மகாராஜபுரம் சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:


== ஆரம்பகால வாழ்க்கை ==
== ஆரம்பகால வாழ்க்கை ==
இசைப் பயிற்சியை தனது தந்தை [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்|மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து]]கற்றது மட்டுமல்லாமல் மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.
இசைப் பயிற்சியை தனது தந்தை [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்|மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து]] கற்றது மட்டுமல்லாமல் மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.


== தொழில் வாழ்க்கை ==
== தொழில் வாழ்க்கை ==

07:50, 31 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கர்னாடக இசை கலைஞர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992),ஒருவர் ஆவார். தமிழ் நாட்டை சேர்ந்த சிருனங்குர் என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். இவரது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரை தொடர்ந்து இவரும் இசை கலைஞர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை

இசைப் பயிற்சியை தனது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து கற்றது மட்டுமல்லாமல் மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.

தொழில் வாழ்க்கை

இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் முருகனின் மீதும், காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதும் பலப் பாடல்கள் எழுதியுள்ளார். இலங்கையின் இராமநாதன் இசை அகாதமியின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார்.

சிறப்புகள்

சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.

1992ம் வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி இவர் கார் விபத்தில் காலமானார். இவரைத் தொடர்ந்து இவரது மகன்கள் மகாராஜபுரம் எஸ். ஸ்ரீநிவாசன் மற்றும் மகாராஜபுரம் எஸ். ராமச்சந்திரன் ஆகியோரும் இவரது முதன்மை சிஷ்யர் டாக்டர் ஆர். கணேஷ் அவர்களும் இவரது இசைக் கலையை வளர்த்து வருகின்றனர். புரந்தரதாசரின் க்ருதிகளான "நாராயண நின்ன" (சுத்த தன்யாசி) மற்றும் "கோவிந்த நின்ன" ஆகியவை இவரின் மற்ற சில பிரபலமான பாடல்களாகும். இவரின் "விளையாட இது நேரமா முருகா" என்ற பாடல் எதனுடனும் ஒப்பிடமுடியாதது. இவரின் பாடல்கள் பக்தி மார்கமாகவே இருந்தன. இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை த்யாகரய நகரில் உள்ள கிரிபித் சாலை, கருணாநிதி மற்றும் ஸ்டாலினால் "மகாராஜபுரம் சந்தானம் சாலை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மிகப் பிரபலமான கிருஷ்ண கான சபாவும் முப்பாத்தம்மன் கோவிலும் இந்த சாலையில் உள்ளன.

இயற்றிய பாடல்களின் பட்டியல்

எண் பாடல் இராகம் தாளம்
1 சதா நின்... ஷண்முகபிரியா மிஸ்ரசாபு
2

விருதுகள்

•பத்ம ஸ்ரீ -- 1990

•சென்னை மியூசிக் அகாடமி அளித்த சங்கீத கலாநிதி -- 1989

•சங்கீத நாடக அகாடமி விருது -- 1984

•ரிஷிகேஷில் உள்ள யோகா வேதாந்த பல்கலைக்கழகம் அளித்த "சங்கீத சுதாகரா" விருது

•ஸ்ருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதி அவர்களால் அளிக்கப்பட "கான கலாநிதி" விருது

•காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அளிக்கப்பட "சங்கீத சங்கமித்ரா வர்ஷி" விருது

•மேலும் இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி காமகோடி பீடம், பிட்ஸ்பெர்க் வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆஸ்ரமம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஜபுரம்_சந்தானம்&oldid=1610042" இலிருந்து மீள்விக்கப்பட்டது