இரும்புத் திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"File:Iron Curtain map.svg|thumb|350px|இரும்புத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:28, 24 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

இரும்புத் திரை கறுப்புக் கோட்டினால் தீட்டப்பட்டுள்ளது. வார்சோ உடன்படிக்கையில் ஒப்பமிட்ட நாடுகள் சிவப்பு நிறத்தினால் நிறந்தீட்டப்பட்டுள்ளன. நேட்டோ அங்கத்தவர்கள் நீல நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. நடுநிலை வகிக்கும் நாடுகள் சாம்பல் நிறமூட்டப்பட்டுள்ளன. கறுப்புப் புள்ளியினால் குறிக்கப்படுவது பெர்லினாகும். பச்சை நிறம் தீட்டப்பட்டுள்ள யூகோஸ்லாவியா சமவுடமைக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும் அது இரு பக்கங்களிலும் தங்கியிருந்தது. சமவுடமைக் கொள்கையுடைய அல்பேனியா சீன சோவியத் பிளவின் பின் 1960களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்துடனான தொடர்புகளை முறித்துக்கொண்டு சீனா பக்கம் சேர்ந்துகொண்டது. இது சாம்பல் நிற வரிக்கோடுகள் இடப்பட்டுள்ளது.

இரும்புத் திரை என்பது 1945ல் இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து 1991ல் பனிப்போரின் முடிவு வரை ஐரோப்பாவை இரு பிரிவுகளாகப் பிரித்திருந்த நில எல்லையையும் அவற்றுக்கிடையிலான கொள்கை ரீதியிலான முறுகலையும் குறிப்பிடுகிறது. இச்சொல் சோவியத் ஒன்றியத்தால், தன்னையும் அதன் தங்கியிருக்கும் நாடுகளையும் மத்திய ஐரோப்பிய நாடுகளையும், மேற்கு நாடுகள் மற்றும் சமவுடைமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இரும்புத் திரையின் கிழக்குப் பகுதியில் சோவியத் ஒன்றியத்துடன் தொடர்புடைய நாடுகள் உள்ளன. இரும்புத் திரையின் இரு பக்கங்களிலும் உள்ள நாடுகள் தமக்கேயுரிய சர்வதேச பொருளாதார மற்றும் இராணுவக் கூட்டுறவுகளை ஏற்படுத்திக்கொண்டன. அவையாவன:

  • சோவியத் ஒன்றியத்தைத் தலைமை நாடாகக் கொண்ட, வார்சோ உடன்படிக்கை மற்றும் பரஸ்பர பொருளாதார உதவிக்கான சங்கம் ஆகியவற்றின் உறுப்பு நாடுகள்.
  • ஐக்கிய அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட, ஐரோப்பிய சமூகம் மற்றும் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு ஆகியவற்றின் உறுப்பு நாடுகள்.

பௌதிக ரீதியில், இரும்புத் திரையானது ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான, கண்டத்தின் நடுவே உள்ள பாதுகாப்பு எல்லைக் கோடாகவே காணப்பட்டது. இவ்வெல்லையின் குறிப்பிடத்தக்க பகுதி பெர்லின் சுவரும் அதன் சார்லி சோதனைச் சாவடியுமாகும். மேலும் இது இரும்புத் திரையின் முழுக் குறியீடாகவே விளங்கியது.[1]

இரும்புத் திரையை இல்லாதொழிக்கும் வகையிலான நிகழ்வுகள் போலந்தில் ஆரம்பமானதோடு,[2][3] ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா, செக்கோசிலோவாக்கியா மற்றும் ரோமானியா ஆகிய இடங்களுக்கும் பரவின. தனது பொதுவுடமை ஆட்சியை வன்முறை மூலம் அகற்றிய ஒரே ஐரோப்பிய நாடு ரோமானியாவாகும்.[4]

மேற்கோள்கள்

  1. "Archive: Freedom! The Berlin Wall". Time. 20 November 1989. http://www.time.com/time/magazine/article/0,9171,959058,00.html. பார்த்த நாள்: 5 May 2010. 
  2. Sorin Antohi and Vladimir Tismăneanu, "Independence Reborn and the Demons of the Velvet Revolution" in Between Past and Future: The Revolutions of 1989 and Their Aftermath, Central European University Press. ISBN 963-9116-71-8. p.85.
  3. Boyes, Roger (2009-06-04). "World Agenda: 20 years later, Poland can lead eastern Europe once again". The Times. http://www.timesonline.co.uk/tol/news/world/world_agenda/article6430833.ece. பார்த்த நாள்: 2009-06-04. 
  4. Piotr Sztompka, preface to Society in Action: the Theory of Social Becoming, University of Chicago Press. ISBN 0-226-78815-6. p. x.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்புத்_திரை&oldid=1444558" இலிருந்து மீள்விக்கப்பட்டது