கா. கைலாசநாதக் குருக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:


==பேராசிரியராக==
==பேராசிரியராக==
இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டபோது இவர் அதன் இந்து பண்பாட்டுத் துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப் பட்டார். மேலும் கலைத்துறையின் இணைத் தலைவராக சூன் 1976 தொடக்கம் டிசம்பர் 1978 வரை பணியாற்றினார்<ref>[http://www.jfn.ac.lk/arts/index.php/home/2012-02-28-04-04-29 Arts Faculty]</ref>. அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இராமநாதன் நுண்கலை அகாதமியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.<br />
இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றினார். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] நிறுவப்பட்டபோது இவர் அதன் இந்து பண்பாட்டுத் துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப் பட்டார். மேலும் கலைத்துறையின் இணைத் தலைவராக சூன் 1976 தொடக்கம் டிசம்பர் 1978 வரை பணியாற்றினார்<ref>[http://www.jfn.ac.lk/arts/index.php/home/2012-02-28-04-04-29 Arts Faculty]</ref>. அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இராமநாதன் நுண்கலை அகாதமியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.<br />
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரை வாழ்நாள் பேராசிரியராக நியமித்தது. யாழ் பல்கலைக் கழகத்தால் அவ்வாறு முதன்முதலாக நியமிக்கப்பட்டவர் இவரே<ref name=ourjaffna>[http://www.ourjaffna.com/பிரபலமானவர்கள்/கைலாசநாதக்-குருக்கள் கைலாசநாதக் குருக்கள்]</ref>.<br />
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரை வாழ்நாள் பேராசிரியராக நியமித்தது. யாழ் பல்கலைக் கழகத்தால் அவ்வாறு முதன்முதலாக நியமிக்கப்பட்டவர் இவரே<ref name=ourjaffna>[http://www.ourjaffna.com/பிரபலமானவர்கள்/கைலாசநாதக்-குருக்கள் கைலாசநாதக் குருக்கள்]</ref>.<br />
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் குறிஞ்சிக் குமரன் கோவில் எழுப்பப் பட்டதற்கு இவரே உந்துசக்தியாக விளங்கினார்.<ref name=sundaytimes/>
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் குறிஞ்சிக் குமரன் கோவில் எழுப்பப் பட்டதற்கு இவரே உந்துசக்தியாக விளங்கினார்.<ref name=sundaytimes/>

13:44, 17 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

கா. கைலாசநாதக் குருக்கள் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர்.

கல்வி

ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். பரமேசுவராக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1948 ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார்.[1]
ஆங்கிலம், தமிழ், இலத்தீன், பாளி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவர். செருமன், பிரெஞ்சு மொழிகள் தெரிந்தவர். [2]

பேராசிரியராக

இவர் கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது இவர் அதன் இந்து பண்பாட்டுத் துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப் பட்டார். மேலும் கலைத்துறையின் இணைத் தலைவராக சூன் 1976 தொடக்கம் டிசம்பர் 1978 வரை பணியாற்றினார்[3]. அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இராமநாதன் நுண்கலை அகாதமியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரை வாழ்நாள் பேராசிரியராக நியமித்தது. யாழ் பல்கலைக் கழகத்தால் அவ்வாறு முதன்முதலாக நியமிக்கப்பட்டவர் இவரே[4].
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் குறிஞ்சிக் குமரன் கோவில் எழுப்பப் பட்டதற்கு இவரே உந்துசக்தியாக விளங்கினார்.[1]

விருதுகள்

  • 1982 ஆம் ஆண்டு கொழும்பு கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் இவரின் கலை, இலக்கிய சேவைகளையும் சைவ மதத்திற்கு இவர் ஆற்றிய தொண்டையும் கெளரவித்து மணிவிழா எடுத்தனர்.[4]
  • 1993 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க இந்து சமய, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு வேதாகம மாமணி என்ற விருதை வழங்கியது.[4]
  • 1998 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் கெளரவ இலக்கிய கலாநிதி (D.Litt.) பட்டம் வழங்கியது.[1]

இவரது நூல்கள்

  • சம்ஸ்கிருத இலகுபோதம்
  • வடமொழி இலக்கிய வரலாறு - இலங்கை சாகித்திய அகாதமி விருது பெற்றது. [5]
  • சைவத் திருக்கோயிற் கிரியைநெறி
  • இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்

இறப்பு

ஆகத்து 8, 2000ல் ஆத்திரேலியா விக்டோரியா மாகாணத்தில் காலமானார். [2]

மேற்கோள்கள்

தளத்தில்
கா. கைலாசநாதக் குருக்கள் எழுதிய
நூல்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

Professor K. Kailasanatha Kurukkal (ஆங்கிலம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._கைலாசநாதக்_குருக்கள்&oldid=1601165" இலிருந்து மீள்விக்கப்பட்டது