ஜனநாயக மக்கள் முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 82: வரிசை 82:


[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]

[[en:Democratic People's Front]]
[[ja:西部人民戦線]]

11:47, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Infobox political party v2 ஜனநாயக மக்கள் முன்னணி (Democratic People's Front, முன்னர் மேலக மக்கள் முன்னணி (Western People's Front), என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இது முக்கியமாக மேற்கு மாகாணத்தில் மட்டுமே தேர்தல்களில் போட்டியிடுகிறது.

மேலக மக்கள் முன்னணி ஆரம்பத்தில் ஒரு தொழிற்சங்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அரசியல்கட்சியாக மாற்றப்பட்டது. இக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் இடையே பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் மனோகரன் கணேசன் (மனோ கணேசன்). இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். பிரதித் தலைவர் நல்லையா குமரகுருபரன்.

தற்போது இக்கட்சி ஒரு மாகாண சபை உறுப்பினரையும், எட்டு மாநகர சபை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்

2011 இல் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி 270 சபைகளைக் கைப்பற்றியது. மனோ கணேசன் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி எந்த ஒரு சபையையும் கைப்பற்றவில்லை. ஆனாலும் 4 சபைகளில் போட்டியிட்டு 10 உறுப்பினர்களைப் பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டணியில் விக்கிரமபாகு கருணாரத்தினவின் இடது முன்னணியும் போட்டியிட்டிருந்தது. கொழும்பு மாநகரச்பைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வழங்கியிருந்தது.

ஜமமு வென்ற உறுப்பினர்கள்

உள்ளூராட்சி
சபை
வாக்குகள் % ஜமமு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
ஜமமு
உறுப்பினர்களின் பெயர்களும்
பெற்ற வாக்குகளும்
கொழும்பு மாநகரசபை 26,229 11.07% 6 மனோ கணேசன் (28,433)
எஸ். குகவரதன் (4,223),
கே. ரி. குருசாமி (3,978),
கங்கைவேணியன் (3,389),
சி. பாஸ்கரா (3,156),
லோரன்ஸ் பெர்னாண்டோ (1,531)
அம்பகமுவ பிரதேச சபை 4,855 6.93% 2 விபரம் இல்லை
தெகிவளை - கல்கிசை மாநகர சபை 2,167 2.86% 1 விக்கிரமபாகு கருணாரத்தின (2,171)
கொலன்னாவ நகர சபை 938 3.9% 1 அரவிந்தன் முத்துவீரன் ராஜகுமாரன் (904)
மொத்தம் 34,189 - 10 -
மூலம்:"உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011". Department of Elections, Sri Lanka.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனநாயக_மக்கள்_முன்னணி&oldid=1365112" இலிருந்து மீள்விக்கப்பட்டது