இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
"== I. வரையறை == கூட்டு சுழல் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:32, 16 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

I. வரையறை

கூட்டு சுழல் மின் உற்பத்தி நிலையம் என்பது இரண்டு வெப்ப இயக்க சுழற்சிகளை(Thermo dynamic cycle) இணைத்து ஒரே நேரத்தில் மின் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆகும். பெரும்பாலும் இதில் எரிவளிச் சுழலி(Gas turbine) மற்றும் நீராவிச் சுழலி (Steam turbine) வகை உபோயோக படுத்தபடுகிறது. எரிவளிச் சுழலி(Gas turbine) இயங்கும் அதே நேரத்தில் அதிலிருந்து வரும் தேவையற்ற வெப்ப ஆற்றலின் மூலம் நீராவியை உருவாக்கி அந்த நீராவியின் மூலம் நீராவிச் சுழலி (Steam turbine) இயங்க வைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.இதனால் அதிக அளவு ஆற்றல் வீணாவது தடுக்கப்படுகிறது.

II. சுழற்சிகள்(cycles)

பெரும்பாலும் கூட்டு அல்லது இணைப்பு சுழல் மின் உற்பத்தி நிலையத்தில் பிரெய்ட்டன்(Brayton) மற்றும் ரேங்கின்(Rankine) சுழற்சி முறைகளில் இயங்கும்
    i) எரிவளிச் சுழலி (Gas turbine) – பிரெய்ட்டன்(Brayton) சுழற்சி 
   ii)	நீராவிச் சுழலி (Steam turbine) – ரேங்கின்(Rankine) சுழற்சி 

III. பாகங்கள்

    1.	எரிவளிச் சுழலி(I) (Gas turbine) என்பது ஓர் உள்ளெரிப்பு இயந்திரம். உயரழுத்தக் காற்றையும் எரிவளியையும் சேர்த்து எரிக்கும்போது உருவாகும் 

சூடான வளிமத்தால் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சுழல் எந்திரம். அது தன் பணியில் நீராவிச்சுழலியை ஒத்த ஒன்று.

    2.	காற்று அழுத்தி (Air compressor) என்பது காற்றை அழுத்தப் பயன்படும் ஒரு இயந்திரம் ஆகும். இது மின் சக்தியை இயக்க சக்தியாக மாற்றி அதன் மூலம் காற்றை அழுத்தப் பயன்படுகிறது. இது பொதுவாக இரண்டு முறைகளில் காற்றை அழுத்துகிறது. அவை 
                       i)	நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல் 
                      ii) குறை இடப்பெயர்ச்சி அழுத்தல்
   3.	மின்னியற்றி ( Electrical Generator) என்பது இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி. இது மின்தூண்டலால் இயலுமாகிறது. ஒரு காந்தப் புலத்தில் மின்கடத்திச் சுருள் ஒன்று சுழலுமானால் அந்தக் கடத்தி முனைகளில்மின்னழுத்தம் உண்டாகி, மின்னோட்டம் ஏற்படும். இதுவே மின்னியற்றியின் அடிப்படை ஆகும்.
   4.	வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி (Heat recovery steam generator) என்பது வேறு ஒரு வெப்ப கலனில் இறுந்து வரும் மீள் வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி தயாரிக்கும் இயந்திரம்.
   5.	நீராவிச்சுழலி(II) (steam turbine) என்பது உயரழுத்த நீராவியில் இருக்கும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றும் ஒரு கருவி.நீராவி எந்திரமும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் அதிகரித்த வெப்பத் திறன் காரணமாக உலகில் பெரும்பாலான நீராவி எந்திரங்களை சுழலிகள் நீக்கிவிட்டன. அதோடு நீராவி எந்திரங்களைப் போல முன்பின் நகர்ச்சியைத் தராமல், சுழலிகள் சுழலும் நகர்ச்சியைத் தருவதால், மின்னாக்கிகளை ஓட்டும் வேலைக்கு இவை பொருத்தமானதாக இருக்கின்றன.இன்றைய உலகின் பெரும்பாலான மின் உற்பத்திக்கு நீராவிச் சுழலிகள் பயன்படுகின்றன. ஒற்றை அடுக்கு என்றில்லாமல் பல அடுக்குகளில் நீராவியைப் பாவிப்பதால் சுழலிகளுக்கு வெப்ப இயக்கவியல் திறன்அதிகமாக இருக்கிறது.
  6.	நீராக்கும் கலம்(Condenser)

நீராவியை நீராக மாற்றும் இயந்திரம். நீராவி ஒரு குழாய் வழியாக செல்லும் போது அதன் அருகே மற்றொரு குழாயில் குளிர்ந்த நீரை செலுத்தும் போது , நீராவி குளிர்ந்த நீரின் குளிர்ச்சியை உறிஞ்சி நீராக மாறும்.