மகா சிவராத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18: வரிசை 18:

* சிவரத்திரி தினத்தின் முதல் நாளில் ஒருவேளை உணவு உண்ணுதல் வேண்டும்.
* சிவரத்திரி தினத்தின் முதல் நாளில் ஒருவேளை உணவு உண்ணுதல் வேண்டும்.

* சிவரத்திரி தினத்தில் [[இந்து சமய விரதங்கள்|உபவாசம்]] இருந்து இரவு நான்கு சாமமும் நித்திரையின்றி சிவபூசை செய்தல் வேண்டும்.
* சிவரத்திரி தினத்தில் [[இந்து சமய விரதங்கள்|உபவாசம்]] இருந்து இரவு நான்கு சாமமும் நித்திரையின்றி சிவபூசை செய்தல் வேண்டும்.

* சிவபூசை செய்ய இயலாதவர் நித்திரையின்றி, நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்தல் வேண்டும்.[[திருநீறு]] தரித்து, [[உருத்திராட்சம்|உருத்திராக்கம்]] அணிந்து ஸ்ரீ பஞ்சாட்சரம் செபித்தல், ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்தல், சிவராத்திரி புராணம், சிவபுராணம், என்பவற்றையும் [[சிவன்|சிவபெருமானைப்]] பற்றிக் கூறும் கதைகளையும் படித்தல், கேட்டல் என்பவற்றில் ஈடுபட வேண்டும்.

* இலிங்கோற்பவ காலத்தில் சிவனை விசேடமாக வழிபடுதல் வேண்டும். இலிங்கோற்பவ காலம் என்பது [[திருமால்]], [[பிரம்மா|பிரம்மன்]] அறியாதபடி சோதியாக நின்ற பரம்பொருள், குளிர்ந்து [[இலிங்கம்|இலிங்க]] வடிவில் காட்சி தந்த காலத்தைக் குறிப்பது. சிவராத்திரி இரவில் பதினான்கு [[நாழிகை|நாழிகைக்கு]] மேல் (11.30 - 12.15) இரு [[நாழிகை]] (1 [[நாழிகை]]=24 நிமிடங்கள்) பரம்பொருள் [[இலிங்கம்|இலிங்கத்தில்]] தோன்றியருளினார். அதனால், அக்காலத்தில் சிவபூசை செய்து வழிபடுதல் வேண்டும்.

* சிவராத்திரியின் மறுநாள் அதிகாலையில் நீராடி, பாறணை செய்தலும் சிவனடியார்களுக்கு மாகேசுர பூசை செய்தலும் வேண்டும்.
* சிவராத்திரியின் மறுநாள் அதிகாலையில் நீராடி, பாறணை செய்தலும் சிவனடியார்களுக்கு மாகேசுர பூசை செய்தலும் வேண்டும்.

* சிவராத்திரி விரதத்தைத் தொடர்ந்து பன்னிரண்டு அல்லது இருபத்தினான்கு வருடங்கள் அனுட்டித்தல் வேண்டும். சிவராத்திரி விரத நாளில் [[இந்து சமய விரதங்கள்|உபவாசம்]] உத்தமம்; [[நீர்|நீரேனும்]] [[பால் (பானம்)|பாலேனும்]] அருந்துதல் மத்திமம்; [[பழம்]] உண்பது அதமம். சிவராத்திரி தினத்தில் நான்கு சாமமும் நித்திரை ஒழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையாயினும் நித்திரை ஒழித்தல் வேண்டும்.

15:30, 7 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

சிவராத்திரி விரத வகைகள்

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

  1. மகாசிவராத்திரி
  2. யோகசிவராத்திரி
  3. நித்திய சிவராத்திரி
  4. பட்ஷிய சிவராத்திரி
  5. மாத சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

சிவராத்திரி விரத நியதிகள்

  • சிவரத்திரி தினத்தின் முதல் நாளில் ஒருவேளை உணவு உண்ணுதல் வேண்டும்.
  • சிவரத்திரி தினத்தில் உபவாசம் இருந்து இரவு நான்கு சாமமும் நித்திரையின்றி சிவபூசை செய்தல் வேண்டும்.
  • சிவபூசை செய்ய இயலாதவர் நித்திரையின்றி, நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்தல் வேண்டும்.திருநீறு தரித்து, உருத்திராக்கம் அணிந்து ஸ்ரீ பஞ்சாட்சரம் செபித்தல், ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்தல், சிவராத்திரி புராணம், சிவபுராணம், என்பவற்றையும் சிவபெருமானைப் பற்றிக் கூறும் கதைகளையும் படித்தல், கேட்டல் என்பவற்றில் ஈடுபட வேண்டும்.
  • இலிங்கோற்பவ காலத்தில் சிவனை விசேடமாக வழிபடுதல் வேண்டும். இலிங்கோற்பவ காலம் என்பது திருமால், பிரம்மன் அறியாதபடி சோதியாக நின்ற பரம்பொருள், குளிர்ந்து இலிங்க வடிவில் காட்சி தந்த காலத்தைக் குறிப்பது. சிவராத்திரி இரவில் பதினான்கு நாழிகைக்கு மேல் (11.30 - 12.15) இரு நாழிகை (1 நாழிகை=24 நிமிடங்கள்) பரம்பொருள் இலிங்கத்தில் தோன்றியருளினார். அதனால், அக்காலத்தில் சிவபூசை செய்து வழிபடுதல் வேண்டும்.
  • சிவராத்திரியின் மறுநாள் அதிகாலையில் நீராடி, பாறணை செய்தலும் சிவனடியார்களுக்கு மாகேசுர பூசை செய்தலும் வேண்டும்.
  • சிவராத்திரி விரதத்தைத் தொடர்ந்து பன்னிரண்டு அல்லது இருபத்தினான்கு வருடங்கள் அனுட்டித்தல் வேண்டும். சிவராத்திரி விரத நாளில் உபவாசம் உத்தமம்; நீரேனும் பாலேனும் அருந்துதல் மத்திமம்; பழம் உண்பது அதமம். சிவராத்திரி தினத்தில் நான்கு சாமமும் நித்திரை ஒழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையாயினும் நித்திரை ஒழித்தல் வேண்டும்.

நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

முதல் யாமம்

இரண்டாம் யாமம்

மூன்றாம் யாமம்

நான்காம் யாமம்

  • அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
  • அலங்காரம் - கரு நொச்சி
  • அர்ச்சனை - நந்தியாவட்டை
  • நிவேதனம் - வெண்சாதம்
  • பட்டு - நீலப் பட்டு
  • தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
  • மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
  • புகை - கர்ப்பூரம், இலவங்கம்
  • ஒளி- மூன்று முக தீபம்

இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்

  • திருக்கேதீச்சரப் பதிகங்கள்
  • திருவண்ணாமலைப் பதிகங்கள்

உசாத்துணைகள்

வெளிப்புற இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_சிவராத்திரி&oldid=1512299" இலிருந்து மீள்விக்கப்பட்டது