கரகாட்டக்காரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37: வரிசை 37:


== திரைவிமர்சனம் ==
== திரைவிமர்சனம் ==
*"தில்லானா மோகனாம்பாள்" கதையை ஒத்திருந்த போதும், இத்திரைப்படம் கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக படைக்கப்பட்டிருந்தது.
*"[[தில்லானா மோகனாம்பாள்]]" கதையை ஒத்திருந்த போதும், இத்திரைப்படம் கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக படைக்கப்பட்டிருந்தது.


*பழம்பெரும் நடிகையான [[தேவிகா]]வின் புதல்வி [[கனகா]]விற்கு இது முதல் தமிழ்த்திரைப்படம் <ref>http://cinema.maalaimalar.com/2012/05/04182243/karakattakaran-movie-ramarajan.html</ref>.
*பழம்பெரும் நடிகையான [[தேவிகா]]வின் புதல்வி [[கனகா]]விற்கு இது முதல் தமிழ்த்திரைப்படம் <ref>http://cinema.maalaimalar.com/2012/05/04182243/karakattakaran-movie-ramarajan.html</ref>.
*நகைச்சுவை இணை நாயகர்களான [[கவுண்டமணி]]-[[செந்தில்|செந்திலின்]] நகைச்சுவைப் பயணம் இத்திரைப்படத்தினின்று புத்துயிரும் ஓட்டமும் பெற்றது.
*நகைச்சுவை இணை நாயகர்களான [[கவுண்டமணி]]-[[செந்தில்|செந்திலின்]] நகைச்சுவைப் பயணம் இத்திரைப்படத்தினின்று புத்துயிரும் ஓட்டமும் பெற்றது.


*இசைஞானி இளையராசாவின் இசையில் வந்த "மாங்குயிலே பூங்குயிலே" பெரும் வெற்றி பெற்ற பாடலாகும்.
*இசைஞானி இளையராசாவின் இசையில் வந்த "மாங்குயிலே பூங்குயிலே" பெரும் வெற்றி பெற்ற பாடலாகும்.



==கதாபாத்திரங்கள்==
==கதாபாத்திரங்கள்==

17:37, 19 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்
இயக்கம்கங்கை அமரன்[1]
தயாரிப்புகருமாரி கந்தசாமி
ஜெ. துரை
கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன் , கனகா , கவுண்டமணி , செந்தில், காந்திமதி
ஒளிப்பதிவுஅ.சபாபதி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்விஜயா மூவிஸ்
விநியோகம்விஜயா மூவிஸ்
வெளியீடுஇந்தியா 16 June 1989
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கரகாட்டக்காரன் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம். இத்திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத்தந்த திரைப்படமாகும்.

கதைக்கரு

நகைச்சுவை கலந்த காதல் கதை. இரு கரகாட்டக்கலைஞர்களின் காதலை மையப்படுத்தி, கோர்வையான திரைக்கதையில் உண்டான நகைச்சுவைத் திரைப்படம்.

கதை

அக்கிராமத்தில் காமாட்சி கரகாட்டக் கலையில் பயிற்சி பெற்ற வல்லாள். அவ்வூர் பண்ணையார் அவளின் மேல் மோகம் கொண்டு விழைய அவளால் அவமதிக்கப்படுகிறான். பகையுணர்வின் காரணமாக பண்ணையார் அந்த வருட திருவிழாவிற்கு வெளியூர் ஆட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து காமாட்சியின் ஆட்டத்திற்கு தடை விதிக்கிறான். சேந்தம்பட்டியைச் சேர்ந்த முத்தையா கரகாட்டக் குழுவினர் அவ்வூருக்கு விஜயம் செய்கின்றனர்.

காமாட்சி சிறந்த ஆட்டக்காரி எனக் கேள்வியுறும் முத்தையா, அவளைக் காணத் துடிக்கிறான். அன்றைய திருவிழாவில் நடனமாடும் முத்தையா, அதைக் காண வந்த காமாட்சியைக் கண்டு காதல் வயப்படுகிறான். சிறந்த ஆட்டத்திற்காக அவ்வூர் மூத்த ஆட்டக்காரரான கனகாவின் தந்தையால் கௌரவிக்கப்படுகிறான். மேலும் சிறப்பு விருந்திற்கும் அழைப்பைப் பெறுகிறான். விருந்து அவர்களின் காதலை இன்னும் வலுவடையச் செய்கிறது.

ஊர் திரும்பும் முத்தையா, தாயைக்காண வருகிறான். ஆனால் தன் தங்கையிடம் வம்பிழுத்த இறைச்சிக் கடைக்காரனுக்கு பாடம் புகட்ட அவள் சென்றிருப்பதை உணர்ந்து அவ்விடம் விரைகிறான். அங்கே நடைப்பெற்ற சண்டையில் அவனைத் தோற்கடித்து வீடு திரும்புகிறான். சில நாட்களுக்குப் பிறகு காமாட்சியைக் காண அவளூருக்கு செல்ல எண்ணுகிறான். அவளையும், அவளின் தந்தையையும் கண்டுரையாடுகிறான். அது மட்டுமல்லாமல் பேச்சு வழக்கால் முத்தையாவும், காமாட்சியும் தங்களிடையே போட்டியிட சம்மதிக்கின்றனர்.

போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக இறைச்சிக் கடைக்காரன் மறைந்திருந்து தாக்குகிறான், அதைத் தடுக்கச் சென்ற காமாட்சி காயமுறுகிறாள். பின்னர் நடக்கும் பல திருப்பங்களுக்குப் பின்னால் அவர்கள் இணைகிறார்கள்.

திரைவிமர்சனம்

  • "தில்லானா மோகனாம்பாள்" கதையை ஒத்திருந்த போதும், இத்திரைப்படம் கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக படைக்கப்பட்டிருந்தது.
  • இசைஞானி இளையராசாவின் இசையில் வந்த "மாங்குயிலே பூங்குயிலே" பெரும் வெற்றி பெற்ற பாடலாகும்.

கதாபாத்திரங்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா.[3]

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் ஒலி நேரம் (ம:நி)
1 இந்த மான் உந்தன்.. இளையராஜா, கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:35
2 குடகு மலைக் காற்றில்.. மனோ, கே. எஸ். சித்ரா 04:31
3 மாங்குயிலே பூங்குயிலே.. (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:37
4 மாங்குயிலே பூங்குயிலே.. (இருவர்) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:25
5 மாரியம்மா.. மாரியம்மா.. மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா 04:31
6 முந்தி முந்தி வினாயகரே.. மனோ, கே. எஸ். சித்ரா 03:20
7 நந்த வனத்தில் ஒரு.. கங்கை அமரன் 01:05
8 ஊரு விட்டு ஊரு வந்து மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் 04:34
9 பாட்டாலே புத்தி சொன்னான்... இளையராஜா இளையராஜா 04:37

சாதனை

  • இத்திரைப்படம் மதுரை திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேல் (425 நாட்கள்) ஓடி சாதனை படைத்தது[4]. இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி அடைந்தன.
  • இப்படம் சப்பான், உருசியா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டது.
  • தமிழக அரசின் சிறப்பு விருது 1989-ம் ஆண்டு கரகாட்டக்காரனுக்கு கிடைத்தது.

மேற்கோள்கள்

  1. Karakattakaran, IMDb, பார்க்கப்பட்ட நாள் 2008-11-17
  2. http://cinema.maalaimalar.com/2012/05/04182243/karakattakaran-movie-ramarajan.html
  3. "Karagattakaran Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  4. http://chennaionline.com/movies/cine-buzz/20130126030130/Lifetime-Achievement-Award-for-Ramarajan.col