செல்லையா இராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28: வரிசை 28:
|party = [[ஐக்கிய தேசியக் கட்சி]]
|party = [[ஐக்கிய தேசியக் கட்சி]]
|otherparty = [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]], [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]
|otherparty = [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]], [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]
|spouse =
|spouse = இராஜலட்சுமி
|partner =
|partner =
|relations =
|relations =

05:20, 11 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

செ. இராசதுரை
C. Rajadurai
இலங்கை நாடாளுமன்றம்
for மட்டக்களப்பு
பதவியில்
1956–1989
முன்னையவர்ஆர். பி. கதிராமர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூலை 1927 (1927-07-27) (அகவை 96)
சிங்களவாடி, மட்டக்களப்பு, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி
துணைவர்இராஜலட்சுமி
இனம்இலங்கைத் தமிழர்

செல்லையா இராசதுரை (Chelliah Rajadurai, பிறப்பு: 27 யூலை 1927[1]) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.

இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.[2]

அரசியலில்

இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6][7] தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8]

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1979 மார்ச் 7 இல் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.[9][10][11] பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.[12]. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.

எழுதிய நூல்கள்

  • ராசாத்தி – குறநாவல் - 1982
  • பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
  • அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
  • மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
  • இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

விருதுகள்

  • இலக்கிய கலாநிதிப் பட்டம் - மதுரைப் பல்கலைக்கழகம்
  • சொல்லின் செல்வர்

சமூகப் பணிகள்

  • இவர் அமைச்சராகப் பதவியில் இருந்த் போது சுவாமி விபுலாநந்தரைத் தேசிய வீரராக அறிவித்து அஞ்சல் தலை வெளியிட்டார்.
  • விபுலாநந்தரின் மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்து வெளியிட்டார்.

மேற்கோள்கள்

  1. "Rajadurai, Chelliah". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. Sri Kantha, Sachi. "One Hundred Tamils of the 20th Century: V.Navaratnam". Tamil Nation.
  3. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  9. Rajasingham, K. T.. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/DB16Df06.html. 
  10. Wickramasinghe, Wimal (15 யனவரி 2008). "Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka". தி ஐலண்டு. http://www.island.lk/2008/01/15/features1.html. 
  11. Jayawarden, Kishali Pinto (7 ஏப்ரல் 2002). "That conscience Bill coming again". சண்டே டைம்ஸ். http://www.sundaytimes.lk/020407/focus.html. 
  12. "TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna". தமிழ்நெட். 23 ஏப்ரல் 2012. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லையா_இராசதுரை&oldid=1596968" இலிருந்து மீள்விக்கப்பட்டது