இயங்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21: வரிசை 21:
:#சீரான இயங்கமைவு
:#சீரான இயங்கமைவு
:#சீரற்ற இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.
:#சீரற்ற இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.
சீரான இயங்கமைவு : சமகால இடைவெளியில் சமஅளவு இடப்பெயர்ச்சி தரும் இயங்கமைவு சீரான இயங்கமைவு எனப்படும். பற்சக்கர இயங்கமைவு, சங்கிலி இயங்கமைவு, வழுக்கல் இல்லாத பட்டை இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.
சீரான இயங்கமைவு :
சீரற்ற இயங்கமைவு : சமகால இடைவெளியில் வேறுபடும் இடப்பெயர்ச்சி தரும் இயங்கமைவு சீரற்ற இயங்கமைவு எனப்படும். தண்டு இயங்கமைவு, நெம்புருள் இயங்கமைவு, ஜெனிவா சக்கர இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.


=== பாகங்கள் அல்லது பாகங்களின் புள்ளிகள் இயங்கும் இட அமைப்பின் அடிப்படையில் ===
=== பாகங்கள் அல்லது பாகங்களின் புள்ளிகள் இயங்கும் இட அமைப்பின் அடிப்படையில் ===

16:55, 9 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பற்சக்கர இயங்கமைவு அதிவேக சுழற்சியை குறைவேக சுழற்சியாக மாற்றுகிறது. சிறிய பற்சக்கரம் அதிக வேகத்திலும் பெரிய பற்சக்கரம் குறைந்த வேகத்திலும் சுழல்கின்றன.

இயங்கமைவு (Mechanism) என்பது ஒரு குறிப்பிட்ட நகர்வையோ இயக்கத்தையோ மற்றொரு நகர்வாக மாற்றும் அமைப்பு ஆகும். எங்கெல்லாம் இயக்கச்செலுத்தம் அல்லது இயக்கமாற்றம் தேவைப்படுகிறதோ அங்கு இயங்கமைவு பயன்படுத்தப்படுகிறது. இயங்கமைவு இல்லாமல் எந்த இயந்திரமும் இயங்காது. பற்சக்கரம் ஒரு வகை இயங்கமைவு ஆகும். இயந்திரம் என்பது கடினமான பணிகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் செய்ய உதவும் கருவி. பணிகளைச் செய்ய ஆற்றல் தேவைப்படுகிறது. பெரும்பாலான இயந்திரங்களில் மின்னோடி வழியாக ஆற்றல் உள்ளிடப்படுகிறது. மின்னோடித்தண்டு சீரான சுழல் இயக்கம் உடையது என்பதால், அதன் வழியாக ஆற்றல் பெறும் இயந்திரத்தின் உள்ளீட்டுத்தண்டும் சீராகச் சுழல்கிறது. மின்னோடியின் மின்னாற்றல் அதன் வெளியீட்டுத்தண்டில் இயந்திர ஆற்றலாக, சுழல் இயக்கமாக மாறுகிறது. இத்தண்டு, மின்னோடி எந்த வேகத்திற்கு வடிவமைக்கப்பட்டதோ அந்த வேகத்தில் சுழலும். இயந்திரத்தின் சுழல்தண்டு, மின்னோடித்தண்டின் வேகத்திலோ வேறு வேகத்திலோ சுழலவேண்டியதாக இருக்கலாம். இந்த இயக்கச்செலுத்தம் அல்லது வேக மாற்றத்திற்கு, மின்னோடிக்கும் இயந்திரத்திற்கும் இடையில் இயங்கமைவு தேவைப்படுகிறது. இரண்டிலும் சுழல் இயக்கமே இருப்பதால், பட்டை இயங்கமைவு, சங்கிலி இயங்கமைவு, அல்லது பற்சக்கர இயங்கமைவு ஆகியவைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் பட்டை இயங்கமைவு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இயந்திரத்தில் அளவுக்கு அதிகமான சுமை அல்லது தடை எதிர்பாராமல் ஏற்படுமானால், மின்னோடிக்கும் இயந்திரத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிக்கப்படவேண்டும். பட்டை இயங்கமைவில், பட்டை நெகிழ்வுத்தன்மை உடையது என்பதால், இச்சூழ்நிலையில் அது பொருத்தப்பட்டுள்ள கப்பிகளிலிருந்து நழுவி, தொடர்பைத் துண்டித்து விடும்.

பணிக்குரிய கணித வாய்ப்பாடுகள்

ஒரு பணி (வேலை) நடைபெறவேண்டுமெனில் இயக்கம் அல்லது நகர்வு இன்றியமையாத ஒன்றாகும்.

கோட்டு இயக்கமெனில்,

வேலை = விசை × கோட்டு இடப்பெயர்ச்சி

சுழல் அல்லது கோண இயக்கமெனில்,

வேலை = முறுக்கு விசை × கோண இடப்பெயர்ச்சி

அணுக்களிலுள்ள இலத்திரன்களின் இயக்கம் அல்லது நகர்வுதான் மின்சாரமாக மாறுகிறது. காற்றிலுள்ள உயிர்வாயுவும் இரத்தமும் உடலினுள் நகர்வதால்தான் மனித உடலிலுள்ள அனைத்துப்பாகங்களும் பணிகளைச்செய்கின்றன. பணிகளின் தேவைக்கேற்ப இயக்கங்கள் மாறுகின்றன. கோட்டு இயக்கம் நேர்கோட்டு இயக்கம், வளைகோட்டு இயக்கம் என இரண்டு வகைப்படும். கோண இயக்கம் முழுச்சுழற்சி, பகுதிச்சுழற்சி என இரண்டு வகைப்படும். பகுதிச்சுழற்சியை ஊசலாட்டம் எனவும் அழைக்கலாம்.

இயக்கவியலின் உட்பிரிவுகள்

இயக்கம் அல்லது நகர்வு பற்றிய அறிவியல் படிப்பு இயக்கவியல் எனப்படும். இதன் இரண்டு உட்பிரிவுகள் நிலையியல் மற்றும் விசையியக்கவியல் ஆகியன. காலத்தால் மாறாத, நகராத அமைப்புகளைப் பற்றிய அறிவியல் நிலையியல் ஆகும். காலத்தால் மாறும், நகரும்/இடம்பெயரும் அமைப்புகளைப் பற்றிய அறிவியல் விசையியக்கவியல் ஆகும். விசையியக்கவியலை, இயங்குவியல் மற்றும் விசையியல் என இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். நிலையியல் கட்டமைப்பு பற்றியது ; இயங்குவியல் இயங்கமைவு பற்றியது ; விசையியல் இயந்திரம் பற்றியது. ஆனால், மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கட்டமைப்பில்தான் ஒன்று அல்லது பல இயங்கமைவுகளைக் கொண்ட இயந்திரம் அமைகிறது ; இயங்குகிறது.

இயங்கமைவுமுறைகள்

வெளியீட்டு வேகத்தன்மையின் அடிப்படையில்

  1. சீரான இயங்கமைவு
  2. சீரற்ற இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.

சீரான இயங்கமைவு : சமகால இடைவெளியில் சமஅளவு இடப்பெயர்ச்சி தரும் இயங்கமைவு சீரான இயங்கமைவு எனப்படும். பற்சக்கர இயங்கமைவு, சங்கிலி இயங்கமைவு, வழுக்கல் இல்லாத பட்டை இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும். சீரற்ற இயங்கமைவு : சமகால இடைவெளியில் வேறுபடும் இடப்பெயர்ச்சி தரும் இயங்கமைவு சீரற்ற இயங்கமைவு எனப்படும். தண்டு இயங்கமைவு, நெம்புருள் இயங்கமைவு, ஜெனிவா சக்கர இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.

பாகங்கள் அல்லது பாகங்களின் புள்ளிகள் இயங்கும் இட அமைப்பின் அடிப்படையில்

  1. தள இயங்கமைவு
  2. கோள இயங்கமைவு
  3. பரவெளி இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.

---

கலைச்சொற்கள்

  • பற்சக்கரம் - Gear
  • சீரான சுழல் இயக்கம் - Uniform rotation
  • பட்டை - Belt
  • சங்கிலி - Chain
  • சுமை - Load
  • தடை - Resistance
  • இயக்கவியல் - Mechanics
  • நிலையியல் - Statics
  • விசையியக்கவியல் - Dynamics
  • இயங்குவியல் - Kinematics
  • விசையியல் - Kinetics
  • கட்டமைப்பு -Structure
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்கமைவு&oldid=1596087" இலிருந்து மீள்விக்கப்பட்டது