பில் கேட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,166 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
== பிற துறைகள் ==
=== எழுத்து / திரைப்படம் ===
இதுவரை பில் கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான "தி ரோடு அஹெட்" என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும் , பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.அதில் தனி நபர் கணினி பயன்பாட்டில் ஏற்பட்ட புரட்சியை பற்றியும் உலகத்தில் அதிவேக தகவல் தொடர்பின் வரவு எதிர்காலத்தை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது . 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட் " என்ற நூலில் வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் , தொழில்நுட்ப கட்டமைப்புகளும் தகவல் வளையங்களும் எப்படி போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்”எனப் பெயரிட்டுள்ளார்.
 
2010 இல் எடுக்கப்பட்ட "வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன் " , பிபிசி தயாரித்த ஆவணப்படமான "தி வர்ச்சுவல் ரெவலுஷன்" உட்பட பல ஆவணப்படங்களில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.
 
1999 ஆம் வருடம் வெளியான "பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி" என்ற திரைப்படத்தில் "ஆப்பிள்" மற்றும் "மைக்ரோசாப்ட்" நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் "அண்டோனி மைகேல் ஹால் " என்ற நடிகர் நடித்தார்.
 
== உலகப் பெரும் பணக்காரர் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1437683" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி