கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41: வரிசை 41:
இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க கூட்டு நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என சிறப்பிக்கப்படுவது. இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த [[அலாஸ்கா|அலாஸ்காவில்]] வாழ்கின்றன.
இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க கூட்டு நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என சிறப்பிக்கப்படுவது. இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த [[அலாஸ்கா|அலாஸ்காவில்]] வாழ்கின்றன.
==இரையை பிடிக்கும் விதம்==
==இரையை பிடிக்கும் விதம்==
இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையை தேடுகின்றன.இவைகளின் கண் மிகவும் கூர்மையானது.இதனால் தனது இரையை தூரத்திலிருந்தே கண்டுகொள்ளும்.மேலிருந்து இரையை கண்டால் மிகவும் வேகமாக கீழிறங்கி இரையை தூகிச்சென்று உண்ணும்.<references/>
இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையை தேடுகின்றன.இவைகளின் கண் மிகவும் கூர்மையானது.இதனால் தனது இரையை தூரத்திலிருந்தே கண்டுகொள்ளும்.மேலிருந்து இரையை கண்டால் மிகவும் வேகமாக கீழிறங்கி இரையை தூகிச்சென்று உண்ணும்.
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}
<references/>

==உசாத்துணை==
==உசாத்துணை==
*[http://www.amudamtamil.com/index.php?q1=679 அமுதம் தகவல் களஞ்சியம்]
*[http://www.amudamtamil.com/index.php?q1=679 அமுதம் தகவல் களஞ்சியம்]

06:38, 25 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

கழுகு
Eagle
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கழுகு-பருந்தினம் (அல்லது Accipitriformes, q.v.)
குடும்பம்: கழுகு இனம்
குடும்பம்

சில

கழுகு (eagle) என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். கழுகுகள் அக்சிபிட்ரிடே (accipitridae) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.[1] இவற்ரை விட இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடா நாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும் காணப்படுகின்றன.

இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. வானில் இருந்து திடீர் என்று கீழே பாய்ந்து விலங்குகளைக் வல்லூகிரால் பற்றுவதைத் தமிழில் ஏறு என்னும் சிறப்புக் கலைச்சொல்லால் குறிக்கப் பெறும் [பருந்தின் ஏறுகுறித் தொரீஇ (புறநானூறு 43, 5)]. வானில் இருந்து இடிவிழுவதையும் ஏறு என்னும் சொல்லால் குறிக்கப்பெறும். ஏறு என்பதற்கு தமிழில் பருந்தின் கவர்ச்சி என்றும் பெயர்.

நீண்ட இறக்கைகளை விரித்து கழுகு பறக்கத் துவங்குகிறது

வகைகள்

கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் எழால், கழுகு, [கங்கு], [கங்கம்], [கூளி], [பருந்து], [பணவை], [பாறு], [பூகம்], [வல்லூறு] என அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால், ஹார்பி கழுகு என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.

கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண்கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.

உடலமைப்பு

இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லர் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.

உணவு

இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் (birds of prey) என்று சொல்வதுண்டு.

வாழ்க்கை

இவை உயரமான மரங்கள், மலைச்சரிவுகளில் கூடு கட்டுகின்றன. ஒருமுறை இரண்டு முட்டைகள் இடுகின்றன. முதலில் பொரித்து வெளிவரும் அல்லது பெரிய குஞ்சு தன் இளவலை கொத்தி கொன்றுவிடும். இந்த படுகொலையைத் தடுக்க அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

அருகிவரும் கழுகு

உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அருகிவருகிறது.சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு.உலகில் சில நாடுகளில் கழுகுகளை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர்.1940க்குப் பின்னரே கழுகுகளின் அழிவு வெகுவிரைவாக இடம்பெற்று வருகிறது.காடுகளை அளித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர்.இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது.இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும்.அநேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன.இது பாரிய பிர்ரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேரக்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு வெற்றியளித்த போதும் அவை அருகிவருவதை தடுக்க முடியாதுள்ளது.

கழுகினங்கள்

எலும்புண்ணிக் கழுகு

எலும்புண்ணிக் கழுகு அல்லது எலும்புண்ணிப் பாறு (Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர் மலைப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா தென் ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. எலும்புண்ணிப் பாறு, தான் உண்ணும் உணவில் 85% எலும்பாக இருப்பதால்[2] இது எலும்புண்ணிக்கழுகு அல்லது எலும்புண்ணிப்பாறு என்று அழைக்கப்படுகின்றது. இப்பாறு அறிவியல் வகைப்பாட்டில் கழுகுவரிசையில் (Falconiformes, `வால்க்கனி`வார்ம்ஸ்) ஆக்ஸிபிட்ரிடீ (Accipitridae) என்னும் குடும்பத்தில், ஜிப்பீட்டஸ் (Gypaetus) என்னும் பேரினத்தில், எலும்புண்ணிப் பாறு (ஜிப்பீட்டஸ் பார்பேட்டஸ், Gypaetus barbatus) என்னும் இனம் ஆகும்.

வெண்தலைக்_கழுகு

வெண்தலைக் கழுகு (Haliaeetus leucocephalus), என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினங்களில் ஒன்று (மற்றையது பொன்னாங் கழுகு). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இக்கழுகை அமெரிக்கக் கழுகு என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் அமெரிக்க கூட்டு நாடுகளின் நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது. இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் கனடாவிலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த அலாஸ்காவில் வாழ்கின்றன.

இரையை பிடிக்கும் விதம்

இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையை தேடுகின்றன.இவைகளின் கண் மிகவும் கூர்மையானது.இதனால் தனது இரையை தூரத்திலிருந்தே கண்டுகொள்ளும்.மேலிருந்து இரையை கண்டால் மிகவும் வேகமாக கீழிறங்கி இரையை தூகிச்சென்று உண்ணும்.

மேற்கோள்கள்

  1. del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). உலகப் பறவைகளின் உசாநூல் Volume 2: New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6
  2. Handbook of the Birds of the World, Volume 2. p.84 and p. 125

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுகு&oldid=1485603" இலிருந்து மீள்விக்கப்பட்டது