கல்லீரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தவறான தகவல் மாற்றப்பட்டது
வரிசை 3: வரிசை 3:
[[படிமம்:Leber Schaf.jpg|thumb|right|200px|'''கல்லீரல்''' மார்பு எலும்புக்கூட்டிற்குள் [[இரைப்பை|இரைப்பைக்கு]] அருகில் இருக்கும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு]]
[[படிமம்:Leber Schaf.jpg|thumb|right|200px|'''கல்லீரல்''' மார்பு எலும்புக்கூட்டிற்குள் [[இரைப்பை|இரைப்பைக்கு]] அருகில் இருக்கும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு]]


'''கல்லீரல்''' (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது உடலின் ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், வேறுபிற விலங்குகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது மாந்தர்களில் மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலத்தே [[இரைப்பை|இரைப்பைக்கு]] அருகில் இருக்கும் ஓர் உறுப்பு. இதுவே யாவற்றினும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு ஆகும். மாந்தர்களில் [[தோல்|தோலுக்கு]] அடுத்தாற்போல் உள்ள மிகப்பெரிய உறுப்பு.
'''கல்லீரல்''' (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது உடலின் ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், வேறுபிற விலங்குகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது மாந்தர்களில் வயிற்றறை/வயிற்றுக் குழியில் (Abdominal cavity) வலது மேல் பக்கத்தில், நெஞ்சறையையும், வயிற்றறையையும் பிரிக்கும் பிரிமென்றகட்டிற்குக் கீழாக அமைந்திருக்கும். இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக [[இரைப்பை|இரைப்பையும்]] இருக்கின்றது. இதுவே யாவற்றினும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு ஆகும். மாந்தர்களில் [[தோல்|தோலுக்கு]] அடுத்தாற்போல் உள்ள மிகப்பெரிய உறுப்பு.


கல்லீரல் சிறுகாலமே ஆற்றலைச் சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய [[கிளைக்கொஜன்|கிளைக்கொஜனைச்]] சேமித்து வைத்தலும், உணவு செரிப்பதற்கு உதவி செய்யும் காரத்தன்மை கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் [[பித்தநீர்|பித்தநீரை]] உண்டாக்குவதும், சிவப்புக் குருதி அணுக்களைச் சீர்செய்து குருதியைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள பிளாஸ்மா, புரதப்பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு நச்சுப்பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.
கல்லீரல் சிறுகாலமே ஆற்றலைச் சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய [[கிளைக்கொஜன்|கிளைக்கொஜனைச்]] சேமித்து வைத்தலும், உணவு செரிப்பதற்கு உதவி செய்யும் காரத்தன்மை கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் [[பித்தநீர்|பித்தநீரை]] உண்டாக்குவதும், சிவப்புக் குருதி அணுக்களைச் சீர்செய்து குருதியைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள பிளாஸ்மா, புரதப்பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு நச்சுப்பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.

21:23, 12 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

கல்லீரல்
கல்லீரல்
கல்லீரல் மார்பு எலும்புக்கூட்டிற்குள் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு

கல்லீரல் (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது உடலின் ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், வேறுபிற விலங்குகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது மாந்தர்களில் வயிற்றறை/வயிற்றுக் குழியில் (Abdominal cavity) வலது மேல் பக்கத்தில், நெஞ்சறையையும், வயிற்றறையையும் பிரிக்கும் பிரிமென்றகட்டிற்குக் கீழாக அமைந்திருக்கும். இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக இரைப்பையும் இருக்கின்றது. இதுவே யாவற்றினும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு ஆகும். மாந்தர்களில் தோலுக்கு அடுத்தாற்போல் உள்ள மிகப்பெரிய உறுப்பு.

கல்லீரல் சிறுகாலமே ஆற்றலைச் சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய கிளைக்கொஜனைச் சேமித்து வைத்தலும், உணவு செரிப்பதற்கு உதவி செய்யும் காரத்தன்மை கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் பித்தநீரை உண்டாக்குவதும், சிவப்புக் குருதி அணுக்களைச் சீர்செய்து குருதியைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள பிளாஸ்மா, புரதப்பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு நச்சுப்பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.

மாந்தர்களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு. கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் என்று கருதுவது பொருந்தும். கல்லீரல் செரித்த உணவை இரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்துச் சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. பின்னர் தேவைப்படும்பொழுது குருதியில் மீண்டும் இடுகின்றது.

மீளுருவாக்கம்

கல்லீரல், தான் இழந்த (கெட்டுப் போன அல்லது சிதைந்த) திசுக்களைத் தானே மீளுருவாக்ககூடிய ஓர் உள்ளுறுப்பு. இப்படிச் செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது. சிலவகையான ஸ்டெம்செல் (வித்துக்கண்ணறைகள் அல்லது வித்துசெல்கள்) இவ்வுறுப்பில் காணப்படுகின்றது.

கல்லீரலின் செயல்பாடுகள்

மனிதர்களின் உடல்கள் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிக்கிறது. பித்தநீர் சுரக்கவும், இரும்பு மற்றும் உயிர்ச்சத்துக்களைத் தேக்கி வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும் இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும் நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.

கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த செங்குருதியணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் காமாலை நோய் உண்டாகும்.

கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு உணவைச் செரிக்க உதவும். பித்தநீர் பித்தநீர்ப்பையிலும் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தநீர்ப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும்.

கல்லீரல் நோய்கள்

இன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது.

கல்லீரல் அழற்சி

கல்லீரல் அழற்சி (Hepatitis) (பன்மை hepatitides ) என்பது உடலில் உள்ள கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் கொள்வதாகும், அந்த நிலைமையில் அந்த உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். இந்த பெயரானது பண்டைய கிரேக்கமொழி சொல்லான ஹெபர் (ἧπαρ) என்பதிலிருந்து வந்ததாகும், இதன் மூலச்சொல் ஹெபட் -(ἡπατ-) ஆகும், அதாவது கல்லீரல் என்ற பொருள் தருகிறது, மற்றும் பின் ஒட்டுச்சொல்லான -இடிஸ் (-itis) என்பது "அழற்சி அல்லது வீக்கம்" என்ற பொருள் கொண்டதாகும், இச்சொல் இவை இரண்டும் கலந்ததாகும் (c. 1727)[1]. இந்த நிலைமையானது தனது வரம்பிற்குள்ளேயே அடங்கலாம், மேலும் தன்னாலேயே குணமாகலாம், அல்லது மேலும் மோசமடைந்து கல்லீரலில் வடு ஏற்படலாம். ஆறு மாதங்களுக்கும் குறைவாக கல்லீரல் அழற்சி இருந்தால், அந்நிலைமை கடுமையான பாதிப்பை குறிக்கும் ஆனால் அதற்கு மேலும் நீடித்தால் அப்போது அது கடுமையாக நீடிக்கும் வகையை சாரும். உலகளவில் உடல் நலத்தை மிகையாக பாதிக்கும் இவ்விதமான கல்லீரல் சேதாரத்திற்கு ஒரு குழுவை சார்ந்த கல்லீரல் அழற்சி தீநுண்மங்கள் அல்லது நச்சுயிரிகளே காரணமாகும்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி

கல்லீரல் இழைநார் வளர்ச்சி (ஒலிப்பு: /sɪˈroʊsɪs/) என்பது ஓர் தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது இழைமப் பெருக்கம் , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்),[2][3][4] போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி குடிப்பழக்கம், கல்லீரல் அழற்சி பி மற்றும் சி மற்றும் கொழுப்புநிறை கல்லீரல் நோய் ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்்ப்புள்ள காரணங்களும் உள்ளன. இவற்றில் சில அறியபடாக் காரணங்களுடைய மூலமறியா தான்தோன்றியானவை.

கல்லீரல்நோய் மூளைக்கோளாறு

கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் ஈரல் ஆழ்துயில் அல்லது கோமா எப்பாடிகம் என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம். [5] வார்ப்புரு:மேற்கோள் {{reflist|2}

  1. [3] ^ ஆன்லைன் புது சொல்லாக்கம் அகராதி
  2. "Cirrhosis – MayoClinic.com".
  3. "Liver Cirrhosis". Review of Pathology of the Liver.
  4. "Pathology Education: Gastrointestinal".
  5. Cash WJ, McConville P, McDermott E, McCormick PA, Callender ME, McDougall NI (January 2010). "Current concepts in the assessment and treatment of hepatic encephalopathy". QJM 103 (1): 9–16. doi:10.1093/qjmed/hcp152. பப்மெட்:19903725.  Full text available here (free registration required).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லீரல்&oldid=1437804" இலிருந்து மீள்விக்கப்பட்டது