கெய்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சுற்றுலா மையங்கள்: *விரிவாக்கம்*
வரிசை 68: வரிசை 68:
[[பகுப்பு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:எகிப்திய நகரங்கள்]]
[[பகுப்பு:எகிப்திய நகரங்கள்]]
[[பகுப்பு:கெய்ரோ]]


{{Link FA|ar}}
{{Link FA|ar}}

01:13, 10 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

அல்-காஹிரா
القـــاهــرة
மேல் இடப்புறம்: கெய்ரோ நகர்மையம்; மேல் வலப்புறம்: இபின் துலுன் மசூதி; நடுவில்: கெய்ரோ சிடாடெல்; கீழ் இடப்புறம்: நைல் ஆற்றில் பெலுக்காப் படகு; கீழ் நடுவே: கெய்ரோ கோபுரம்; கீழ் வலது: மூயிசு சாலை
மேல் இடப்புறம்: கெய்ரோ நகர்மையம்; மேல் வலப்புறம்: இபின் துலுன் மசூதி; நடுவில்: கெய்ரோ சிடாடெல்; கீழ் இடப்புறம்: நைல் ஆற்றில் பெலுக்காப் படகு; கீழ் நடுவே: கெய்ரோ கோபுரம்; கீழ் வலது: மூயிசு சாலை
அல்-காஹிரா-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): ஆயிரம் மினாரட்டுகளின் நகரம், அரபுலகின் தலைநகரம்
எகிப்து : எகிப்து வரைபடத்தில் கெய்ரோவின் இருப்பிடம் (இளம்பச்சை நிறத்தில் சுட்டப்பட்டுள்ளது)
எகிப்து : எகிப்து வரைபடத்தில் கெய்ரோவின் இருப்பிடம் (இளம்பச்சை நிறத்தில் சுட்டப்பட்டுள்ளது)
அரசு
 • ஆளுநர்டாக்டர். அப்துல் அஸிம் வகிர்
பரப்பளவு
 • நகரம்214 km2 (83 sq mi)
 • Metro5,360 km2 (2,070 sq mi)
மக்கள்தொகை (2006)
 • நகரம்7,734,334
 • அடர்த்தி35,047/km2 (90,770/sq mi)
 • பெருநகர்17,856,000 [1]
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
இணையதளம்http://www.cairo.gov.eg/C15/C8/EHome/default.aspx

கெய்ரோ (அரபு மொழியில்: القاهرة - அல்-காஹிரா) எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். அரபு உலகிலும் ஆப்பிரிக்காவிலும் இதுவே மிகப் பெரிய நகராகும். பெரும் கெய்ரோ எனப்படும் மாநகரப் பகுதி உலகில் 16வது பெரிய நகரப்பகுதியாக விளங்குகிறது. இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.[1][2] இந்த நகரம் கிபி 969இல் நிறுவப்பட்டது. இங்குள்ள இசுலாமிய கட்டிடக் கலையைக் குறிக்கும் முகமாக ஆயிரம் மினராட்டுகளின் நகரம் என்று செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்நகரம், இந்தப் பகுதி மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் வாழ்வில் மையமாக இருந்துள்ளது. தவிரவும் இது தொன்மைக்கால எகிப்தின் நகரங்களான மெம்பிசு, கீசா, பூசுடாட் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது. மேலும் பெரிய ஸ்பிங்ஸ், கீசாவின் பிரமிடுகளுக்கும் வாயிலாக உள்ளது.

எகிப்தியர்கள் இந்த நகரத்தின் தாக்கத்தினை முன்னிட்டு கெய்ரோவை பெரும்பான்மையும் எகிப்தின் அராபிய பலுக்கலான மஸ்ர் (مصر) என்றே அழைக்கின்றனர்.[3][4] இதன் அலுவல்முறையானப் பெயர் القاهرة அல்-காஹிரா, "வாகையாளர்" அல்லது "வெற்றி கொண்டான்" எனப் பொருள்படும்; சிலநேரங்களில் பேச்சுவழக்கில் இது كايرو காய்ரோ எனப்படுகிறது.[5] மேலும் உலகின் தாயகம் எனப் பொருள்படும் உம் அல்-துன்யா, என்றும் குறிப்பிடப்படுகின்றது.[6]

கெய்ரோவில் அரபு உலகின் மிகவும் பழமையானதும் பெரியதுமான திரைப்படத்துறை இயங்குகிறது. இங்குதான் உலகின் மிகப் பழைமையான கல்விநிறுவனங்களில் இரண்டாவதாக உள்ள உயர்கல்வி நிறுவனமான அல்-அசார் பல்கலைக்கழகம் உள்ளது. பல பன்னாட்டு ஊடக, வணிக, பிற அமைப்புகளின் வட்டாரத் தலைமையகமாக கெய்ரோ விளங்குகிறது. அரபுநாடுகள் கூட்டமைப்பின் தலைநகரமாகப் பெரும்பாலும் இருந்துள்ளது.

453 சதுர கிலோமீட்டர்கள் (175 sq mi) பரப்பளவில் 6.76 மில்லியன்[7] மக்கள்தொகையடன் கெய்ரோ எகிப்தின் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. நகரின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் கூடுதலான 10 மில்லியன் மக்களுடன் ஆப்பிரிக்காவிலும் அரபு உலகிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக கெய்ரோ மாநகரப்பகுதி விளங்குகிறது. நகரப் பரப்பளவிலான மாநகரப் பகுதிகளில் பத்தாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது.[8] மற்ற பெருநகரங்களைப் போலவே, கெய்ரோவிலும் கூடுதலான போக்குவரத்து நெரிசலும் சூழல்மாசடைவும் உள்ளது. கெய்ரோவின் பாதாளத் தொடர்வண்டி, கெய்ரோ மெட்ரோ, உலகின் பதினைந்தாவது போக்குவரத்துமிக்க தொடர்வண்டி அமைப்பாக விளங்குகிறது.[9] இதை ஆண்டுக்கு 1 பில்லியனுக்கும் கூடுதலான[10] பயணிகள் பாவிக்கின்றனர். பொருளியலில் கெய்ரோ மத்திய கிழக்கு நாடுகளில் முதலாவதாகவும் [11] உலகளவில் 43வதாகவும் உள்ளது.[12]

வரலாறு

A man on a donkey walks past a palm tree, with a mosque and market behind him.
ஏ. எசு. ராப்போபோர்ட்டின் "எகிப்திய வரலாறு" நூலில் பியூசுடாட்டின் ஓவியம் "

மெம்பிசைச் சுற்றியுள்ள தற்கால கெய்ரோவின் பகுதி, நைல் ஆற்றுப்படுகையின் மேற்புறத்தில் அமைந்துள்ளதால் பண்டைய எகிப்தின் மையப் பகுதியாக விளங்கியது. இருப்பினும் இந்த நகரத்தின் துவக்கம் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட குடியேற்றங்களால் உருவானது. நான்காம் நூற்றாண்டில்,[13] மெம்பிசின் புகழ் குறைந்து வந்தபோது [14] உரோமானியர்கள் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் கோட்டை ஒன்றைக் கட்டி நகரத்தை உருவாக்கினர். பாபிலோன் கோட்டை என அறியப்பட்ட இந்தக் கோட்டை நகரத்தின் மிகவும் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோட்டையைச் சுற்றியே கோப்து மரபுவழி சமூகத்தினர் வாழ்கின்றனர். கெய்ரோவின் பழங்கால கோப்து தேவாலயங்கள் இந்தக் கோட்டையின் சுவர்களை ஒட்டியே அமைந்துள்ளன;இப்பகுதி கோப்துக்களின் கெய்ரோ என அறியப்படுகிறது.

சுற்றுலா மையங்கள்

புறநகர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

  1. Santa Maria Tours (4 September 2009). "Cairo - "Al-Qahira"- is Egypt's capital and the largest city in the Middle East and Africa". PRLog. பார்க்கப்பட்ட நாள் 10 December 2011.
  2. "World's Densest Cities". Forbes. 21 December 2006. பார்க்கப்பட்ட நாள் 6 March 2010.
  3. Behrens-Abouseif 1992, ப. 8
  4. Golia 2004, ப. 152
  5. Good News for Me: بلال فضل يتفرغ لـ"أهل اسكندرية" بعد "أهل كايرو"வார்ப்புரு:Lang icon (Belal Fadl frees himself [to write] Ahl Eskendereyya (the People of Alexandria) after Ahl Kayro (the People of Cairo))
  6. Hedges, Chris. "What's Doing in Cairo," New York Times. January 8, 1995.
  7. Population and Housing Census 2006, Governorate level, Population distribution by sex (xls), Central Agency for Public Mobilisation and Statistics, பார்க்கப்பட்ட நாள் 9 July 2009. Adjusted census result, as Helwan governorate was created on 17 April 2008 from a.o.[தெளிவுபடுத்துக] parts of the Cairo governorate.
  8. Demographia World Urban Areas & Population Projections (PDF), Demographia, 2009, பார்க்கப்பட்ட நாள் 9 July 2009 {{citation}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  9. Cairo's third metro line beats challenges | Supplement | MEED
  10. "Cairo Metro Statistics". பார்க்கப்பட்ட நாள் 4 September 2012.
  11. "The 150 Richest Cities in the World by GDP in 2005". பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
  12. "The 2010 Global Cities Index".
  13. Hawass & Brock 2003, ப. 456
  14. "Memphis (Egypt)". Encarta. (2009). Microsoft. அணுகப்பட்டது 24 July 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்ரோ&oldid=1477287" இலிருந்து மீள்விக்கப்பட்டது