அகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ja:アハム
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 19: வரிசை 19:


[[பகுப்பு: தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு: தமிழர் வாழ்வியல்]]

[[en:Akam (poetry)]]
[[ja:アハム]]

03:48, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது, ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதி ஆகும்[1]. பழந்தமிழ் இலக்கியங்கள் மக்களின் அகவாழ்க்கை பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இலக்கியங்களில் அகப்பொருளைக் கையாள்வது பற்றிய இலக்கணங்களை வகுப்பதுடன், அக்காலத்தின் அக வாழ்வின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

சொற்பொருள்

அகம் என்பது காரணப் பெயர் என்றும், இது போக நுகர்ச்சி ஆதலாலும், அதனால் விளையும் பயனைத் தானே அறிதலாலும் அகம் எனப்பட்டது என்றும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் கூறுகிறார்[2]. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கூடும்போது பிறக்கும் இன்பம் அவர்கள் அகத்தால் (உள்ளத்தால்) உணரப்படுவது. இதனாலேயே அது அகம் எனப்பட்டது என்பர். வாழ்வின் அகம் சார்ந்த பகுதி "அகத்திணை" எனப்பட்டது. இலக்கியங்கள் இது பற்றிப் பேசும்போது அதை "அகப்பொருள்" என்றனர்.

கருத்துரு

தமிழ் இலக்கணம் சொற்களினால் உணரப்படும் பொருளை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. நிலம், காலம் என்பன தொடர்பானவை முதற்பொருளில் அடங்குகின்றன. இந்த இடத்திலும், காலத்திலும் காணப்படுவன கருப்பொருட்கள் எனப்படுகின்றன. மக்கள், விலங்குகள், உணவு, கருவிகள் முதலிய உயர்திணை, அஃறிணைப் பொருட்கள் இதனுள் அடங்கும். மக்களுக்கு உரிய பொருட்கள் அகம், புறம் என்பன. இவையிரண்டும் உரிப்பொருள் என்னும் பிரிவுள் அடங்குகின்றன. இதன்மூலம், மனித வாழ்வியலின் அம்சங்களை நிலம், காலம் என்பவற்றுடனும் அவற்றில் காணப்படும் பிற உலகப் பொருட்களுடனும் இயைபுபடுத்திக் காண்பதற்கான அடிப்படை உருவாக்கப்படுவதைக் காணலாம்.

வகைகள்

மனிதருடைய அகவாழ்க்கையில் பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இந்நிலைகளை நிலப் பிரிவுகளுடனும், காலத்துடனும், இயற்கையுடனும் தொடர்புபடுத்திக் கையாளுகின்றன. இவ்விலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு அகவாழ்வைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், கைக்கிளை, பெருந்திணை என எழுவகையாக வகுத்து விளக்குகிறது தமிழ் இலக்கணம்.

குறிப்புக்கள்

  1. பிள்ளை, கே. கே., 2009. பக்.132.
  2. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, 2006. பக். 3

உசாத்துணைகள்

  • தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2006.
  • பிள்ளை, கே. கே., தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகம்&oldid=1358451" இலிருந்து மீள்விக்கப்பட்டது