சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:


மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்|சிவாலயம்]] ஒன்றும் [[விஷ்ணு]] ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்|சிவாலயம்]] ஒன்றும் [[விஷ்ணு]] ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.

இவருக்குச் '''சீவலமாறன்''' என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் [[சிதம்பரநாத கவி]] என்பவர் இயற்றிய [[சீவலமாறன் கதை]] என்னும் நூலால் அறியமுடிகிறது.


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==

21:23, 11 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

அதிவீரராம பாண்டியர் 14 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் எனக் கருதப்படும் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர் ஆவார். இவர் சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். வடமொழியிலும், தமிழிலும் தோன்றிய, நளன் கதை கூறும் நூல்களைத் தழுவி நைடதம் என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் வெற்றி வேற்கை என்னும் நூலையும், காசி காண்டம், கூர்ம புராணம், இலிங்க புராணம் ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் கொக்கோகம் எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.

மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல கோயில்களையும் கட்டுவித்துள்ளார். தென்காசியில் இருக்கும் சிவாலயம் ஒன்றும் விஷ்ணு ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.

இவருக்குச் சீவலமாறன் என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சிதம்பரநாத கவி என்பவர் இயற்றிய சீவலமாறன் கதை என்னும் நூலால் அறியமுடிகிறது.

இவற்றையும் பார்க்கவும்