கிருஷ்ணதேவராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Monarch
{{Infobox Monarch
|name = [[துளுவர்|துளுவர் குலம்]] கிருஷ்ணதேவராயன்
|name = [[துளுவர்|துளுவர் குலம்]] [[க்ஷத்ரிய குல யாதவர்கள் ]]கிருஷ்ணதேவராயன்
|title =[[விஜயநகரப் பேரரசு|விஜயநகர]]ப் பேரரசன்
|title =[[விஜயநகரப் பேரரசு|விஜயநகர]]ப் பேரரசன்
|image =[[Image:Vijayanagara.jpg|200px|caption]]
|image =[[Image:Vijayanagara.jpg|200px|caption]]

09:11, 25 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

துளுவர் குலம் க்ஷத்ரிய குல யாதவர்கள் கிருஷ்ணதேவராயன்
விஜயநகரப் பேரரசன்
caption
ஆட்சிஜூலை 26, 1509 - 1529
முன்னிருந்தவர்விரனரசிங்க ராயன்
அச்சயுத்தா தேவ ராயன்
அரசிசின்னம்பிகா, திருமலம்பிகா
துளுவம்ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರಾಯ
கன்னடம்ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರಾಯ
தெலுங்குశ్రీ కృష్ణదేవరాయ
அரச குலம்துளுவர் குலம்
தந்தைதுளுவ நரச நாயக்கன்
தாய்நகால தேவி
விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646

கிருஷ்ணதேவராயன் (Krishnadevaraya) விஜயநகரப் பேரரசின் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவன் ஆவான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகும். இவன், கன்னட மற்றும் தெலுங்கு மக்களிடையே பெரும் வீரனாக மதிக்கப்படுவதுடன், இந்தியாவின் பெருமைமிகு அரசர்களில் ஒருவனுமாவான். இவன், ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராம ரமணன் என்றும் அழைக்கப்பட்டவன். இவனைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் போத்துக்கீசப் பயணிகளான, டொமிங்கோ பயஸ் (Domingos Paes), பெர்னாவோ நுனிஸ் (Nuniz) ஆகியோரின் எழுத்துக்கள் மூலமாகவே கிடைத்துள்ளன. இவர் துளுவ வம்சத்தை சேர்ந்த பேரரசர் ஆவார்.

பேரரச பதவி

கிருஷ்ணதேவராயனின் தந்தையான துளுவ நரச நாயக்கன், பேரரசன் சாளுவ நரசிம்ம தேவ ராயனிடம் தளபதியாக இருந்தவன். நரசிம்ம தேவ ராயன் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அவனது மகனும் கொல்லப்பட்டான். சிறுவனாயிருந்த இன்னொரு மகனை அரசனாக்கி, பேரரசு சிதைந்துவிடாமலிருக்க அதன் நிர்வாகப் பொறுப்பைத் தன்கையில் எடுத்துக் கொண்டான் நரச நாயக்கன். ஆனால், நரச நாயக்கனுக்குப் பின் நிர்வாகப் பதவியை ஏற்றுக்கொண்ட அவனது மூத்த மகனும், கிருஷ்ணதேவராயனின் தமையனுமான வீரநரசிம்ம ராயன் சில காலத்தின் பின் தானே பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். கிருஷ்ணதேவராயன் அவனுக்கு நிர்வாகத்தில் உதவியாக இருந்தான். வீரநரசிம்ம ராயன் இறந்த பின் கிருஷ்ணதேவராயனுக்குப் பேரரச பதவி கிட்டியது. கிருஷ்ணதேவராயனின் முடிசூட்டுவிழா கிருஷ்ணனின் பிறந்தநாளில் நடைபெற்றது. திறமை வாய்ந்த முதன் மந்திரியாகிய திம்மராசன், கிருஷ்ணதேவராயனுக்குப் பேரரசின் நிர்வாகத்தில் பெரும் உதவியாக இருந்தான். கிருஷ்ணதேவராயனை ஆட்சிபீடம் ஏற்றியதில் பெரும் பங்கு திம்மராசனையே சாரும். கிருஷ்ணதேவராயன் இவனை ஒரு தந்தையின் இடத்தில் மதித்து வந்தான்.

கிருஷ்ணதேவராயனின் மிகமுந்திய கல்வெட்டு 26 ஜூலை 1509 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவன், விஜயநகரத்துக்கு அருகில் தனது தாயின் நினைவாக அவளது பெயரால், நாகலபுரம் என்னும் புறநகர்ப் பகுதியைக் கட்டினான்.

ஆளுமை

இவனைப் பற்றி எழுதப்பட்டவற்றிலிருந்து, இவன் நடுத்தர உயரம் உடையவனாக இருந்தான் என்றும், மகிழ்ச்சியான பண்புகளைக் கொண்டிருந்தான் என்றும் அறியப் படுகிறது. இவன் வெளிநாட்டு விருந்தினரை மதித்தான், சட்டத்தைப் பேணுவதில் கடுமையாக இருந்த இவன், அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலம் தனது உடற் தகுதியை உயர்ந்த நிலையில் வைத்திருந்தான். கிருஷ்ணதேவராயன் ஒரு சிறந்த நிர்வாகியாக மட்டுமன்றிச் சிறந்த தளபதியாகவும் விளங்கினான். தானே படைகளை முன்னின்று நடத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குத் தானே உதவும் பண்பும் அவனிடத்திற் காணப்பட்டது.

படையெடுப்புக்களும், வெளிநாட்டுத் தொடர்புகளும்

விஜயநகரப் படைகள் சென்ற இடமெல்லாம் வெற்றியைக் குவித்த, கிருஷ்ணதேவராயனின் ஆட்சிக்காலம், அந் பேரரசின் வரலாற்றில் பெருமைக்குரிய பகுதியாகும். சமயங்களில், இப் பேரரசன், போர்த் திட்டங்களைச் சடுதியாக மாற்றியமைப்பதன் மூலம், தோல்விகளை வெற்றிகளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக்காலத்தின் முதற் பத்தாண்டுகள் நீண்ட முற்றுகைகளும், இரத்தம் சிந்திய படை நடவடிக்கைகளும், வெற்றிகளும் கொண்டதாக இருந்தது. இவன் முக்கிய பகைவர்களாக, சாளுவ நரசிம்ம தேவ ராயன் காலத்திலிருந்தே தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டிருந்த ஒரிசாவின் கஜபதிகள், ஐந்து துண்டாகப் பிரிந்து விட்டாலும் தொடர்ந்தும் பேரரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த பஹமானி சுல்தான்கள், வளர்ந்துவரும் கடல் வல்லரசாக இருந்துகொண்டு, கடல் வணிகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போத்துக்கீசர் ஆகியோர் இருந்தனர். உம்மாத்தூர்த் தலைவர்கள், கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் என்போரும் இடையிடையே பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

தக்காணத்து வெற்றிகள்

ஆண்டு நிகழ்வுகளாக இருந்த தக்காணத்துச் சுல்தான்களின் படையெடுப்புகளும், பேரரசின் நகரங்களை அழிப்பதும், கிருஷ்ணதேவராயன் காலத்தில் நின்றுவிட்டது. 1509 ஆம் ஆண்டில், கிருஷ்ணதேவராயனின் படைகள், பீஜப்பூர் சுல்தானுடன் சண்டையில் ஈடுபட்டுச் சுல்தானைக் கடுமையாகக் காயப்படுத்தி அவனைத் தோற்கடித்தன. யூசுப் ஆதில் கான் கொல்லப்பட்டதுடன், கோல்கொண்டாவும் பேரரசுடன் இணைக்கப்பட்டது. இந்த வெற்றியையும், பஹமானி அரசுகளின் ஒற்றுமை இன்மையையும் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணதேவராயன், பிதார் (Bidar), குல்பர்கா (Gulbarga), பீஜப்பூர் (Bijapur) ஆகியவற்றையும் கைப்பற்றினான். இச் சண்டையில் பிடிபட்ட சுல்தான் மஹ்மூதைப் பின்னர் விடுவித்துவிட்டான்.

உள்ளூர்த் தலைவர்களுடன் போர்

கிருஷ்ணதேவராயன் பல உள்ளூர்த் தலைவர்களான கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் என்போரை அடக்கி, கிருஷ்ணா ஆறு வரை இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். 1512 இல் உம்மாத்தூர்த் தலைவன் கங்கராஜா, கிருஷ்ணராயனுடன் போரிட்டான். காவேரிக்கரையில் தோற்கடிக்கப்பட்ட கங்கராஜா காவிரியில் மூழ்கி மரணமானான். இப் பகுதி பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. 1516-1517 காலப்பகுதியில், கிருஷ்ணதேவராயன் கோதாவரி ஆற்றுக்கு அப்பாலும் சென்றான்.

அண்மையில் அகழப்பட்ட விஷ்ணு கோயில், ஹம்பி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணதேவராயன்&oldid=1637372" இலிருந்து மீள்விக்கப்பட்டது