பிரான்சிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22: வரிசை 22:
* [[பிரெஞ்சு இலக்கணம்]]
* [[பிரெஞ்சு இலக்கணம்]]
* [[இத்தாலிய இலக்கணம்]]
* [[இத்தாலிய இலக்கணம்]]

==மேற்கோள்கள்==
<references/>


[[பகுப்பு:பிரெஞ்சு மொழி]]
[[பகுப்பு:பிரெஞ்சு மொழி]]

09:00, 9 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகள்

பிரான்சிய மொழி (le français [lœ fʁ̥ɒ̃sɛ] (கேட்க) அல்லது la langue française [la lɑ̃ɡ fʁɑ̃sɛz]) ஒரு ரோமானிய மொழியாகும். இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் ரோமண்டிப் பகுதி, பெல்ஜியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரென்சுவிக் (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், லூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர்.[1] இவர்களில் பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர்.[2] ஆபிரிக்காவில், காபொன் (80%),[2] மொரீசியசு (78%), அல்ஜீரியா (75%), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் (70%) ஆகிய நாடுகளில் பிரெஞ்சு மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும்,[1] இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரெஞ்சு மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரெஞ்சு மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரெஞ்சு மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரெஞ்சு மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரெஞ்சு அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து லா பிரான்கோபோனீ எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்.), பெல்ஜியம்(மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து(மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன.[4] ஐரோப்பாவில் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரெஞ்சு மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர்.[தெளிவுபடுத்துக] இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும்.[5] 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரெஞ்சு மொழி பேசுவோரால் ஆளப்பட்டது.) ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரெஞ்சு மொழி அறிமுகமானது.

லாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[6][7]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "L'aménagement linguistique dans le monde". CEFAN (Chaire pour le développement de la recherché sur la culture d’expression française en Amérique du Nord, Université Laval (in French). Jacques Leclerc. பார்க்கப்பட்ட நாள் May 19, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 (பிரெஞ்சு) La Francophonie dans le monde 2006–2007 published by the Organisation internationale de la Francophonie. Nathan, Paris, 2007.
  3. The World's 10 Most Influential Languages Top Languages. Retrieved 11 April 2011.
  4. "The status of French in the world". France Diplomatie. Ministère des Affaires étrangères. 2013. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.
  5. "Why learn French". Canadian Parents For French (Ontario). பார்க்கப்பட்ட நாள் 21 April 2010.
  6. "Agora: La francophonie de demain". பார்க்கப்பட்ட நாள் 13 June 2011.
  7. "Bulletin de liaison du réseau démographie" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிய_மொழி&oldid=1453692" இலிருந்து மீள்விக்கப்பட்டது