நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உடற்கூற்றியல்: *திருத்தம்*
வரிசை 16: வரிசை 16:


===முண்ணான் நரம்புகள்===
===முண்ணான் நரம்புகள்===
இவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
இவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் [[புற நரம்பு மண்டலம்|புற நரம்புத் தொகுதி]]யைச் சார்ந்ததாக இருக்கும்.

22:22, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன

நரம்பணுக்களின் வெளிநீட்டமாக இருக்கும் நரம்பிழைகள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக புற நரம்பு மண்டலத்தில் இருக்கையில் அவை நரம்புகள் எனப்படும். இந்த நரம்புகளே மின் வேதி கணத்தாக்கங்களை உடலின் பல பாகங்களுக்கும் கடத்துகின்றன.

உடற்கூற்றியல்

நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

உட்காவும் நரம்புகள் (Afferent nerves)

இவை உணர்வு நரம்புகள் (Sensory nerves) அல்லது வாங்கி நரம்புகள் (Receptor nerves) எனவும் அழைக்கப்படும். இவையே உணர்வு உறுப்புக்களில் இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான தோலில் இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.

வெளிக்காவும் நரம்புகள் (Efferent nerves)

இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.

கலப்பு நரம்புகள் (Mixed nerves)

இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும். ஒரே கட்டாகக் காணப்படும் இவ்வகை நரம்புகள் உணர்வுத் தகவல்களை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும் அதேவேளை, மைய நரம்புத் தொகுதியிலிருந்து செயல்வினைகளுக்கான தகவல்களை செயற்படு உறுப்புக்களுக்குக் கடத்தும்.

நரம்புகள் அவை மைய நரம்புத் தொகுதியில் இணைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

முண்ணான் நரம்புகள்

இவை முள்ளந்தண்டு நிரலூடாக, முண்ணாணுடன் இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் புற நரம்புத் தொகுதியைச் சார்ந்ததாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்பு&oldid=1542774" இலிருந்து மீள்விக்கப்பட்டது