மாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22: வரிசை 22:
மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் "ஜவ்வரிசி" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் "ஜவ்வரிசி" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.



== References ==
{{Reflist}}
{{refbegin}}
* [http://www.opsi.gov.uk/si/si1998/19980141.htm The Bread and Flour Regulations 1998], United Kingdom.
* {{Grocers}}
{{refend}
<gallery>


File:Mill,pulverisation,Tamil nadu478.jpg|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்
File:Mill,pulverisation,Tamil nadu478.jpg|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்

12:15, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

மாவு
Three different kinds of wheat and rye flour. From left to right: wheat flour Type 550, wheat flour Type 1050, rye flour Type 1150
A field of wheat prior to harvesting

மாவு என்பது தானியங்களை, அல்லது விதைகளை, அல்லது மரவள்ளி வேர்களை அரைத்த பின் கிடைக்கும் ஒரு வகைத் தூள். இது உரொட்டி, பாண், பூரி, பிட்டு, இட்டலி, இடியப்பம், அப்பம், முறுக்கு, வடை, மோதகம் ஆகிய பல உணவு வகைகளின் மூலப்பொருள் ஆகும்.

கோதுமை மாவு

கோதுமை (டிரிடிகம் இனம்) என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 2010ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 651 மில்லியன் தொன்னாகக் காணப்பட்டதோடு, சோளம் (844 மில்லியன் தொன்) மற்றும் அரிசி (672 மில்லியன் தொன்) என்பவற்றுக்கு அடுத்தத்தாக அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியமாகவும் இருந்தது.[2] 2009ல் கோதுமை இரண்டாமிடத்தில் (682 மில்லியன் தொன்) காணப்பட்டதோடு சோளம் (817 மில்லியன் தொன்) முதலிடத்திலும், அரிசி (679 மில்லியன் தொன்) மூன்றாமிடத்திலும் காணப்பட்டது. ஏனைய எந்தப் பயிர்களைக் காட்டிலும் அதிக பரப்பளவில் இது பயிரிடப்படுகிறது. உலக வாணிகத்தில் கோதுமை வாணிகம் ஏனைய அனைத்துப் பயிர் வாணிகங்களின் மொத்தத் தொகையிலும் அதிகமாகும். உலகளவில், மனித உணவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமையே விளங்குகிறது. இது மற்றைய முக்கிய பயிர்களான அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றிலும் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. சோளத்தின் அதிகளவில் விலங்குணவாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக கோதுமை அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவுப் பயிராகவும் விளங்குகிறது. மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், நகர்ப்புறச் சமுதாய வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பரந்தளவில் இலகுவாகப் பயிரிடக்கூடியதாய் இருந்தமையும், நீண்டகாலத்துக்குக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடியதாயும் இருந்ததால் இதற்குக் காரணங்களாகும். வளப்பிறையில் (Fertile Cresent) உருவான பாபிலோனிய மற்றும் அசிரியப் பேரரசுகளின் எழுச்சிக்கும் கோதுமையே காரணமாகும். கோதுமை ஒரு நிறையுணவாகும். கோதுமையை மாவாக்கிப் பாண், பிஸ்கற், குக்கிகள், கேக்குகள், காலைத் தானிய ஆகாரம், பாஸ்டா, நூடில்ஸ், கோஸ்கோஸ்போன்றன ஆக்கப்படும். மேலும், இதனைப் புளிக்கச்செய்து பியர், ஏனைய மதுபானங்கள் மற்றும் உயிரிஎரிபொருள் என்பனவும் உருவாக்கப்படும். கால்நடைகளுக்கான தீவனப் பயிராகவும் சிறியளவில் கோதுமை பயிரிடப்படுகிறது. மேலும், இதன் வைக்கோல் கூரை வேயவும் பயன்படுகிறது.இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது. இதன் உப பொருட்கள் மேற்தோலும் முளையும் ஆகும். கோதுமையின் முழுத்தானியத்தில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதம் ஆகியன செறிந்துள்ளன. எனினும் சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் பெரும்பாலும் மாப்பொருள் மாத்திரமே உண்டு.

வரலாறு

துருக்கி விளைநிலமொன்றில் விளையும் காட்டுக் கோதுமை

கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன்மகரந்தச் சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு வித்தியாசமான இனங்கள் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள், கோதுமைச் சாகுபடி முதன்முதலில் வளப்பிறை (Fertile Cresent) மற்றும் நைல் கழிமுகப் பகுதிகளில் பயிரிடப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. எனினும் அண்மைய ஆய்வுகள் இது தென்கிழக்குத்துருக்கியின் சிறு பகுதியொன்றில் முதலில் பயிரிடப்பட்டதாக் கூறுகின்றன. இது கிமு 9000த்தில் துருக்கியிலுள்ள கொபேக்லி தெபே எனுமிடத்திலிருந்து வடமேற்கே 40 மை (64 கிமீ) தொலைவிலுள்ள நெவாலி கோரி எனுமிடத்தில் பயிரிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், வாற்கோதுமை பயிரிடப்பட்ட கிமு 23,000 ஆண்டுகளிலேயே கோதுமையும் பயிரிடப்பட்டிருக்கலாமெச் சிலர் கருதுகின்றனர்

மைதா மாவு

மைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் பரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா, ஐரோப்பிய ஒன்றியம்,(பிரிட்டன் உட்பட,) நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் "ஜவ்வரிசி" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.


File:Mill,pulverisation,Tamil nadu478.jpg|தானியங்களை மாவாக்கும் இயந்திரம் File:Mill,pulverisation,Tamil nadu479.jpg|தானியங்களை மாவாக்கும் இயந்திரம் File:Mill,pulverisation,Tamil nadu480.jpg|தானியங்களை மாவாக்கும் இயந்திரம் </gallery>

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவு&oldid=1594516" இலிருந்து மீள்விக்கப்பட்டது