1,069
தொகுப்புகள்
சூழ்வெளியில் இருக்கிற காற்றை உட்செலுத்தினால் காற்று அமுக்கியில் அதன் அழுத்தம் அதிகரிக்கும். இந்த உயரழுத்தக் காற்றை எரிப்பு அறைக்குள் செலுத்தி, அங்கே [[இயற்கை எரிவளி]] போன்ற எரிபொருளையும் கலந்து எரிக்கும்போது அதன் விளைவாக உயரழுத்த எரிப்பு வளிமங்கள் உருவாகும். அந்த எரிப்பு வளிமங்களைச் சுழலியினுள் செலுத்தி, அதன் தகடுகளால் வழிப்படுத்தினால் சுழலி சுற்றத் தொடங்கும். அவ்வாறு வெப்ப ஆற்றலை ஒரு [[வேலை]] செய்யப் பயன்படுத்திச் சுழல் ஆற்றலாய் மாற்றியபின் அந்தச் சுழல் ஆற்றலைப் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டாக, விமானங்கள், இரயில், கப்பல் முதலியனவற்றை இயக்கவும், ஒரு [[மின்னாக்கி]]யைப் (electrical generator) பயன்படுத்தி [[மின்னாற்றல்]] உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
== இயங்குமுறை ==
எரிவழிச் சுழலியின் எளிய வரைபடத்தைப் பார்க்கவும்.
# சூழ் வெப்ப நிலையில் இருக்கும் காற்று, அமுக்கியின் உள்ளே செலுத்தப்படும். அமுக்கியில் காற்று அதிக அழுத்தத்திற்கு அமுக்கப் படுகிறது. வேறு வெப்பம் ஊட்டவில்லை என்றாலும் இந்த அமுக்கத்தின் காரணமாகக் காற்றின் வெப்ப நிலை சற்று அதிகரிக்கிறது.
|