திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 12: வரிசை 12:
</poem>
</poem>


திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.<ref name = "one"> சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- ஆசிரியர். எஸ்.சூரியமூர்த்தி - பதிப்பாண்டு -2012- நர்மதா பதிப்பகம் சென்னை-17 </ref>
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. தற்போது யாவரும் எளிதில் அறிந்து கொள்ளத் தக்க வகையில் பல பாட்டுக்கள் விக்கவுரை கூறப்பட்டிருக்கிறது.<ref name = "one"> சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- ஆசிரியர். எஸ்.சூரியமூர்த்தி - பதிப்பாண்டு -2012- நர்மதா பதிப்பகம் சென்னை-17 </ref>


== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==
== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==

13:43, 3 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூள்ளாண்டு. [1] இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.

வேதம்,ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;

ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே

திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. தற்போது யாவரும் எளிதில் அறிந்து கொள்ளத் தக்க வகையில் பல பாட்டுக்கள் விக்கவுரை கூறப்பட்டிருக்கிறது.[2]

எடுத்துக்காட்டுப் பாடல்கள்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே![3]

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.[3]

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே[3]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 226. 
  2. சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- ஆசிரியர். எஸ்.சூரியமூர்த்தி - பதிப்பாண்டு -2012- நர்மதா பதிப்பகம் சென்னை-17
  3. 3.0 3.1 3.2 திருமந்திரம்- திருமூலர் பிழை காட்டு: Invalid <ref> tag; name "two" defined multiple times with different content

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமந்திரம்&oldid=1508865" இலிருந்து மீள்விக்கப்பட்டது