நிறப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Chromosome.svg|thumb|250px|யூக்காரியோட்டிக் உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) [[நிறமியன்]](Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) [[மையப்படி]](Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.]]
[[படிமம்:Chromosome.svg|thumb|250px|[[மெய்க்கருவுயிரி]] உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) [[நிறமியன்]](Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) [[மையப்படி]](Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.]]

'''நிறப்புரி''' அல்லது '''நிறமூர்த்தம்''' (''Chromosome'', '''குரோமோசோம்''') என்பது [[மரபியல்]] தகவல்களை கடத்தக்கூடிய [[மரபணு]]க்களைக் கொண்ட, [[உயிரணு]]க்களில் காணப்படும் [[டி.என்.ஏ]] மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த [[புரதம்|புரதங்களையும்]] குறிக்கின்றது. இது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுவில் இருக்கும் [[உயிரணுக் கரு|கரு]]வில் ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; [[பாக்டீரியா|பாக்டீரியாக்களிலும்]], மெய்க்கருவுயிரிகளின் [[இழைமணி]]களிலும், [[தாவரம்|தாவரங்களின்]] [[பச்சையவுருமணி]]களிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது<ref>{{cite web | url=http://www.thefreedictionary.com/chromosome | title=Chromosome | author=The Free Dictionary, By Farlex}}</ref><ref>{{cite web | url=http://www.biology-online.org/dictionary/Chromosome | title=Chromosome | author=Biology Online}}</ref>.

வரிசை 10: வரிசை 9:
நிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு [[உயிரினம்]] வேறாக உள்ளன. இவை நேரிழையாகவோ, வட்டவடிவமாகவோ (வளையம்) இருக்கின்றது. அத்துடன் நிறப்புரிகள் 100,000 முதல் 3,750,000,000 நியூக்கிளியோட்டைடுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும்<ref>{{cite journal|author=Paux E, Sourdille P, Salse J, ''et al.''|title=A Physical Map of the 1-Gigabase Bread Wheat Chromosome 3B|journal=Science|volume=322|issue=5898|pages=101–104|year=2008|doi=10.1126/science.1161847 |pmid=18832645}}</ref><ref>{{cite journal|author=Pellicer J, Fay M F and Leitch I J|title=The largest eukaryotic genome of them all?|journal=Botanical Journal of the LinneanSociety|volume=164|pages=10–15|year=2010|doi=10.1111/j.1095-8339.2010.01072.x}}</ref>. பல விதிவிலக்குகள் காணப்பட்டாலும், பொதுவாக மெய்க்கருவுயிரிகள் நீண்ட நேரிழையான நிறப்புரிகளையும், நிலைக்கருவிலிகள் வட்டவடிவான நிறப்புரிகளையும் கொண்டிருக்கின்றன. ஒரு உயிரணுவிலேயே வேறுபட்ட வகையான நிறப்புரிகளும் உள்ளன. மெய்க்கருவுயிரிகளில், கருக்களில் நீண்ட இழை அமைப்பையும், இழைமணிகளில் வட்டவடிவான அமைப்பையும், தாவர உயிரணுக்களில் வட்டமான அமைப்பையும் கொண்டிருக்கின்றன.

மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கருவில் இருக்கும் நிறப்புரியானது புரதங்களுடன் இணைக்கப்பட்டு மிக நெருக்கமாக அடுக்கப்படும்போது நிறமியன் (Chromatin) என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நெருக்கமான, ஒடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பதனால் கருவினுள் அடக்கப்படுகின்றது.
மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கருவில் இருக்கும் நிறப்புரியானது புரதங்களுடன் இணைக்கப்பட்டு மிக நெருக்கமாக அடுக்கப்படும்போது நிறமியன் (Chromatin) என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நெருக்கமான, ஒடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பதனால் கருவினுள் அடக்கப்படுகின்றது. கலப்பிரிவின்போது, இந்த நிறப்புரிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கலப்பிரிவின்போது தாய்க்கலத்தில் இருந்து, மகட்கலங்களுக்கு மரபியல் கூறுகள் கடத்தப்பட வேண்டி இருப்பதனால், நிறப்புரிகள் இரட்டிப்பாதலும், பின்னர் பிரிதலும் நிகழ வேண்டும். எனவே உயிரணுக்களில் நிறப்புரிகளை இரட்டிப்பான நிலையிலும், அவ்வாறு இரட்டிப்பாகாத நிலையிலும் காணலாம். இரட்டிப்பாகாத நிலையில் தனி இழையாகவும், இரட்டிப்பான நிலையில் ஒன்றையொன்று ஒத்த, சோடியான இரு பிரதிகள் காணப்படும். இப்பிரதிகள் அரைநிறவுருக்கள் (Chromatids or Sister chromatids) என அழைக்கப்படும்.

== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==

22:26, 25 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

மெய்க்கருவுயிரி உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) நிறமியன்(Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) மையப்படி(Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.

நிறப்புரி அல்லது நிறமூர்த்தம் (Chromosome, குரோமோசோம்) என்பது மரபியல் தகவல்களை கடத்தக்கூடிய மரபணுக்களைக் கொண்ட, உயிரணுக்களில் காணப்படும் டி.என்.ஏ மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த புரதங்களையும் குறிக்கின்றது. இது மெய்க்கருவுயிரிகளின் உயிரணுவில் இருக்கும் கருவில் ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; பாக்டீரியாக்களிலும், மெய்க்கருவுயிரிகளின் இழைமணிகளிலும், தாவரங்களின் பச்சையவுருமணிகளிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது[1][2].

நிறப்புரியானது, மரபணுக்களையும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளையும் (கட்டுறுத்திகள்), ஏனைய நியூக்கிளியோட்டைடு தொடர்களையும் கொண்ட ஒரு தனியான நீளமான டி.என்.ஏ இழையாலானதாகும். இந்த டி.என்.ஏ இழையுடன் இணைந்த சில புரதங்களே டி.என்.ஏ யை ஒரு கட்டுமானத்துக்குள் வைத்திருக்கவும், அதன் தொழிற்பாட்டை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உயிரினங்களின் மரபியல் தகவல்களுக்கான குறியீடுகளைப் பொதுவாக இந்த நிறப்புரிகளே கொண்டிருக்கின்றன. ஆனாலும் சில இனங்களில் கணிமிகளோ, அல்லது வேறு நிறப்புரியல்லாத மரபியல் கூறுகளோ இத்தகைய தகவல் குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன.

குரோமோசோம் என்னும் சொல் கிரேக்க மொழியில் நிறம் என்னும் பொருள் தரும் குரோமா (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு உடல், உடலம் என்னும் பொருள் தரும் சோமா (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. புரோப்பிடியம் ஐயோடைடு, Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான நிறம் ஏற்கும் பண்பு உள்ளதால் இவற்றுக்கு நிறப்புரி என்றுபெயர்.

நிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு உயிரினம் வேறாக உள்ளன. இவை நேரிழையாகவோ, வட்டவடிவமாகவோ (வளையம்) இருக்கின்றது. அத்துடன் நிறப்புரிகள் 100,000 முதல் 3,750,000,000 நியூக்கிளியோட்டைடுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும்[3][4]. பல விதிவிலக்குகள் காணப்பட்டாலும், பொதுவாக மெய்க்கருவுயிரிகள் நீண்ட நேரிழையான நிறப்புரிகளையும், நிலைக்கருவிலிகள் வட்டவடிவான நிறப்புரிகளையும் கொண்டிருக்கின்றன. ஒரு உயிரணுவிலேயே வேறுபட்ட வகையான நிறப்புரிகளும் உள்ளன. மெய்க்கருவுயிரிகளில், கருக்களில் நீண்ட இழை அமைப்பையும், இழைமணிகளில் வட்டவடிவான அமைப்பையும், தாவர உயிரணுக்களில் வட்டமான அமைப்பையும் கொண்டிருக்கின்றன.

மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கருவில் இருக்கும் நிறப்புரியானது புரதங்களுடன் இணைக்கப்பட்டு மிக நெருக்கமாக அடுக்கப்படும்போது நிறமியன் (Chromatin) என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நெருக்கமான, ஒடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பதனால் கருவினுள் அடக்கப்படுகின்றது. கலப்பிரிவின்போது, இந்த நிறப்புரிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கலப்பிரிவின்போது தாய்க்கலத்தில் இருந்து, மகட்கலங்களுக்கு மரபியல் கூறுகள் கடத்தப்பட வேண்டி இருப்பதனால், நிறப்புரிகள் இரட்டிப்பாதலும், பின்னர் பிரிதலும் நிகழ வேண்டும். எனவே உயிரணுக்களில் நிறப்புரிகளை இரட்டிப்பான நிலையிலும், அவ்வாறு இரட்டிப்பாகாத நிலையிலும் காணலாம். இரட்டிப்பாகாத நிலையில் தனி இழையாகவும், இரட்டிப்பான நிலையில் ஒன்றையொன்று ஒத்த, சோடியான இரு பிரதிகள் காணப்படும். இப்பிரதிகள் அரைநிறவுருக்கள் (Chromatids or Sister chromatids) என அழைக்கப்படும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. The Free Dictionary, By Farlex. "Chromosome".
  2. Biology Online. "Chromosome".
  3. Paux E, Sourdille P, Salse J, et al. (2008). "A Physical Map of the 1-Gigabase Bread Wheat Chromosome 3B". Science 322 (5898): 101–104. doi:10.1126/science.1161847. பப்மெட்:18832645. 
  4. Pellicer J, Fay M F and Leitch I J (2010). "The largest eukaryotic genome of them all?". Botanical Journal of the LinneanSociety 164: 10–15. doi:10.1111/j.1095-8339.2010.01072.x. 

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறப்புரி&oldid=1485901" இலிருந்து மீள்விக்கப்பட்டது