தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16: வரிசை 16:
| colspan=8 align=center|'''[[மின்காந்த நிறமாலை|ஒளியின் ஒப்பீடு]]'''
| colspan=8 align=center|'''[[மின்காந்த நிறமாலை|ஒளியின் ஒப்பீடு]]'''
|-
|-
! பெயர் || அலை நீளம் || [[அதிர்வு மீடிறன்|அதிர்வு மீடிறன் (Hz)]] || [[ஒளியணுச் சக்தி|ஒளியணுச் சக்தி (eV)]] ||
! Name || Wavelength || [[Hertz#SI multiples|Frequency (Hz)]] || [[Electronvolt#Properties|Photon Energy (eV)]] ||
|-
|-
| [[Gamma ray]] || less than 0.01 nm || more than 10 EHZ || 100 keV – 300+ GeV || [[Gamma-ray astronomy|X]]
| [[காம்மா கதிர்]] || less than 0.01 nm || more than 10 EHZ || 100 keV – 300+ GeV || [[காம்மா கதிர் வானியல்|X]]
|-
|-
| [[X-Ray]] || 0.01 to 10 nm || 30 PHz – 30 EHZ || 120 eV to 120 keV || [[X-ray telescope|X]]
| [[எக்ஸ்-கதிர்]] || 0.01 to 10 nm || 30 PHz – 30 EHZ || 120 eV to 120 keV || [[எக்ஸ்-கதிர் தொலைநோக்கி|X]]
|-
|-
| [[Ultraviolet]] || 10 nm – 400 nm || 30 EHZ – 790 THz || 3 eV to 124 eV ||
| [[புற ஊதா]] || 10 nm – 400 nm || 30 EHZ – 790 THz || 3 eV to 124 eV ||
|-
|-
| [[Visible light|Visible]] || 390 nm – 750 nm || 790 THz – 405 THz || 1.7 eV – 3.3 eV || [[Visible spectrum telescopes|X]]
| [[புலனாகும் ஒளி|பார்க்கக் கூடியது]] || 390 nm – 750 nm || 790 THz – 405 THz || 1.7 eV – 3.3 eV || [[புலனாகும் நிறமாலை தொலைநோக்கி|X]]
|-
|-
| [[Infrared]] || 750 nm – 1 mm || 405 THz – 300 GHz || 1.24 [[milli|me]]V – 1.7 eV || [[Infrared telescope|X]]
| [[அகச்சிவப்புக் கதிர்]] || 750 nm – 1 mm || 405 THz – 300 GHz || 1.24 [[milli|me]]V – 1.7 eV || [[அகச்சிவப்புக் கதிர் தொலைநோக்கி|X]]
|-
|-
| [[Microwave]] || 1 mm – 1 meter || 300 GHz – 300 MHz ||1.24 meV – 1.24 [[Micro-|µe]]V
| [[நுண்ணலை]] || 1 mm – 1 meter || 300 GHz – 300 MHz ||1.24 meV – 1.24 [[Micro-|µe]]V
|-
|-
| [[Radio]] ||1 mm – km || [[Extremely high frequency|300 GHz]] – [[Extremely low frequency|3 Hz]] ||1.24 meV – 12.4 [[Femto-|fe]]V || [[Radio telescope|X]]
| [[ரேடியோ]] ||1 mm – km || [[மிக அதிகமான அதிர்வு மீடிறன்|300 GHz]] – [[மிகக் குறைந்த அதிர்வு மீடிறன்|3 Hz]] ||1.24 meV – 12.4 [[Femto-|fe]]V || [[ரேடியோ தொலைநோக்கி|X]]
|-
|-
|}
|}

11:51, 27 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

The 100 inch (2.5 m) Hooker reflecting telescope at Mount Wilson Observatory near Los Angeles, California.

தொலைநோக்கி தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாக பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் வில்லையொன்றை விபரிக்கும் முதல் ஒளியியல் ஆய்வு, ஈராக்கியரான இபின் அல்-ஹேதம் என்பவரால் எழுதப்பட்ட ஒளியியல் நூல் என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது விபரங்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், ஒளிமுறிவு, பரவளைவு ஆடிகள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் அறிவியல் புரட்சிக்கு உதவின.

கலீலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார். கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.

தொடக்ககாலத் தொலை நோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார். தொலைநோக்கி என்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, மின்காந்த நிறமாலையின் பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது.

தொலைநோக்கியின் வகைகள்

நண்டு நெபுலா ஆறு வகை தொலைநோக்கிகளின் பார்வையில்

தொலைநோக்கி என்னும் பெயர் பல வகையான கருவிகளையும் குறிக்கப் பயன்படுகின்றது. இவை அனைத்தும், ஏதோ ஒரு வகையில் ஆய்வு செய்வதற்கு ஏற்றவாறு மின்காந்தக் கதிர்களை உள்வாங்கிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் மிகவும் பொதுவான வகை ஒளியியல் தொலைநோக்கி ஆகும். இதுவும், பிற வகைகளும் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.

ஒளியின் ஒப்பீடு
பெயர் அலை நீளம் அதிர்வு மீடிறன் (Hz) ஒளியணுச் சக்தி (eV)
காம்மா கதிர் less than 0.01 nm more than 10 EHZ 100 keV – 300+ GeV X
எக்ஸ்-கதிர் 0.01 to 10 nm 30 PHz – 30 EHZ 120 eV to 120 keV X
புற ஊதா 10 nm – 400 nm 30 EHZ – 790 THz 3 eV to 124 eV
பார்க்கக் கூடியது 390 nm – 750 nm 790 THz – 405 THz 1.7 eV – 3.3 eV X
அகச்சிவப்புக் கதிர் 750 nm – 1 mm 405 THz – 300 GHz 1.24 meV – 1.7 eV X
நுண்ணலை 1 mm – 1 meter 300 GHz – 300 MHz 1.24 meV – 1.24 µeV
ரேடியோ 1 mm – km 300 GHz3 Hz 1.24 meV – 12.4 feV X

ஒளியியல் தொலைநோக்கி

50 cm refracting telescope at Nice Observatory.

ஒளியியல் தொலைநோக்கி பெரும்பாலும் கட்புலனாகும் மின்காந்த அலைகளைப் பெற்றுக் குவியச் செய்வதன் மூலம் தொலைவிலிருக்கும் பொருட்களின் தெளிவான விம்பத்தை உருவக்குகிறது. இவ்வகைத் தொலைநோக்கிகள், தொலைவில் உள்ள பொருட்களின் தோற்றக் கோணத்தைக் கூட்டுவதுடன், அவற்றின் ஒளிர்வையும் கூட்டுகிறது. ஒளியியல் தொலைநோக்கிகளின் முக்கிய கூறுகள் பெரும்பாலும் கண்ணாடியால் செய்யப்படும் வில்லைகளும், ஆடிகளும் ஆகும். இவை ஒளியைக் குவித்து உருவாக்கும் விம்பங்களைக் கண்ணால் நேரடியாகப் பார்க்கலாம், அல்லது ஒளிப்படமாகப் பிடித்தோ, தகவல்களைக் கணினிகளுக்கு அனுப்பியோ ஆய்வு செய்யலாம். ஒளியியல் தொலைநோக்கிகள் வானியல் துறையில் பெருமளவு பயன்படுவது மட்டுமன்றி, வானியல் அல்லாத பிற துறைகளில் தேவைப்படும் கருவிகளிலும் பயன்படுகின்றது. ஒளியியல் தொலைநோக்கிகள் மூன்றுவகையாக உள்ளன.

  1. முறிவுவகைத் தொலைநோக்கி: இது வில்லைகள் மூலம் விம்பத்தை உருவாக்குகிறது.
  2. தெறிப்புவகைத் தொலைநோக்கி: இது ஆடிகளைப் பயன்படுத்தி விம்பம் உண்டாக்குகிறது.
  3. கலப்புத் தொலைநோக்கி: இது ஆடியுடன், வில்லைகளையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றது.

வானொலித் தொலைநோக்கி

வானொலித் தொலைநோக்கி என்பது, பரவளைவு வடிவிலான திசைசார் வானொலி அலைவாங்கி ஆகும்.


எக்ஸ்-கதிர் மற்றும் காம்மா கதிர்த் தொலைநோக்கி

டெலஸ்கோப்பின் வகைகள்

  • ஒளியியல் டெலஸ்கோப்
  • பெறிய ஒளி பிரதிபலிப்பு தொலைநோக்கி
  • ஒளிவிலக்கு தொலைநோக்கிகள்
  • ரேடியோ தொலைநோக்கிகள்
  • சூரிய தொலைநோக்கிகள்
  • விண்வெளி தொலைநோக்கிகள்

நிறமாலை மூலம்

மின்காந்த நிறமாலை மூலம் தொழிற்படும் தொலைநோக்கிகள்:

பெயர் தொலைநோக்கி வானியல் விஞ்ஞானம் அலை நீளம்
ரேடியோ ரேடியோ தொலைநோக்கிகள் ரேடியோ வானியல்
(ரேடர் வானியல்)
more than 1 mm
உப மில்லிமீற்றர் உப மில்லிமீற்றர் தொலைநோக்கிகள் உப மில்லிமீற்றர் வானியல் 0.1 mm – 1 mm
தூர அகச்சிவப்புக் கதிர் தூர-அகச்சிவப்புக் கதிர் வானியல் 30 µm – 450 µm
அகச்சிவப்புக் கதிர் அகச்சிவப்புக் கதிர் தொலைநோக்கிகள் அகச்சிவப்புக் கதிர் வானியல் 700 nm – 1 mm
பார்க்கக் கூடியது கட்புலனாகும் நிறமாலை தொலைநோக்கிகள் புலப்படும் ஒளி வானியல் 400 nm – 700 nm
புற ஊதாக்கதிர் புற ஊதாக்கதிர் தொலைநோக்கிகள்* புற ஊதாக்கதிர் வானியல் 10 nm – 400 nm
எக்ஸ்-கதிர் எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகள் எக்ஸ்-கதிர் வானியல் 0.01 nm – 10 nm
காம்மா கதிர் காம்மா கதிர்த் தொலைநோக்கி காம்மா கதிர் வானியல் less than 0.01 nm

மேலும் படிக்க

  • Contemporary Astronomy – Second Edition, Jay M. Pasachoff, Saunders Colleges Publishing – 1981, ISBN 0-03-057861-2
  • Elliott, Robert S. (1966), Electromagnetics, McGraw-Hill
  • Rashed, Roshdi; Morelon, Régis (1996), Encyclopedia of the History of Arabic Science, vol. 1 & 3, Routledge, ISBN 0-415-12410-7
  • Wade, Nicholas J.; Finger, Stanley (2001), "The eye as an optical instrument: from camera obscura to Helmholtz's perspective", Perception, 30 (10): 1157–1177, doi:10.1068/p3210, PMID 11721819
  • Sabra, A. I. & Hogendijk, J. P. (2003), The Enterprise of Science in Islam: New Perspectives, MIT Press, pp. 85–118, ISBN 0-262-19482-1

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைநோக்கி&oldid=1558702" இலிருந்து மீள்விக்கப்பட்டது