ஆழ்வார்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
படமிணைத்தல்
வரிசை 10: வரிசை 10:


==பன்னிரு ஆழ்வார்கள்==
==பன்னிரு ஆழ்வார்கள்==
[[படிமம்:12 ஆழ்வார்கள்.jpg|center|படிமம்:12 ஆழ்வார்கள்]]
*[[பொய்கையாழ்வார்]]
*[[பொய்கையாழ்வார்]]
*[[பூதத்தாழ்வார்]]
*[[பூதத்தாழ்வார்]]

11:52, 27 மே 2013 இல் நிலவும் திருத்தம்

வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களில் பெண் என்பதால் ஆண்டாளையும், நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.

இவர்கள் 7 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.

சொற்பொருள்

இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று பெயர் வைத்தார்கள்.

வரலாறு

கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது

பன்னிரு ஆழ்வார்கள்

படிமம்:12 ஆழ்வார்கள்
படிமம்:12 ஆழ்வார்கள்

கால வரிசை

ஆழ்வார் திருவரங்கத்தமுதனார் 'இராமானுச நூற்றந்தாதி' 12ஆம் நூற்றாண்டு பின்பழகிய பெருமாள் சீயர் 'குருபரம்பரை' 13ஆம் மூற்றாண்டு வேதாந்த 'பிரபந்த சாரம்' 14ஆம் நூற்றாண்டு மணவாள மாமுனிகள் 'உபதேச ரத்தின மாலை' 15ஆம் நூற்றாண்டு
முதலாழ்வார் மூவர் 1, 2, 3 1, 2, 3 1, 2, 3 1, 2, 3
திருப்பாணாழ்வார் 4 9 11 10
திருமழிசை 5 4 4 4
தொண்டரடிப்பொடி 6 8 10 9
குலசேகரர் 7 5 7 6
பெரியாழ்வார் 8 6 8 7
ஆண்டாள் 9 7 9 8 (விட்டுவிட்டார்)
திருமங்கை 10 10 12 11
நம்மாழ்வார் 11 11 5 5
மதுரகவி 12 12 6 12 (விட்டுவிட்டார்)

'திருமுடி அடைவு' என்னும் முறைமை மணவாள மாமுனிகள் வரிசையைப் பின்பற்றுகிறது.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

பொய்கையாழ்வார்  · பூதத்தாழ்வார்  · பேயாழ்வார்  · திருமழிசையாழ்வார்  · நம்மாழ்வார்  · மதுரகவி ஆழ்வார்  · குலசேகர ஆழ்வார்  · பெரியாழ்வார்  · ஆண்டாள்  · தொண்டரடிப்பொடியாழ்வார்  · திருப்பாணாழ்வார்  · திருமங்கையாழ்வார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்வார்கள்&oldid=1428885" இலிருந்து மீள்விக்கப்பட்டது