இரண்டாம் ஜெய் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7: வரிசை 7:
பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஜெய் சிங்கிங்கைத் தனது தக்காண போர்களில் பணிபுரியுமாறு அவுரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அவ்வாணைக்குப் பதிலளிப்பதில் ஜெய் சிங் ஓராண்டு காலம் தாழ்ந்துவிட்டான். இதற்கான காரணங்களில் ஒன்று தனது ''மன்சப்''பிற்கு (பதவிக்கு) மீறிய அளவில் ஒரு பெரிய படையை உருவாக்குமாறு ஜெய்சிங் ஆணையிடப்பட்டிருந்தது. மேலும், 1701 மார்ச்சு மாதத்தில் சியோப்பூரின் அரசனான ராஜா உத்தம் ராம் காவரின் மருமான் உதித் சிங்கின் மகளைத் திருமணம் செய்துகொள்வதைப் பற்றியும் ஜெய் சிங் முடிவுசெய்ய வேண்டியிருந்தது. ஜெய் சிங் ஆகத்து 3, 1701 அன்று புர்ஹான்பூரை அடைந்தான் ஆனால் கனத்த மழை காரணமாய் அவனால் மேற்கொண்டு முன்னேற இயலவில்லை. செப்டம்பர் 13, 1701 அன்று அவனது பதவியும் ஊதியமும் (500 அளவு) குறைக்கப்பட்டன. கெல்னா முற்றுகையின் பொழுது (1702) இவன் காட்டிய போர்த்திறத்திற்குப் பரிசாய் இவனது முந்தைய பதவி மீண்டும் வழங்கப்பட்டு மேலும் ”சவாய்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அவுரங்கசீப்பின் பேரன் பிதார் பக்கத் சவாய் ஜெய் சிங்கை மால்வா மாகாணத்தின் ஆளுனராக நியமித்தபொழுது (1704) அவுரங்கசீப் மிகுந்த சினத்துடன் அதனை ''ஜெய்சு நிஸ்டு'' (செல்லாதது அல்லது இசுலாத்திற்கு எதிரானது) என்று ரத்து செய்தான்.

==சமூகம் கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==

<references/>
<references/>

07:07, 3 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஜெய்ப்பூரின் மன்னன் இரண்டாம் ஜெய் சிங்கின் ஓவியம்

மகாராஜா சவாய் ஜெய் சிங் (நவம்பர் 3, 1688 முதல் செப்டம்பர் 21, 1743 வரை) ஆம்பர் (தற்பொழுது ஜெய்ப்பூர்) அரசை ஆண்ட மன்னன் ஆவான். இவன் கச்வாகர்களின் தலைநகரான ஆம்பரில் பிறந்தான். இவனது தந்தையான மகாராஜா பிஷான் சிங்கின் மரணத்திற்குப் பின் (31 டிசம்பர் 1699), தனது 11வது அகவையில் இவன் ஆம்பரின் அரசனானான். முகலாய பேரரசன் முகம்மது ஷா ஏபிரல் 21, 1721 அன்று இவனுக்கு சராமத்-இ-ராஜாஹா-இ-ஹிந்த் என்ற பட்டத்தையும் மேலும் ஜூன் 2, 1723 அன்று ராஜ் ராஜேஸ்வர், ஸ்ரீ ராஜாதிராஜ் மற்றும் மகாராஜா சவாய் என்ற பட்டங்களையும் சூட்டினார். “சவாய்” என்றால் ஒன்றேகால் என்று பொருள், அதாவது பிற அரசர்களைவிடவும் இவன் (அதிகாரத்தில்) உயர்ந்தவன் என்ற பொருள்பட இப்பட்டம் வழங்கப்பட்டது. இன்றுவரையும் இவனது வழித்தோன்றல்களுக்கும் இப்பட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வரசன் கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.

பதவியேற்கையில் நிலவிய சூழல்

தனது முன்னோர் ஆண்ட ஆம்பர் அரியணையில் சவாய் ஜெய் சிங் அமர்ந்தபொழுது அவ்வரசாங்கம் கீழ்நிலையில் இருந்தது, முந்தைய 32 ஆண்டுகளின் கீழ்முக ஆட்சியின் பயனாய் 1000 குதிரைவீரர்களைப் பராமரிக்கத் தேவையான செல்வம் கூட ஏறக்குறையவே இருந்தது, மேலும் அப்பொழுது முகலாய பேரரசன் அவுரங்கசீப்பின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முகலாயர்களின் அதிகார மையங்களான தில்லிக்கும் ஆக்ராவிற்கும் அருகில் இருந்த காரணத்தால், ஜெய்ப்பூர் மன்னர்கள் முகலாயர்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாதவர்களாகவே இருந்தனர். தில்லியின் சுல்தான்களோடு பல ஆண்டுகளாய் கூட்டாளிகளாய் இருந்தும் கூட, அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், முதலாம் ராம் சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த அனைத்து கச்வாகா அரசர்களும் தங்களுக்கு உரிய பட்டங்களும் ஊதியங்களும் தரப்படாமலே இருத்தப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர்களான முதலாம் ஜெய் சிங்கும் குன்வர் கிஷன் சிங்கும் தக்காணப் படையெடுப்புகளின் பொழுது மருமமான முறையில் இறந்து போயிருந்தனர்.

பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஜெய் சிங்கிங்கைத் தனது தக்காண போர்களில் பணிபுரியுமாறு அவுரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அவ்வாணைக்குப் பதிலளிப்பதில் ஜெய் சிங் ஓராண்டு காலம் தாழ்ந்துவிட்டான். இதற்கான காரணங்களில் ஒன்று தனது மன்சப்பிற்கு (பதவிக்கு) மீறிய அளவில் ஒரு பெரிய படையை உருவாக்குமாறு ஜெய்சிங் ஆணையிடப்பட்டிருந்தது. மேலும், 1701 மார்ச்சு மாதத்தில் சியோப்பூரின் அரசனான ராஜா உத்தம் ராம் காவரின் மருமான் உதித் சிங்கின் மகளைத் திருமணம் செய்துகொள்வதைப் பற்றியும் ஜெய் சிங் முடிவுசெய்ய வேண்டியிருந்தது. ஜெய் சிங் ஆகத்து 3, 1701 அன்று புர்ஹான்பூரை அடைந்தான் ஆனால் கனத்த மழை காரணமாய் அவனால் மேற்கொண்டு முன்னேற இயலவில்லை. செப்டம்பர் 13, 1701 அன்று அவனது பதவியும் ஊதியமும் (500 அளவு) குறைக்கப்பட்டன. கெல்னா முற்றுகையின் பொழுது (1702) இவன் காட்டிய போர்த்திறத்திற்குப் பரிசாய் இவனது முந்தைய பதவி மீண்டும் வழங்கப்பட்டு மேலும் ”சவாய்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அவுரங்கசீப்பின் பேரன் பிதார் பக்கத் சவாய் ஜெய் சிங்கை மால்வா மாகாணத்தின் ஆளுனராக நியமித்தபொழுது (1704) அவுரங்கசீப் மிகுந்த சினத்துடன் அதனை ஜெய்சு நிஸ்டு (செல்லாதது அல்லது இசுலாத்திற்கு எதிரானது) என்று ரத்து செய்தான்.

சமூகம் கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகள்

அடிக்குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஜெய்_சிங்&oldid=1539768" இலிருந்து மீள்விக்கப்பட்டது