ஜவகர் குகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
|image_size =
|image_size =
|caption =
|caption =
|coordinates = {{coord|33.508|75.209|}}
|coordinates =
|route = [[பானிகால்]] ---- [[க்வாஸிகுண்ட்]]
|route = [[பானிகால்]] ---- [[க்வாஸிகுண்ட்]]
|status =
|status =
வரிசை 16: வரிசை 16:
|operator =
|operator =
|traffic = தானியங்கி
|traffic = தானியங்கி
|engineer= ஆல்ப்ரட் குன்ஸ் மற்றும் சி.பாரெசெல்
|engineer= Alfred Kunz and C. Barsel
|character =
|character =
|toll =
|toll =

09:53, 22 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஜவகர் குகை
மேலோட்டம்
வழித்தடம்பானிகால் ---- க்வாஸிகுண்ட்
செய்பணி
பணி ஆரம்பம்1954
திறப்புதிசம்பர் 22, 1956 (1956-12-22)
Trafficதானியங்கி
வண்டிகள்/நாள்7000
தொழினுட்பத் தகவல்கள்
வடிவமைப்புப் பொறியாளர்ஆல்ப்ரட் குன்ஸ் மற்றும் சி.பாரெசெல்
நீளம்2.85 கிலோமீட்டர்கள் (1.77 mi)
தண்டவாளங்களின் எண்ணிக்கை2
தாழ் புள்ளி2,194 மீட்டர்கள் (7,198 அடி)

ஜவகர் குகை இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. ஶ்ரீநகருக்கும் ஜம்முவிற்கும் இடையே அமைந்துள்ளது.வருடம் முழுவதும் போக்குவரத்து வசதிக்காக 1954 - ஜெர்மனைச் சேர்ந்த ஆல்ப்ரட் குன்ஸ் மற்றும் சி.பாரெசெல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது 22 டிசம்பர் 1956 முதல் போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ளது.இதன் மொத்த நீளம் 2.85 கிலோமீட்டர். பானிகால் மற்றும் க்வாஸிகுண்ட் தேசிய நெடுஞ்சாலை எண் NH 44-ல் அமைந்துள்ளது.[1] இந்தியாவின் எல்லைப்புற சாலைகள் அமைப்பால் 1960 -ல் மேம்படுத்தப்பட்டது. இது 150 வாகனங்கள் செல்லும் விதம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 7,000 வாகனங்கள் இந்தக்குகையைக் கடந்து செல்கின்றன.மேம்படுத்தப்பட்டபின் காறு உட்புகும் வசதி அமைக்கப்பட்டது. மேலும் மாசடைதல், வெப்பநிலை ஆகியவற்றை உணரும் உணரிகள் (sensors) பொருத்தப்பட்டுள்ளன.அவசரத் தேவைக்கான தொலைபேசி வசதியும் இதனுள் இணைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ராணுவத்தினரால் இது கண்காணிக்கப்படுகிறது. புகைப்படம் எடுப்பதோ அல்லது காணொளிப் படம் எடுப்பதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது..[2]இதனுள் செல்லும் போது ஒரே சீரான வேகத்தில் செல்ல வேண்டும். படம்பிடிக்கருவிகள் மூலம் இக்குகையினுள் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 2009 வரை நள்ளிரவு முதல் காலை 8 மணி வ்ரை பொதுமக்களின் வாகனங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது 24 மணிநேரமும் வாகனங்கள் பயணிக்கலாம்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவகர்_குகை&oldid=1502221" இலிருந்து மீள்விக்கப்பட்டது