"பொ. பூலோகசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
812 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா]]வில் [[செட்டிக்குளம்]] என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|சம்பத்தரிசியார் கல்லூரி]]யிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு]] அனுமதி பெற்று [[1961]] ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று [[1963]] முதல் [[1965]] வரை [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்]] திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாக கலாநிதிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது.
 
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக [[1965]] இல் சேர்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[களனி பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் [[1997]] வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து [[அவுஸ்திரேலியா]] சென்று [[சிட்னி]] நகரில் வசித்து வருகிறார்.
 
[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] ([[1886]]) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் [[1975]] இலும் [[1979]] இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன. இவற்றைவிட நான்காம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் முன்னின்று உழைத்த தமிழறிஞர்களில் இவரும் ஒருவராவார்.
 
==வெளிவந்த நூல்கள்==
== வெளி இணைப்புகள் ==
* [http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%AA%E0%AF%8A. தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்] - [[நூலகம் திட்டம்]]
[http://srinoolakam.blogspot.com/2006/01/blog-post_113842778311498982.html நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - நினைவலைகள்]
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
4

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1508685" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி