தம்பிலுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 7°08′N 81°51′E / 7.133°N 81.850°E / 7.133; 81.850
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32: வரிசை 32:
இன்றைய [[திருக்கோவில்]] உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] முதலாவது தேசத்துக் கோவிலான [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்]] திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.

[[உகந்தை]]யைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" <ref>ஈழத்தமிழில் "வில்" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு</ref> என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.
[[உகந்தை]]யைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" <ref> ஈழத்தமிழில் "வில்" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு </ref> என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.

கணபதி ஐயர் எனும் இக்கிராமத்து அர்ச்சகர் ஒருவர் தாய்மொழிப் புலமை வாய்ந்தவராக இருந்தாரென்றும், [[கண்டி இராச்சியம்|கண்டியை]] அவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்றும் அவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர். ஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம்.

==தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்==
==தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்==

18:08, 2 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

தம்பிலுவில்
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுதிருக்கோவில்
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

தம்பிலுவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது.

இதன் எல்லைகளாக வடக்கே அக்கரைப்பற்று, தெற்கே திருக்கோவில் மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது.

வரலாறு

படிமம்:Thambiluvil.jpg
தம்பிலுவில் நுழைவாயில்

இன்றைய திருக்கோவில் உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், மட்டக்களப்பின் முதலாவது தேசத்துக் கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.

உகந்தையைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" [1] என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.

கணபதி ஐயர் எனும் இக்கிராமத்து அர்ச்சகர் ஒருவர் தாய்மொழிப் புலமை வாய்ந்தவராக இருந்தாரென்றும், கண்டியை அவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்றும் அவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர். ஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம்.

தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்

கோயில்கள்

பாடசாலைகள்

வெளி இணைப்புகள்

  1. ஈழத்தமிழில் "வில்" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பிலுவில்&oldid=1590812" இலிருந்து மீள்விக்கப்பட்டது