"கோவில் மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[இரண்டாம் கோவில் (யூதம்)|இரண்டாம் கோவில்]] காலத்தில் இவ்விடம் பொருளாதார நிலையமாக செயற்பட்டது. யூத பாரம்பரியத்தின்படி, [[சாலமோனின் கோவில்|முதல் கோவில்]] சாலமோனால் கி.மு. 957 இல் கட்டப்பட்டு, [[பபிலோனியா|பாபிலோனியரால்]] கி.மு. 586 இல் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் கி.மு. 516 இல் செரூபாலினால் கட்டப்பட்டு, [[உரோமப் பேரரசு|உரோம பேரரசால்]] கி.பி. 70 இல் அழிக்கப்பட்டது. யூத பாரம்பரியம் இங்கு மூன்றாவதும் இறுதியுமான கோவில் கட்டப்படுமென நம்புகிறது. யூதர்களுக்கு இந்த இடம் மிக புனிதமும், அவர்கள் செபம் செய்யும்போது இப்பக்கத்தை நோக்கியே செபம் செய்வர். சில யூதர்கள் இந்த இடத்தில் நடக்க மாட்டர்கள். மகா பரிசுத்த இடத்தில் தற்செயலாக நுழைவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை. யூத போதர்களின் சட்டப்படி, இவ்விடத்தில் கடவுளின் தெய்வீக பிரசன்னம் தற்போதும் உள்ளதென்கின்றனர்.<ref>[[Maimonides]], [[Mishneh Torah]], Avoda (Divine Service): The laws of the Temple in Jerusalem, chapter 14, rule 16</ref>
 
இசுலாத்தில் மூன்றாவது புனித இடமாக இந்த இடம் [[சுன்னிசன்னி இஸ்லாம்|சுன்னிசன்னி இசுலாமியரால்]] நோக்கப்படுகிறது. உயர் புகலிடமாகவும், [[முகம்மது நபி|முகம்மது]] சொர்க்கத்திற்கு சென்ற இடமாகவும் இவ்விடம் கருதப்படுகிறது. கி.பி 637 இல் இசுலாமியர் எருசலேமை வெற்றி கொண்டதும் உமையா கலீபா [[அல் அக்சா பள்ளிவாசல்]] மற்றும் [[பாறைக் குவிமாடம்]] என்பவற்றை கட்ட உத்தரவிட்டார். பாறைக் குவிமாடம் கி.பி. 692 இல் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் உலகத்திலுள்ள பழைய இசுலாமிய கட்டிடக் கலையாக காஃபாவிற்கு அடுத்ததாகத் திகழ்கிறது. அல் அக்சா பள்ளிவாசலானது பாறையின் தெற்குப்பக்கத்தில் [[மக்கா]]வை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. பாறைக் குவிமாடம் மத்திய பகுதியில் யூத ஆலயம் கட்டப்படாதவாறு உள்ளது.<ref name=Faizer>{{cite web |title=The Shape of the Holy: Early Islamic Jerusalem |author=Rizwi Faizer |publisher=Rizwi's Bibliography for Medieval Islam |year=1998 |url=http://us.geocities.com/rfaizer/reviews/book9.html|archiveurl=http://web.archive.org/web/20020210164811/http://us.geocities.com/rfaizer/reviews/book9.html|archivedate=2002-02-10}}</ref>
 
யூதம் மற்றும் இசுலாமிய உரிமை கோரலில், இந்த இடம் உலகிலுள்ள அதி போட்டியான சமய இடமாகக் காணப்படுகிறது. [[சிலுவைப் போர்]] காலத்தில், எருசலேம் இசுலாமிய சமூகம் இடையூ இன்றி இப் பகுதியை பாரமரித்தனர்.<ref name=Archnet>[http://archnet.org/library/sites/one-site.jsp?site_id=8180 Haram al-Sharif], ArchNet</ref> 1967 இலிருந்து [[இசுரேல்]] கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்பகுதி மீது இசுரேலும் பாலஸ்தீன அதிகாரமும் தத்தமக்கே இப்பகுதியில் அதிகாரம் உள்ளதென்கின்றனர். [[அரபு-இசுரேல் முரண்பாடு|அரபு-இசுரேல் முரண்பாட்டில்]] இதுவே மிக முக்கிய காரணியும் ஆகும்.<ref>[http://www.voanews.com/english/2009-10-25-voa6.cfm Israeli Police Storm Disputed Jerusalem Holy Site]</ref> இசுரேலிய அரசு இப்பகுதியில் இசுலாமியர் அல்லாதோர் செபிப்பதை தடை செய்துள்ளது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538274" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி