ஆங்கிலச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: hi:अंग्रेजी विधि
சி தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 10: வரிசை 10:
* [[பொதுச் சட்டம்]]
* [[பொதுச் சட்டம்]]
[[பகுப்பு:சட்ட முறைமைகள்]]
[[பகுப்பு:சட்ட முறைமைகள்]]

[[ca:Dret d'Anglaterra]]
[[cs:Anglické právo]]
[[de:Rechtsgeschichte von England und Wales]]
[[en:English law]]
[[es:Derecho de Inglaterra]]
[[fr:Droit anglais]]
[[hi:अंग्रेजी विधि]]
[[hy:Անգլիական իրավունք]]
[[id:Hukum Inggris]]
[[ja:イングランド法]]
[[ms:Undang-undang Inggeris]]
[[pt:Direito da Inglaterra]]
[[ru:Английское право]]
[[sv:Engelsk rätt]]
[[tr:İngiliz hukuku]]
[[uk:Англійське право]]
[[vi:Hệ thống pháp luật Anh]]

12:31, 7 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

முழுமையாக அல்லது பகுதியாக ஆங்கிலச் சட்டம் பின்பற்றப்படும் உலக நாடுகள்

இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைமுறையிலுள்ள சட்டம் ஆங்கிலச் சட்டம் (English law) எனப்படுகிறது.[1] அயர்லாந்து குடியரசிலும் பெரும்பான்மையான பொதுநலவாய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைமுறையிலுள்ள பொதுச் சட்டம், இதையே அடிப்படையாகக் கொண்டது[2]. பொதுநலவாய நாடுகள் பிரித்தானிய பேரரசின் கீழ் இருந்தபோது ஆங்கிலச் சட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஆங்கிலச் சட்டத்தின் சாரமானது நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபதிகள் தங்களுக்கு முன் வைக்கப்படும் தகவல்களை சட்ட முன்னுதாரணம் (stare decisis) கொண்டு உருவாக்குவதாகும். இங்கிலாந்து மற்றும் வேல்சின் மிக உயரிய மேல்முறையீட்டு நீதிமன்றமான ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீமன்றத்தின் முடிவுகள் மற்ற அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். எடுத்துக்காட்டாக, எந்தவொரு நாடாளுமன்ற சட்டம் இயற்றப்படாவிடினும் கொலை என்பது ஒரு பொதுச் சட்டக் குற்றமாகும். பொதுச் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்தவோ மீட்கவோ இயலும்; இதன்படியே கொலைக்குற்றத்திற்கான தண்டனை மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக (இங்கிலாந்தில்) மாற்றப்படுள்ளது. இரு சட்ட முறைகளுக்கும் முரண் எழும்போது ஆங்கில நீதிமன்றங்களில் இயற்றுசட்டமே பொதுச் சட்டத்தை விட முன்னுரிமை பெறுகிறது.[3]

வரலாறு

தொன்மையான ஆங்கிலச் சட்டம் கி.பி 600இல் கென்ட் மன்னர் அத்தெல்பெர்ட்டினால் எழுதப்பட்டது. இது ஆங்கிலத்தில் மட்டுமல்லாது டியூட்டோனிக்க மொழிகள் அனைத்திலுமே பழமையான சட்டம் ஆகும். அறச் சிந்தனைகளின்அடிப்படையிலேயே இச்சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்தபோதும் அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. கிபி 890இல் கனூட் அரசர் அதுவரை நடைமுறையிருந்த சட்டங்களைத் தொகுத்தார். இருப்பினும் இவை கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தமையால் வெளி உலகிற்கு தெரியாமலே இருந்தது. 1568ஆம் ஆண்டு இவற்றை இலம்பார்டு பதிப்பித்தார். தற்கால ஆங்கிலத்தில் இவை 1840இல் மொழிமாற்றப்பட்டு வெளியானது.

சான்றுகோள்கள்

  1. Jurisdiction Of Courts In England And Wales And Their Recognition Of Foreign Insolvency Proceedings. Insolvency.gov.uk. Retrieved on 2013-02-03.
  2. common law. dictionary.law.com
  3. R v. Rimmington (2005) UKHL 63 at para 30. Bailii.org. Retrieved on 2013-02-03.

இதனையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலச்_சட்டம்&oldid=1397121" இலிருந்து மீள்விக்கப்பட்டது