கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35: வரிசை 35:
==உசாத்துணை==
==உசாத்துணை==
* [[குசராத்து]] மாநில அரசின் இணையதளம், [http://www.gujaratindia.com/]
* [[குசராத்து]] மாநில அரசின் இணையதளம், [http://www.gujaratindia.com/]
* [கிர் தேசியப் பூங்கா, ஆசிய சிங்கங்களின் உறைவிடம் http://www.gujaratlion.com/]
* கிர் தேசியப் பூங்கா, ஆசிய சிங்கங்களின் உறைவிடம் [[http://www.gujaratlion.com/]
* [சோமநாதர் கோயில் இணையதளம் http://www.somnath.org/]
* சோமநாதர் கோயில் இணையதளம் [[http://www.somnath.org/]
* [([[குசராத்து]]) அரசின் சுற்றுலா இணையதளம் http://www.gujarattourism.com/showpage.aspx?contentid=217&webpartid=903]
* [[குசராத்து]] மாநில அரசின் சுற்றுலா இணையதளம் [http://www.gujarattourism.com/showpage.aspx?contentid=217&webpartid=903]


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [குசராத்தில் எழு புதிய மாவட்டங்கள் துவக்கம் [http://www.dinamalar.com/special_detail.asp?id=696403]
* குசராத்தில் எழு புதிய மாவட்டங்கள் துவக்கம் [http://www.dinamalar.com/special_detail.asp?id=696403]


* [67வது இந்திய சுதந்திர தினத்தில் குசராத்தில் 15-08-2013இல் 7 புதிய மாவட்டங்கள் உதயம் http://www.gurumediavision.com/2013/08/7_15.html]
* 67வது இந்திய சுதந்திர தினத்தில் குசராத்தில் 15-08-2013இல் 7 புதிய மாவட்டங்கள் உதயம் [http://www.gurumediavision.com/2013/08/7_15.html]


[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]
[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]

17:08, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சோமநாதர் கோயில் நுழைவாயில்

கிர்சோம்நாத் மாவட்டம் வேராவல் நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்ட தேவபூமிதுவாரகை மாவட்டம் உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஜூனாகாத் மாவட்டத்தின் கிர் தேசியப் பூங்கா மற்றும் சோம்நாத் வருவாய் கோட்டம் போன்ற சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது.

கிர்சோம்நாத் மாவட்டத்தின் நிலவியல்

கிர்சோம்நாத் மாவட்டம், குசராத்து மாநிலத்தின் மேற்கே, கத்தியவார் தீபகற்பத்தின் தென் மேற்கே, காம்பே வளைகுடா பகுதியில், அரபுக் கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரை மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கே போர்பந்தர். தெற்கே காம்பே வளைகுடா, மேற்கே அரபுக்கடல், கிழக்கே ஜூனாகாத் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

வருவாய் வட்டங்கள்

  • உனா வட்டம் (ઉના)
  • கொடினார் வட்டம் (કોડીનાર)
  • சுத்ரபாதா வட்டம்
  • வேரவல் வட்டம் (વેરાવળ)
  • தலால-கிரி வட்டம் (તાલાળા-ગીર)
  • கிர்-கதாத வட்டம்

கிர்சோம்நாத் மாவட்ட முதன்மைத் தொழில்கள்

சுற்றுலா, மீன் பிடித்தல், பெரிய மீன்பிடி படகுகள் கட்டுதல், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், கடல்சார் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், சிமெண்ட், வேதியல் பொருட்கள் மற்றும் செயற்கை நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவைகள் கிர்சோம்நாத் மாவட்டத்தின் முதன்மைத் தொழில்களாகும்.

கிர்சோம்நாத் மாவட்ட கடற்கரை

கிர்சோமநாத் மாவட்ட கடற்கரை, வணிக நோக்கில் உள்ள சிறுபகுதி தவிர இதரபகுதிகள் இன்றும் இளமையுடன் உள்ளது.

போக்குவரத்து

இரயில் இருப்புப்பாதை போக்குவரத்து

கிர்சோம்நாத் மாவட்டத்தின் தலைநகரான வேரவல் நகரம், ஒரு முதன்மையான தொடருந்து சந்திப்பு நிலையம் ஆகும். இந்நகர் பல இரயில் தொடருந்துகளால் நாட்டின் முதன்மையான பகுதிகளான அகமதாபாத், ராஜ்கோட், உஜ்ஜைன், வதோதரா, புனே, சென்னை, புதுதில்லி, போபால், மும்பை, ஜபல்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாலைப்போக்குவரத்து

கிர்சோம்நாத் மாவட்டம், குசராத்து மாநிலத்தின் இதர முதன்மையான பகுதிகளான அகமதாபாத், ராஜ்கோட், ஜூனாகாத் மாவட்டம், காந்திநகர் மற்றும் தேவபூமிதுவாரகை மாவட்டம் ஆகிய இடங்கள் சாலைப் போக்குவரத்து பேரூந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

உசாத்துணை

  • குசராத்து மாநில அரசின் இணையதளம், [1]
  • கிர் தேசியப் பூங்கா, ஆசிய சிங்கங்களின் உறைவிடம் [[2]
  • சோமநாதர் கோயில் இணையதளம் [[3]
  • குசராத்து மாநில அரசின் சுற்றுலா இணையதளம் [4]

வெளி இணைப்புகள்

  • குசராத்தில் எழு புதிய மாவட்டங்கள் துவக்கம் [5]
  • 67வது இந்திய சுதந்திர தினத்தில் குசராத்தில் 15-08-2013இல் 7 புதிய மாவட்டங்கள் உதயம் [6]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்_சோம்நாத்_மாவட்டம்&oldid=1560047" இலிருந்து மீள்விக்கப்பட்டது