"மரபணுத் திரிபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
492 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மரபணு திடீர்மாற்றம்''' (''Genetic mutation'') என்பது [[மரபணு|மரபணுத்தொடரில்]] ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும். இது '''மரபணு விகாரம்''' எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் அம்மரபணுத் தொடர் புரதமாக வெளிப்படுத்தப்படுதலைப் பாதிக்கும். இம்மாற்றங்களை ஏற்படச் செய்யும் காரணிகளை திடீர்மாற்றநச்சுகள் என அழைக்கலாம். [[புற ஊதாக் கதிர்கள்]], பலவித நச்சு வாயுக்கள் மற்றும் பலவித நச்சு வேதிகள் காரணிகளாகச் செயல்படுகின்றன. ஆயினும், திடீர்மாற்றங்கள் இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே [[பரிணாம வளர்ச்சி]]யின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது. இந்த திடீர்மாற்றங்களை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம், ஒரு நுண்ணுயிரியில் வேண்டிய நொதிகள் மட்டும் மிகுதியாக சுரக்குமாறு செய்ய இயலும். இதன் மூலம் அந்த நொதிகளின் உற்பத்தியை மிகுதிப்படுத்த இயலும். தொழிலங்களில் இம்முறை மிக வேண்டத்தக்கதாகும்.
 
[[புற்று நோய்]], [[பரிணாமம்]], [[நோயெதிர்ப்புத் தொகுதி]]யின் வளர்ச்சி போன்றவற்றில் மரபணு விகாரம் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. மரபணு விகாரங்கள் பொதுவாக விகாரத்துக்குட்பட்ட உயிரினத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. சில வேளைகளில் உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம். உதாரணமாக புகையிலையில் காணப்படும் நிக்கோட்டின், [[பென்ஸோ[a]பைரீன்]] உள்ளடங்கலான விகாரலாக்கிகள் நுரையீரலின் மேற்றோற்கலங்களில் விகாரங்களைத் தூண்டி புற்று நோயை உருவாக்கும். விகாரங்களுக்குட்பட்ட மரபணுக்களால் உருவாக்கப்படும் [[புரதம்|புரதங்களின்]] செயற்பாடு பொதுவாக உயிரினத்துக்குப் பாதகமாகவே அமையும். இப்புரதங்கள் வினைத்திறனற்ற அல்லது பாதகமான விளைவுகளைப் பல வேளைகளில் தோற்றுவிக்கும். எனவே கலங்களில் மரபணு விகாரங்களைத் திருத்தும் முறைகள் கூர்ப்படைந்துள்ளன. எனினும் சில வேளைகளில் மாத்திரம் மரபணு விகாரங்கள் உயிரினத்துக்கு சிறிதளவு அனுகூலமாகலாம். மரபணு மாற்றம் [[இயற்கைத் தேர்வு]]க்கு உட்பட்டு அனுகூலமானவை தேர்ந்தெடுக்கப்படும்.
 
==காரணங்கள்==
 
நாங்கு முறைகளில் மரபணு விகாரங்கள் நடைபெறலாம். சுயமான மரபணு மாற்றம், [[டி.என்.ஏ]]யில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள், டி.என்.ஏயைத் திருத்தும் போது ஏற்படும் வழுக்கள், விகாரத்தூண்டிகளால் தூண்டப்படும் மரபணு விகாரங்கள்.
 
[[பகுப்பு:மரபணு]]
1,645

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1597405" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி