"எரிவளிச் சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
204 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
== வெப்ப இயக்கவியல் ==
எரிவழிச் சுழலியின் எளிய வரைபடத்தைப் பார்க்கவும்.
# சூழ் வெப்ப நிலையில் இருக்கும் காற்று, அமுக்கியின் உள்ளே செலுத்தப்படும். அமுக்கியில் வெப்பமூட்டுவதில்லை என்றாலும், காற்று அதிக அழுத்தத்திற்கு அமுக்கப் படுகிறது. இந்த அமுக்கத்தின் காரணமாக, வேறு வெப்பம் ஊட்டவில்லை என்றாலும் இந்த அமுக்கத்தின் காரணமாகக் காற்றின் வெப்ப நிலையானதுநிலை சற்று அதிகரிக்கிறது.
# பிறகு, "2" என்று குறிக்கப் பட்டுள்ள இடத்தில் உயரழுத்தக் காற்று எரிப்பகத்தினுள் செலுத்தப் படுகிறது. இதே இடத்தில் [[இயற்கை எரிவளி]] போன்ற எரிபொருளும் உட்செலுத்தப் படும். ஒரே அழுத்தநிலையில் காற்றும் எரிவளியும் சேர்ந்து எரியும். இதனால் உயரழுத்தத்தில் எரிப்பு வளிமங்கள் உருவாகும்.
# இவ்வாறு உருவான எரிப்பு வளிமங்கள் எரிப்பகத்தில் இருந்து வெளியேறி "3" என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் சுழலியின் வழியாகப் பாயும். இங்கே எரிப்பு வளிமங்களின் வெப்ப ஆற்றலானது ஒரு வேலையாக மாற்றப் படுகிறது. இவ்வேலையின் ஒரு பகுதி காற்று அமுக்கியை இயக்கப் பயன்படுத்தப் படுகிறது. மீதி வேலையை ஒரு மின்னாக்கி கொண்டு மின்னாற்றலாக வடிக்கலாம். பொதுவாக, சுழலியில் ஆக்கப்படும் வேலையில் பாதிக்கும் மேலானது காற்று அமுக்கியை இயக்கச் செலவாகிவிடும்.
 
# எரிப்பு வளி அல்லது கழிவு வளியானது சுழலியின் வழியாகப் பாய்ந்து, பிறகு ஒரு வெளிப்போக்கியின் (4) வழியாக வெளியேற்றப் படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1512570" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி