கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14: வரிசை 14:
இவ்வியக்கத்தை துவங்கியவர்கள் பலர் தங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் பிறிந்துபோகத்துவங்கினர். முதலில் லூதரும் சுங்லியும், பின்னர் லூதரும் [[ஜான் கால்வின்|கால்வினும்]] என ஒருவர் மற்றவருக்கு எதிராக பல திருச்சபைகளை நிருவினர்.{{sfn|Brakke|Weaver|2009|pp=92-93}} [[ஆங்கிலிக்கம்]] இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி மறுமணம் புரிய திருத்தந்தை அனுமதிக்காததால் தனது தலைமையில் புதிய சபையொன்றை துவங்கினார். இவையனைத்தும் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]] விரைவாக நடைபெற தூண்டுகோலாய் இருந்தன.
இவ்வியக்கத்தை துவங்கியவர்கள் பலர் தங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் பிறிந்துபோகத்துவங்கினர். முதலில் லூதரும் சுங்லியும், பின்னர் லூதரும் [[ஜான் கால்வின்|கால்வினும்]] என ஒருவர் மற்றவருக்கு எதிராக பல திருச்சபைகளை நிருவினர்.{{sfn|Brakke|Weaver|2009|pp=92-93}} [[ஆங்கிலிக்கம்]] இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி மறுமணம் புரிய திருத்தந்தை அனுமதிக்காததால் தனது தலைமையில் புதிய சபையொன்றை துவங்கினார். இவையனைத்தும் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]] விரைவாக நடைபெற தூண்டுகோலாய் இருந்தன.


==முடிவும் தாக்கமும்==
==முடிவு==
[[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரில்]] (1618–1648) முடிவுற்ற ஐரோப்பிய சமயப்போர்களுக்கு இவ்வியக்கம் வழிவகுத்தது. இதனால் செருமனி தனது மக்கள் தொகையில் 25% முதல் 40% வரை இழந்திருக்கக்கூடும்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/195896/history-of-Europe/58335/Demographics#ref=ref310375 History of Europe – Demographics]". Encyclopædia Britannica.</ref>
[[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரில்]] (1618–1648) முடிவுற்ற ஐரோப்பிய சமயப்போர்களுக்கு இவ்வியக்கம் வழிவகுத்தது. இதனால் செருமனி தனது மக்கள் தொகையில் 25% முதல் 40% வரை இழந்திருக்கக்கூடும்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/195896/history-of-Europe/58335/Demographics#ref=ref310375 History of Europe – Demographics]". Encyclopædia Britannica.</ref>

1618 முதல் 1648 வரை கத்தோலிக்க ஹாப்ஸ்பர்க் குடி செருமானிய சீர்திருத்த வாதிகளுக்கெதிராக போரில் ஈடுபட்டது. இக்குடிக்கு [[டென்மார்க்]], [[சுவீடன்]] மற்றும் [[பிரான்சு]] ஆதரவளித்தது. [[எசுப்பானியா]], [[ஆசுதிரியா]], [[செருமனி]]யின் பெரும்பகுதி மற்றும் [[இத்தாலி]]யில் ஆட்சிசெய்த இக்குடி, கத்தோலிக்கத்தின் பெரும் ஆதரவு ஆகும். பிரான்சு இவர்களுக்கு அளித்த ஆதரவை சிறிது சிறிதாக நிறுத்தியபோதும், இவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே போராடியபோதும் சீர்திருத்த இயக்கத்தின் முடிவு நெறுங்கிவிட்டதாக பலர் நம்பினர்.{{sfn|Simon|1966|pp=120-121}} இதுவே முதன் முதலாக அதன் மகளின் நம்பிக்கைக்கு எதிராக பிரான்சு அரசு செயல்பட்டது.

[[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] முப்பதாண்டுப் போரினை முடிவுக்கு கொணர்ந்தது.

இவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

14:51, 3 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1][2]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் திருத்தந்தை வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, பலன்கள் வழங்குவதில் நடந்த முறைகேடுகளினாலும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும்(சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன.

சீர்திருத்தத் திருச்சபையினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். கறுப்புச் சாவு, மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகள் பரவ அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.

கத்தோலிக்க மறுமலர்ச்சி என்பது இவ்வியகத்துக்கான கத்தோலிக்க திருச்சபையின் பதில் ஆகும்.[2] முதல் சீர்திருத்த திருச்சபைகள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றத்துவங்கின. இவற்றுள் பெரியது லூதரனியம் ஆகும். இது பெருவாரியாக செருனனியின் பால்டிக் சுகாண்டினேவியன் மக்களிடம் புகழ்பெற்றிருந்தது.

சூழல்

முதன் முதலில் கத்தோலிக்க திருச்சபையின் சில குருக்கள், திருச்சபையின் சில அதிகாரிகள் செய்த செயல்களை கண்டிக துவங்கப்பட்டது சீர்திருத்த இயக்கம் ஆகும்.[3] முதன் முதலில் பலன்களைக் குறித்து மார்ட்டின் லூதர் கேள்வி ஏழுப்பினார். ஆதலால் அவர் 3 ஜனவரி 1521 திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். இதுவே கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் துவங்கப்பட முக்கிய காரணமாகும்.[4] லூதருக்கு முன்பே ஜான் விக்லிஃப் மற்றும் ஜேன் கஸ் என்பவர்கள் திருச்சபையினை சீர்திருத்த முயன்றனர் என்பது குறிக்கத்தக்கது.

31 அக்டோபர் 1517இல் விடென்பெர்க், சேக்சோனியில் துவங்கியது இவ்வியக்கம். சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார்.[5] இவற்றில் திருச்சபையையும், அதன் மேல் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தையும் பலன்கள் விற்பனையையும், உத்தரிப்பு நிலைக்குறித்த திருச்சபையுன் போதனைகளையும் அவர் கண்டித்து இருந்தார். 1517-1521க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் மரியாள் குறித்த கத்தோலிக்க நம்பிக்கை, புனிதர்களின் பரிந்துரை மன்றாட்டுகள், அருட்சாதனங்களின் நிலை, துறவு நிலை, கற்பு நிலை, சமயம் சார்ந்தவற்றில் சரசியல் குறுக்கீடுகள் போன்றவற்றை எதிர்க தொடங்கினார்.

இவ்வியக்கத்தை துவங்கியவர்கள் பலர் தங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் பிறிந்துபோகத்துவங்கினர். முதலில் லூதரும் சுங்லியும், பின்னர் லூதரும் கால்வினும் என ஒருவர் மற்றவருக்கு எதிராக பல திருச்சபைகளை நிருவினர்.[6] ஆங்கிலிக்கம் இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி மறுமணம் புரிய திருத்தந்தை அனுமதிக்காததால் தனது தலைமையில் புதிய சபையொன்றை துவங்கினார். இவையனைத்தும் கத்தோலிக்க மறுமலர்ச்சி விரைவாக நடைபெற தூண்டுகோலாய் இருந்தன.

முடிவும் தாக்கமும்

முப்பதாண்டுப் போரில் (1618–1648) முடிவுற்ற ஐரோப்பிய சமயப்போர்களுக்கு இவ்வியக்கம் வழிவகுத்தது. இதனால் செருமனி தனது மக்கள் தொகையில் 25% முதல் 40% வரை இழந்திருக்கக்கூடும்.[7]

1618 முதல் 1648 வரை கத்தோலிக்க ஹாப்ஸ்பர்க் குடி செருமானிய சீர்திருத்த வாதிகளுக்கெதிராக போரில் ஈடுபட்டது. இக்குடிக்கு டென்மார்க், சுவீடன் மற்றும் பிரான்சு ஆதரவளித்தது. எசுப்பானியா, ஆசுதிரியா, செருமனியின் பெரும்பகுதி மற்றும் இத்தாலியில் ஆட்சிசெய்த இக்குடி, கத்தோலிக்கத்தின் பெரும் ஆதரவு ஆகும். பிரான்சு இவர்களுக்கு அளித்த ஆதரவை சிறிது சிறிதாக நிறுத்தியபோதும், இவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே போராடியபோதும் சீர்திருத்த இயக்கத்தின் முடிவு நெறுங்கிவிட்டதாக பலர் நம்பினர்.[5] இதுவே முதன் முதலாக அதன் மகளின் நம்பிக்கைக்கு எதிராக பிரான்சு அரசு செயல்பட்டது.

வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரினை முடிவுக்கு கொணர்ந்தது.

இவ்வியக்கதின் தாக்கம் அறிவொளிக் காலத்திலும் பகுத்தறிவியத்திலும் காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.

மேற்கோள்கள்

  1. Simon, Edith (1966). Great Ages of Man: The Reformation. Time-Life Books. பக். pp. 120-121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0662278208. 
  2. 2.0 2.1 Cameron 2012.
  3. Thomsett 2011, ப. 156.
  4. Spalding 2010.
  5. 5.0 5.1 Simon 1966, ப. 120-121.
  6. Brakke & Weaver 2009, ப. 92-93.
  7. "History of Europe – Demographics". Encyclopædia Britannica.

வார்ப்புரு:Link FA