பொதுச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கிஇணைப்பு: arz:القانون العام மாற்றல்: ar:قانون عام,cs:Angloamerické právo
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 32: வரிசை 32:


[[பகுப்பு:சட்ட முறைமைகள்]]
[[பகுப்பு:சட்ட முறைமைகள்]]

[[af:Gemenereg]]
[[ang:Englisc lagu]]
[[ar:قانون عام]]
[[arz:القانون العام]]
[[bg:Общо право]]
[[cs:Angloamerické právo]]
[[de:Common Law]]
[[el:Αγγλοσαξωνικό δίκαιο]]
[[en:Common law]]
[[es:Derecho anglosajón]]
[[et:Üldine õigus]]
[[fa:کامن لا]]
[[fi:Tapaoikeus]]
[[fr:Common law]]
[[ga:Dlí Coiteann]]
[[he:המשפט המקובל]]
[[hi:साधारण कानून]]
[[id:Hukum Umum]]
[[it:Common law]]
[[ja:コモン・ロー]]
[[ka:ანგლო-ამერიკული სამართალი]]
[[kk:Ортақ құкық]]
[[km:ច្បាប់ធម្មតា]]
[[ko:영미법]]
[[lt:Angloamerikiečių teisė]]
[[ms:Common law]]
[[nl:Common law]]
[[no:Common law]]
[[pl:Common law]]
[[pt:Common law]]
[[ro:Drept jurisprudențial (comun)]]
[[ru:Общее право]]
[[si:පොදු නීතිය]]
[[simple:Common law]]
[[sv:Common law]]
[[th:คอมมอนลอว์]]
[[tr:Ortak hukuk]]
[[uk:Загальне право]]
[[vi:Thông luật]]
[[yi:קאמען לאו]]
[[zh:英美普通法系]]

16:00, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பொதுச் சட்டம் (Common law), அல்லது வழக்குச் சட்டம் அல்லது முன்காட்டு) என்பது சட்டமன்றங்களால் இயற்றப்படாமலும் அரசாணைகளால் கட்டுப்படுத்தபடாதும் நீதிமன்றங்களின் அல்லது அவை போன்ற ஆணையங்களின் சட்டக் கருத்துக்கள் மற்றும் தீர்ப்புகளிலிருந்து நீதிபதிகள் வரையறுக்கும் சட்டம் ஆகும். ஓர் "பொது சட்ட அமைப்பு" என்பது பொதுச் சட்டத்திற்கும் முன்காட்டுக்கும் கூடுதலான மதிப்பு வழங்கும் சட்டபூர்வ முறைமையாகும்,[1] ஒரே சிக்கலுக்கு வெவ்வேறு நேரங்களில் இருவித தீர்வுகள் அமைவது நீதியல்ல என்ற கொள்கையின்படி இந்த முறைமை இயல்பாக வளர்ந்துள்ளது.[2] முன்காட்டின் உரையே பொதுச் சட்டம் எனப்படுகிறது; இதுவே அனைத்து எதிர்கால தீர்ப்புகளையும் பிணைக்கிறது.

பொதுச் சட்ட நீதிமன்றங்களில் முந்தைய வழக்குகளில் எடுக்கப்பட்ட தீர்ப்புகள் கவனிக்கப்படுகின்றன. இதே போன்ற ஒரு சிக்கலுக்கானத் தீர்வு முன்பே வழங்கப்பட்டிருந்தால் அதே தீர்வை பின்பற்றுவது நீதிமன்றத்திற்கு கட்டாயமாகிறது. இருப்பினும் தற்போதைய பிணக்கு முந்தைய வழக்குகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டிருப்பதாக நீதிமன்றம் கருதுமேயானால் (சட்ட வழக்காடலில் முதல் தாக்கம்) நீதிபதிகளுக்கு முன்காட்டியை நிறுவவும் பொதுச் சட்டம் இயற்றவும் ஆதிகாரமும் கடமையும் உண்டு. [3] இதன்பிறகு இந்த தீர்ப்பு முன்காட்டியாக எதிர்கால நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.

பின்னணி

பொதுச் சட்டம் ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் குடியேற்றங்களாக இருந்த நாடுகளில், ஐக்கிய அமெரிக்கா உட்பட, கடைபிடிக்கப்படுகிறது. வேறு பல நாடுகள் குடியியல் சட்டம் எனப்படும் சட்டமன்றங்களால் ஆக்கப்பட்ட சட்டங்களே செல்லுபடியாகும் முறைமையை பின்பற்றுகின்றன. பொதுச் சட்ட நாடுகளில் குடியியல் சட்ட நாடுகளில் இருப்பதை விட நீதிமன்றங்களுக்கு கூடுதலாக அதிகாரம் கொண்டுள்ளன

இங்கிலாந்தில் நீதிமன்றங்கள் முடிவுகள் எடுக்க மரபு, வழக்கம் மற்றும் முன்காட்டு இவற்றின் துணையை நாடியதிலிருந்து பொதுச்சட்டம் உருவாகத் துவங்கியது. முன்காட்டு என்பது கடந்தகாலத்தில் வேறொரு நீதிமன்றம் எடுத்த முடிவாகும். முந்தைய நீதிமன்றங்களின் தீர்ப்புகளிலிருந்து மக்களுக்கு வியப்பளிக்காத, அதே நேரம் மற்ற சட்டங்களுக்குட்பட்ட, தீர்ப்பை அடைய பொதுச் சட்ட நீதிமன்றங்கள் முயலுகின்றன.

பொதுச் சட்ட நாடுகளில் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சட்டம் என்ன என்பதுடன் பிற நீதிமன்றங்கள் என்ன கூறியுள்ளன என்றும் ஆராய்கிறார்கள். ஒரு நீதிமன்றம் ஒரு வழக்கை முடிவு செய்கையில் தனது தீர்ப்பை வழங்குகிறது அல்லது சட்டம் குறித்தக் கருத்தை பதிகிறது. இந்தத் தீர்ப்பு அல்லது சட்டக்கருத்து அந்த நீதிமன்றம் எவ்வாறு தனது முடிவை எட்டியது என்பதை விளக்குகிறது. இந்த விளக்கமும் கருத்துமே பிற நீதிமன்றங்களுக்கு இதேபோன்ற வழக்குகளைத் தீர்மானிக்க வழிகாட்டுதலாக அமைகிறது. இந்த வழக்கு ஒரு முன்காட்டியை நிறுவுகிறது. முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வழக்கமாக கீழ் நீதிமன்றங்கள் இதேபோன்ற அல்லது ஒருமித்த ஒரு வழக்கை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதை கூறுகின்றன. இந்த முன்காட்டுகள் கட்டாயமானவையாக கருதப்படுகின்றன. வழக்கின் தரவுகள் வேறுபட்டிருந்தாலும் இந்த முன்காட்டின் அலசல் வற்புறுத்தலாக கருதப்படுகிறது.

பொதுச் சட்ட நாடுகளில் முன்காட்டு பின்பற்றப்பட்டாலும் சட்டமன்றமாக்கிய சட்டம் முன்னுரிமை கொள்கிறது. ஒரு வழக்கில் இவை இரண்டும் வேறுபட்டால் நீதிமன்றங்கள் வழக்கமாக சட்டமன்ற சட்டத்தினையே பின்பற்றும்.

மேற்கோள்கள்

  1. Washington Probate, "Estate Planning & Probate Glossary", Washington (State) Probate, s.v. "common law", [htm], 8 Dec. 2008: <http://www.wa-probate.com/Intro/Estate-Probate-Glossary.htm>, retrieved on 7 November 2009.
  2. Charles Arnold-Baker, The Companion to British History, s.v. "English Law" (London: Loncross Denholm Press, 2008), 484.
  3. Marbury v. Madison, 5 U.S. 137 (1803) ("It is emphatically the province and duty of the judicial department to say what the law is. Those who apply the rule to particular cases, must of necessity expound and interpret that rule. If two laws conflict with each other, the courts must decide on the operation of each.")

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுச்_சட்டம்&oldid=1368310" இலிருந்து மீள்விக்கப்பட்டது