திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82: வரிசை 82:


===செங்கோட்டு வேலவர்===
===செங்கோட்டு வேலவர்===
இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். அவற்றுள் ஒருபாடல்:
இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல்:
*[http://www.kaumaram.com/thiru_uni/tpun0585.html திருப்புகழ் - பாடல் 585 -அன்பாக வந்து...(திருச்செங்கோடு)]
*[http://www.kaumaram.com/thiru_uni/tpun0585.html திருப்புகழ் - பாடல் 585 -அன்பாக வந்து...(திருச்செங்கோடு)]



12:33, 25 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
அர்த்தநாரீசுவரர் கோயில்
பெயர்
பெயர்:அர்த்தநாரீசுவரர் கோயில்
கோயில் தகவல்கள்
மூலவர்:அர்த்தநாரீசுவரர்
தாயார்:பாகம்பிரியாள்
தல விருட்சம்:இலுப்பை
தீர்த்தம்:தேவதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளி்க்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.

அமைவிடம்

அர்த்தநாரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது. இக்கோயில் ஈரோட்டிலிருந்து 20 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அஞ்சல் முகவரி: அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். அஞ்சல் குறியீட்டு எண்: 637211.

போக்குவரத்து

மலைப்பாதையின் முடிந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப்பகுதி.

ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற நகரங்களிலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல பேருந்துவசதி உள்ளது. தொடருந்தில் பயணம் செய்ய விரும்புவோர் ஈரோடு சந்திப்பு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் திருச்செங்கோட்டை அடையலாம். திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது. இதில் இருபாதைகள் உண்டு. ஒன்று நடைப்பயணமாகப் படிக்கட்டு வழிச் செல்வோருக்காக ஒரு பாதையும் வாகனம் மூலம் செல்வோருக்காக மற்றொன்றும் பயன்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகத்தாரால் மலைமேல் செல்ல கட்டணச்-சிற்றுந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் சன்னிதி முன்மண்டபமும் கொடிமரமும்

அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழ-மேற்கில் 262 அடி நீளமும் தென்-வடலாக 201 அடி நீளமுடையது இக்கோயில். இதன் வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென்திசைகளிலும் இக்கோயிலுக்கு வாயில்களுண்டு. அவற்றுள் தென் திசை வாயிலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.

செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இக்கோயில். மூலவர் அர்த்தநாரீசுவரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாயில் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணியுள்ளது.

ஆமை மண்டபம்-ஆமை வடிவை மண்டபத்தின் கீழ்ப்பகுதியிலும் அர்த்தநாரீசுவரர் சன்னிதிப் பலகணியைப் பின்புலத்திலும் காணலாம்.

அர்த்தநாரீசுவரர் சன்னிதியின் முன்மண்டத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோயிலின் தூண்கள், மண்டபச் சுவர்களென அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்தநாரீசுவரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன் நாகேசுவரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) சன்னிதியும் உள்ளன.

பாடல் பெற்ற தலம்

அர்த்தநாரீசுவரர்

இத்தலத்தின் இறைவன் அர்த்தநாரீசுவரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107 ஆவது திருப்பதிகத்திலும் திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார்.

செங்கோட்டு வேலவர்

இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல்:

படத்தொகுப்பு

இவற்றையும் பார்க்க

ஆதாரங்கள்

  • திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருத்தல வரலாறு, திருக்கோயில் வெளியீடு

வெளி இணைப்புகள்