"ஓலி ரோமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*)
(→‎வாழ்க்கை வரலாறு: *திருத்தம்*)
ரோமர் செப்டம்பர் 25, 1644ஆம் ஆண்டு ஆர்ஹஸ் என்றவிடத்தில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர் இசுடார்மிற்கும் மகனாகப் பிறந்தார். கிறிஸ்டென் பெடெர்சன் தமதுப் பெயரைக் கொண்ட மற்றவர்களிடமிருந்து தம்மை பிரித்துக்காட்ட ரோமர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார்; ரோமர் எனில் டேனிய தீவான ரோமாவைச் சேர்ந்தவர் என்ற பொருளாகும்.<ref>{{cite book|last=Friedrichsen|first=Per|coauthors=Tortzen, Chr. Gorm|title=Ole Rømer – Korrespondance og afhandlinger samt et udvalg af dokumenter|year=2001|publisher=C. A. Reitzels Forlag|location=Copenhagen|language=Danish|isbn=87-7876-258-8|pages=16}}</ref> 1662இல் ஓலி ரோமர் மெட்றிக் படிப்பை முடிக்கும்வரையிலான வாழ்க்கைப்பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஐசுலாந்து படிகத்தினால் ([[கால்சைட்]]) ஏற்படும் [[இரட்டை ஒளிவிலகல்|இரட்டை ஒளிவிலகலை]] ரோமர் கண்டறிந்ததை கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டியாக இருந்த '''ராசுமசு பார்த்தோலின்''' 1668இல் பதிப்பித்தார். இதனையடுத்து பார்த்தோலின் [[டைக்கோ பிரா]]வின் வானியல் பதிவுகளைக் கொண்டு கணிதத்தையும் வானியலையும் கற்க ரோமருக்கு உதவினார்.<ref>Friedrichsen; Tortzen (2001), pp. 19–20.</ref>
 
ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது; [[பிரான்சின் பதினான்காம் லூயி|லூயி XIV]] மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் [[வெர்சாய் அரண்மனை]]யின் அழகான [[நீர்த்தாரைகள்|நீர்த்தாமரைகளைநீர்த்தாரைகளை]] வடிவமைப்பதிலும் பங்கேற்றார்.
 
1681இல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் [[வானியல்]] பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார்; பல்கலைக்கழகத்தில் இருந்த ''ருண்டெடாம்'', அல்லது வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துபட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான (பின்னாளில் தாமே ஒரு வானியலாளர்) பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார்.
 
தமது 65ஆவது அகவையில் 1710இல் உயிரிழந்தார்.
==ஒளியின் வேகத்தை அளவிடல்==
 
==மேற்சான்றுகள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439125" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி