்து வரவிருக்கும் முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும்.ரசினிகாந்து கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. இத்திரைப்படமானது தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் தற்போது படப்பதிவிற்கு பிந்தைய பணிகள் லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் (மேற்பார்வை) ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். ரவிக்குமார் ஏற்றுள்ளார். இப்படத்திற்கு இசை அமைக்கும் பணியை ஏ. ஆர். ரகுமான் ஏற்றுள்ளார்.

பெயர் காரணம்

கி.பி. 710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் ரணதீரன். இவனது முழு பெயர் கோச்சடையான் ரணதீரன். இவனது தந்தையார் பெயர் அரிகேசரி மாறவர்மன். பட்டம் சூட்டியது : கி.பி. 710

சேரர்களையும் சோழர்களையும் விஞ்சி, மராட்டிய மாநிலம் வரை சென்று அங்கு மங்களாபுரத்தில் (அது தற்போது மங்களூர் என்றழைக்கப்படுகிறது) தனது இராச்சியத்தை நிறுவியவன் இந்த கோச்சடையன். அதன் பின்னர் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான். இவனது காலத்தில் நடந்த சம்பவங்களே ‘கோச்சடையானின்’ கதை எனக் கருதப்படுகிறது[1].

சௌந்தர்யா விளக்கம்

கோச்சடையான் என்பது பாண்டிய மன்னனின் பெயர் என்பது ஒருபுறமிருந்தாலும், படத்தை இயக்கும் சௌந்தர்யா அஸ்வின், இந்தப் பெயர் சிவபெருமானைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணாவுக்கு முந்தைய பாகம்தான் கோச்சடையான் என்றும் சௌந்தர்யா கூறியுள்ளார்[2]

கதாநாயகி தீபிகா படுகோன்

கோச்சடையான் படத்தில் முதலில் கத்ரீனா கைஃப் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தகுந்த தேதிகளை கொடுக்க முடியாததன் காரணமாக அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதே போல, ரஜினியின் தங்கை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சினேகாவும் நீக்கப்பட்டார் [3]. அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர்.

கோச்சடையான் முதல் பார்வை

படத்தின் முதல் வடிவமைப்பை இயக்குநர் சௌந்தர்யா ரஜினி மாசி 5-ம் தேதி வெளியிட்டார். இரண்டாவது வடிவமைப்பை மாசி 12-ம் தேதி வெளியிட்டார். இப்படத்தின் நிலைப்படங்கள் (stills) [4] ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோச்சடையான் ஜனவரி 2014 பொங்கல் திருநாளில் வெளியாக இருந்தது.[5] ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை.

இசை

வெளியீடு

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி அன்று நடைபெறும்.

பாடல்கள்

இப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பிற்கான பாடல்களின் பட்டியல், 2014 மார்ச் மாதம் 5ம் நாள் டுவிட்டரில் வெளியானது. [6].

Untitled

தமிழ் பதிப்பு

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "எங்கே போகுதோ வானம்..."  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:53
2. "மெதுவாகத்தான்.."  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்கம் 05:09
3. "மாற்றம் ஒன்றுதான் மாறாதது.."  ரஜினிகாந்த், ஹரிசரன், வி.உமாசங்கர்(ஜதி) 05:56
4. "மணப்பெண் சத்தியம்.."  லதா ரஜினிகாந்த் 03:58
5. "இதயம்.."  ஸ்ரீநிவாஸ், சின்மயி 04:34
6. "எங்கள் கோச்சடையான்.."  குழுவினர் 04:07
7. "மணமகனின் சத்தியம்.."  ஹரிசரண் 04:06
8. "ராணாவின் கனவு." (பின்னனி இசை)இலண்டன் பிலாஹார்மோனிக் குழுவினர் 04:01
9. "கர்ம வீரன்.."  ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர். ரிஹானா 06:46

தெலுங்கு பதிப்பு

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "சூதம் ஆகாசம் அந்தம்.."  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "மனசாயீரா.."  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்கம்  
3. "எந்தோ நிஜமே.."  ஹேமசந்திரா, மனோ  
4. "ஏடேமைனா சகா.."  லதா ரஜினிகாந்த்  
5. "ஹிரிதயம்.."  மனோ, சின்மயி  
6. "விக்ரமசிம்முதிவே.."  குழுவினர்  
7. "ஏடேமைனா சகி.."  உன்னிகிருஷ்ணன்  
8. "ராணாவின் கனவு" (பின்னனி இசை)இலண்டன் பிலாஹார்மோனிக் குழுவினர்  
9. "கர்ம வீருடு.."  ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர். ரிஹானா  

வெளியீடு

2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [8] தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

மேற்கோள்கள்

  1. "'கோச்சடையன்' அறிவிப்பு!". 2011-11-24. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.
  2. http://www.envazhi.com/?p=29828.
  3. http://entertainment.oneindia.in/tamil/news/2012/sneha-rajinikanth-kochadaiyaan-130212.html
  4. http://www.envazhi.com/rajinis-kochadayan-first-look/
  5. "கோச்சடையானுடன் என்ன தைரியத்தில் மோதுகின்றன விஜய், அஜித் படங்கள்?". TamilNews24x7. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.
  6. நாக ரத்னா. "ரஜிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படப் பாடல்களின் பட்டியல் வெளியீடு". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 5, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "கோச்சடையானுக்காக தயக்கத்துடன் பாடிய ரஜினிகாந்த்: ஏ. ஆர். ரகுமான்". NDTV. செப். 8, 2013. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  8. http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12389&id1=3#sthash.VOtp4zbE.dpuf தினகரன் பார்த்த நாள் 04.02.2014

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோச்சடையான்_(திரைப்படம்)&oldid=1639449" இலிருந்து மீள்விக்கப்பட்டது