மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 17: வரிசை 17:
* 2000 - நனோ திரிதடையம்
* 2000 - நனோ திரிதடையம்
== மின்னணுக் கருவிகளும் கூறுகளும் ==
== மின்னணுக் கருவிகளும் கூறுகளும் ==
[[படிமம்:Componentes.JPG|thumbnail| மின்னணுக் கூறுகள்]]
மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன்

குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக [[பெருக்கி]], [[வானொலி பெறும் கருவி]], அல்லது [[மின்னணு அலையியற்றி|அலையியற்றி]]) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக [[மின்சுற்றுப் பலகை]]யில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான [[ஒருங்கிணைந்த சில்லு]] போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: [[மின்தேக்கி]]கள், [[மின்தூண்டி]]கள், [[மின்தடையம்|மின்தடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[திரிதடையம்|திரிதடையங்கள்]] ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன.

== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
மின்னியல் பொது வழக்கில் பெரிய அளவில் மின்சக்தியை உற்பத்தி செய்தல், மின் மாற்றம் செய்தல், வழங்கல், பயன்படுத்தல் ஆகியவற்றையும் குறிக்கின்றது. துல்லியமாக, மின்னோட்டம் உலோக கம்பிகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை மின்னியல் என்பர். மின்னோட்டம் குறைகடத்திகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை(electronics) இலத்திரனியல் என்பர். இரண்டும் நெருங்கிய தொடர்புடைய துறைகளே. பல இடங்களில் இலத்திரனியலும் மின்னியலும் ஒத்த சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.

12:15, 9 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.

இலத்திரனியல் (electronics) அல்லது மின்னணுவியல் என்பது மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்கைகளை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.

இலத்திரனியலில் செயல்படு மின்கூறுகளான வெற்றிடக் குழல்கள், திரிதடையங்கள், இருமுனையங்கள், நுண் தொகுச்சுற்றுக்களும், செயலறு மின்கூறுகளான மின்தடையம், மின்தேக்கி, மின்தூண்டிகளும் ஒன்றிணைந்த மின்சுற்றுகள் பெரும் பங்காற்றுகின்றன. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் இலத்திரனோட்டத்தை கட்டுப்படுத்தும் பண்பும் நலிவுற்ற சமிக்கைகளை வலிப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், தொலைத்தொடர்பு, மற்றும் சமிக்கை முறைவழியாக்கம் துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இலத்திரனியல் கருவிகள் நிலைமாற்றிகளாகப் பயன்படுத்தகூடும்; இது எண்ணிம தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. மின்சுற்றுப் பலகைகள் போன்ற ஒன்றிணைப்புத் தொழில்நுட்பங்கள், இலத்திரனியல் பொதியல் தொழில்நுட்பங்கள், மற்றும் பல்வேறு தொடர்பு கட்டமைப்புகள் மின்சுற்று செயல்பாட்டை முழுமையாக்கி கலவையான மின்கூறுகள் முறையான ஒருங்கியமாக செயல்படச் செய்கின்றன.

மின்னணுவியல் என்பது மின்சாரம், மின் இயந்திரவியல் ஆகியவற்றிலிருந்து மாறானது; இவை மின்சார உற்பத்தி, வழங்கல், நிலைமாற்றல், சேமிப்பு மற்றும் மின்சக்தியிலிருந்து பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் சக்திகளிலிருந்து மின்சக்திக்கு மாற்றுவதையும் விவரிக்கின்றன. இவற்றின் கூறுகளாக மின்கம்பிகள், மின் இயக்கிகள், மின்னியற்றிகள், மின்கலங்கள், நிலைமாற்றிகள், உணாத்திகள், மின்மாற்றிகள், மின்தடையங்கள் உள்ளன. இந்த வேறுபாடு மின் பெருக்கிகள் மூலம் நலிவுற்ற சமிக்கைகளை வலிவேற்றப் பயன்படுத்தத் தொடங்கிய 1906இல் இருந்து துவங்கியது. 1950 வரை இதன் முதன்மை பயன்பாடு வானொலி ஒலிபரப்பிகள், வானொலிப்பெட்டிகள், வெற்றிடக் குழல்களிலேயே இருந்தமையால் இத்துறை "வானொலி தொழில்நுட்பம்" என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் குறைக்கடத்தி மின்கூறுகளை பயன்படுத்தி இலத்திரன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்தி கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் திண்மப்பொருள் இயற்பியலின் அங்கமாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக இலத்திரன் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் மின்னணுவியல் பொறியியல் துறையாக அழைக்கப்படுகிறது.

இலத்திரனியல் வரலாறு

இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவி அல்லது கூறு திரிதடையம். அதன் கண்டுபிடிப்பின் பின்னரே இலத்திரனியல் வளர்ச்சி பெற்றது.

மின்னணுக் கருவிகளும் கூறுகளும்

மின்னணுக் கூறுகள்

மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன் குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக பெருக்கி, வானொலி பெறும் கருவி, அல்லது அலையியற்றி) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக மின்சுற்றுப் பலகையில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான ஒருங்கிணைந்த சில்லு போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: மின்தேக்கிகள், மின்தூண்டிகள், மின்தடையங்கள், இருமுனையங்கள், திரிதடையங்கள் ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன.

மின்னியல், இலத்திரனியல், இயற்பியல்

மின்னியல் பொது வழக்கில் பெரிய அளவில் மின்சக்தியை உற்பத்தி செய்தல், மின் மாற்றம் செய்தல், வழங்கல், பயன்படுத்தல் ஆகியவற்றையும் குறிக்கின்றது. துல்லியமாக, மின்னோட்டம் உலோக கம்பிகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை மின்னியல் என்பர். மின்னோட்டம் குறைகடத்திகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை(electronics) இலத்திரனியல் என்பர். இரண்டும் நெருங்கிய தொடர்புடைய துறைகளே. பல இடங்களில் இலத்திரனியலும் மின்னியலும் ஒத்த சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.

இலத்திரனியல் (Electronics) என்பது வெப்பமின் போக்கிகள் (Thermionic valves) மற்றும் குறைக் கடத்திகள் போன்றவற்றில், இலத்திரன் அல்லது வேறு மின்னேற்றப்பட்ட துணிக்கைகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயக்கப்படும் மின்சாரக் கருவிகள் பற்றிய கற்கை மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகும். அத்தகைய கருவிகள் பற்றிய தூய கற்கை இயற்பியலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. அதே நேரம், செயல்முறைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், இலத்திரனியற் சுற்றுக்களை வடிவமைப்பதும், அமைப்பதும், மின் பொறியியல் மற்றும் கணினிப் பொறியியல் போன்ற துறைகளுக்குள் அடங்குகிறது.

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணுவியல்&oldid=1435557" இலிருந்து மீள்விக்கப்பட்டது