தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°07′N 78°08′E / 12.11°N 78.14°E / 12.11; 78.14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுருக்கம்
No edit summary
வரிசை 51: வரிசை 51:
அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை.
அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை.
இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

==இராசராச அதியமான்==

இராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட சிற்றரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் குறுநில மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பலகல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன[1].

இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது[2]. தர்மபுரிப்பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன

==விடுகாதழகிய பெருமாள்==

விடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியர் மரபைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது[1].

இவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும்[2]சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது.
விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது[3]. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.

==தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி==

<p>தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி) 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. எஸ். எஸ். ராமசாமி படையாச்சியால் வன்னியர் சாதியினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது. 1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று</p>

ராம்சாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளார் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். 1954ல்காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். கடந்த

1954ம் ஆண்டில் உழவர் உழைப்பாளர் கட்சி, உழவர் உழைப்பாளர் பொதுவுடமை கட்சியை தொடங்கிய வன்னியர்களான மாணிக் வேல், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி ஆகியோர் அமைச்சர் பதவிக்காக காங்கிரசிடம் கட்சியை அடமானம் வைத்தனர். வன்னியர் சமுதாயத்துக்கான தேவையை அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்று தந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைக்கேட்கவில்லை.

1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில்சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில்திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் குட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். 1980 மற்றும் 1984 பொதுத் தேர்தல்களில் காங்கிரசு சார்பாகதிண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமடைந்தார்.இக்கட்சியும் காமன்வீல் கட்சியும் இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளாக கருதப்படுகின்றன.

அய்யா ஆனைமுத்து பெரியாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்களில் அய்யா ஆனைமுத்து முக்கியமானவர். பெரியாரே விரும்பி திராவிடர் கழகத்தில் பொறுப்பேற்க அழைத்தபோது - நிர்வாகத்திற்குள் வர விருப்பமில்லை. நிர்வாகப் பொறுப்பிற்குள் வந்துவிட்டால் - பிறர் செய்கிற தவறுகளுக்கான பழிகள் தன்மீது விழும் எனக்கருதி பெரியாரின் அழைப்பை ஏற்க அய்யா ஆனைமுத்து மறுத்திருக்கலாம் என்பது எனது யூகம். இப்படி நல்லவர்கள் எல்லாம் வீண்பழி வருமே என அஞ்சி ஒதுங்குவதால்தான் ஆட்சியும் அதிகாரமும் பெரும்பாலான காலங்களில் தீயவர்களின் கைகளுக்குள் சிக்கி சீரழிகின்றன.
திராவிடர் கழக நிர்வாக பொறுப்பிற்குள் வர மறுத்த அய்யா ஆனைமுத்துதான். பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற தலைப்பில் பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் 3000 பக்கங்களில் தொகுத்து 3 தொகுதிகளாக - பெரியாரின் ஒப்புதலோடு - 1974ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். அடுத்தடுத்ததலை முறையினரும்; பெரியார் ஆய்வாளர்களும் பெரியார் பற்றி அறிந்து கொள்ள இது பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதோடு தன்பணி முடிந்தது என ஓய்ந்தாரா அய்யா ஆனைமுத்து என்றால் இல்லை.
மேலும் சுமார் 40 ஆண்டுகள் உழைத்து.பெரியார் பற்றிய அனைத்து செய்திகளையும் திரட்டி; பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் நூலை 9000 பக்கங்களாக விரிவாக்கி; 9 தொகுதிகளாக 2009இல் வெளியிட்டு பெரியாருக்கு பெருந்தொண்டு ஆற்றியுள்ளார்.இப்படி தன் வாழ்நாளையே பெரியாரின் புகழ்பரப்ப செலவிட்டு வரும் அய்யா ஆனைமுத்து அவர்கள்-சேப்பாக்கம் முருகப்பா தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதியில் வாடகைக்கு அலுவலகத்தை வைத்துக்கொண்டு-ஒரு பக்கிரியைப் போல கால்நடையாக அலைந்து திரிந்து உழைக்கிறார் என்பதும்.அய்யா ஆனைமுத்துவின் பெரியார் பெருந்தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு பணிகூட செய்யாத ஒருவர் -பெரியாரின் திராவிடர் கழகத்தையும்; அதற்கான பலநூறுகோடி சொத்துக்களையும் கைப்பற்றி ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகவாழ்வு வாழ்கிறார் என்பதும். எதனால் வந்தது‡?
<p>ஆனைமுத்து நிர்வாகத்திற்குள் வர மறுத்ததாலும் - வீரமணி நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டதாலும் என்பதைத்தவிர வேறு என்ன காரணம்?இதை யார்மீதும் பொறாமை காரணமாக ஒப்பிட்டுச் சொல்லவில்லை.இவ்வளவு பெரிய பெரியாரின் சொத்துக்கள் - அய்யா ஆனைமுத்துவின் நிர்வாகத்திற்குள் இருந்திருக்குமானால் - பெரியாருக்கு என்னவெல்லாம் செய்திருப்பார் அய்யா ஆனைமுத்து என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.இப்படி வாய்ப்பு தானாக வரும்போதுகூட அதை மறுத்தவர் அய்யா ஆனைமுத்து ஒருவர் மட்டுமல்ல.</P>

==வாழப்பாடியார்==

<p> தமிழ்நாட்டில் 1967இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து தோற்ற பின்னால்‡காங்கிரசு கட்சிக்கு அதிகப்படியான எம்.எல்.ஏக்களை பெற்றுத்தந்தது வாழப்பாடியார் தலைமைதான். 64 எம்.எல்.ஏக்கள்.</P>

முதல்வர் ஜெயலலிதா - ஒரு சூழ்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை அப்போது கவர்னராக இருந்த பீஷ்மநாராயண சிங்கிடம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் -பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் வாழப்பாடியாரைச் சந்தித்து நீங்கள் முதல்வராக ஆகுங்கள். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் எனப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வாழப்பாடியார் அதனை ஏற்க மறுத்துவிட்டார் , வேறு ஒரு சாதியைச் சேர்ந்த அரசியல்வாதி யாராவது ‡ தானாக வரும் இப்படிப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டிருப்பார்களா?
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விருப்பமிவில்லை.சில நாட்களே பதவியில் இருந்த சரண் சிங் பெயரும்; சில மாதங்களே பதவியில் இருந்த சந்திரசேகர் பெயரும் இந்திய பிரதமர் பட்டியலில் இருக்கத்தானே செய்கிறது.சில நாட்களே முதல்வராக இருந்த வி.என்.ஜானகி பெயரும்; பினாமிதான் அடிமைச் சேவகம்தான் என்றாலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் தமிழக முதல்வர்கள் பட்டியலில் இருக்கத்தானே செய்கிறது. வாழப்பாடியாருக்குத் தானாக வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருப்பாரானால் தமிழக முதல்வர்களில் தனிச்சிறப்பு பெற்ற முதல்வராக இருந்திருப்பார் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.இதேபோல்தான்-

==எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார்==

வன்னிய இனத்தின் எழுச்சி நாயகரான எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியாரும்.1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராச நாடாரின் வன்னிய ஒடுக்குமுறைக்குஎதிராகக் கிளர்ந்தெழுந்த ராமசாமிப படையாட்சியார்.கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் தேர்தலைச் சந்தித்து 19 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தார்.
1954 இல் ராஜாஜிக்கு எதிராக களத்தில் இறங்கிய காமராச நாடார் முதல்வராக ஆவதற்கு ராமசாமி படையாட்சியார் ஆதரவு தேவைப்பட்டது. பெரியார் மூலம் ராமசாமிப் படையாட்சியாருக்கு நெருக்கடி கொடுத்தபோது - காமராசரைப் போல பதவி மோகம் கொண்டவராக இருந்திருந்தால் எனக்கு துணை முதல்வர் பதவி கொடு; உன்னை ஆதரிக்கிறேன் என நிபந்தனை விதித்திருக்கலாம்.
வியாபாரச் சமூகத்தில் பிறந்த காமராசர் அதற்கு இணங்கி இருக்கவும் கூடும்.வன்னியர் சமூக முன்னேற்ற மோகம் கொண்டவராக ‡ ராமசாமி படையாட்சியார் ‡ இருந்த காரணத்தால் - எங்கள் சமூகப் பிள்ளைகளுக்கு கல்விக்கான அரைக் கட்டணச் சலுகைத் தரவேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை நிபந்தனையாக வைத்தார். அதை ஏற்று 39 சாதிகளை எம்.பி.சி.எனப் பட்டியலிட்டு பள்ளி மாணவர்களுக்கு அரைக் கட்டணச் சலுகைகளைத் தந்தார் காமராசர்.என்னைப் பொருத்தவரையில் இது ஒரு கோரிக்கையே இல்லாத கோரிக்கை தனக்கு கல்வி அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டு வாங்கி; இந்த அரைக்கட்டணச் சலுகை என்ன, முழுக்கட்டணச் சலுகையையே கூட ராமசாமி படையாட்சியாரே வழங்கி இருக்கலாம். இப்படிப்பட்டபதவி மோகம் இல்லாத ஏமாளித்தனமான அரசியல்வாதிகளை வேறு எந்த சமூகத்திலாவது பார்க்க முடியுமா?


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

10:03, 25 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

—  தேர்வு நிலை நகராட்சி  —
'
இருப்பிடம்:

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°07′N 78°08′E / 12.11°N 78.14°E / 12.11; 78.14
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் [3]
நகராட்சித் தலைவர் சுமதி
ஆணையர் அண்ணாதுரை
மக்கள் தொகை

அடர்த்தி

64,496 (2001)

5,536/km2 (14,338/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.65 சதுர கிலோமீட்டர்கள் (4.50 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Dharmapuri


தர்மபுரி (ஆங்கிலம்: Dharmapuri)இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை எழில் கொஞ்சும் புண்ணிய இடமாக விளங்குகிறது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் தர்மபுரி அமைந்திருப்பதால் இந்த நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தர்மபுரிக்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.தர்மபுரியைச் சுற்றி மிகப் பிரபலமான இந்து சமய கோயில்கள் உள்ளன. முக்கியமாக கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் திரு தீர்த்தகிரீஸ்ரர் கோயில் போன்ற இந்து சமய திருத்தலங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளன.

இப்போது தர்மபுரி மாவட்டம் என்பது ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி , மொரப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது. சுமார் 4500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் இருக்கிறது. 1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகஸ்ட் 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவி இங்கிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. சேலத்திலிருந்து பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது.

அதியமான் நெடுமிடல்

அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர்.

இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேரமன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் இறந்தது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.


அதியமான் நெடுமான் அஞ்சி

தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் மன்னர்களுள் ஒருவன். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து,சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.

அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.

மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது

அதியமான் பொகுட்டெழினி

அதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு குறுநில மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும்,கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.

அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை. இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரி&oldid=1606027" இலிருந்து மீள்விக்கப்பட்டது