சச்சின் பைலட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 51: வரிசை 51:
[[பகுப்பு:14வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:14வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]

[[en:Sachin Pilot]]
[[ml:സച്ചിൻ പൈലറ്റ്]]
[[mr:सचिन पायलट]]

00:39, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சச்சின் பைலட்
இந்திய மக்களவை உறுப்பினர்
தொகுதிஅஜ்மீர் நாடாளுமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புreligion
செப்டம்பர் 7, 1977 (1977-09-07) (அகவை 46)
சஹாரான்பூர், உத்தரப் பிரதேசம்
இறப்புreligion
இளைப்பாறுமிடம்religion
அரசியல் கட்சிஇந்திய தேசிய கங்கிரசு
துணைவர்சாரா
பெற்றோர்
  • religion
வாழிடம்(s)வேத்புரா கிராமம், கசியாபாத்
இணையத்தளம்http://www.sachinpilot.com/
As of செப்டம்பர் 14, 2006
மூலம்: [1]

சச்சின் பைலட் (பி. செப்டம்பர் 7, 1977) ஒரு இந்திய அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கபப்ட்டுள்ளார். தற்போது நடுவண் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் காங்கிரசு அரசியல்வாதி ராஜேஷ் பைலட்டின் மகனாகப் பிறந்தார். இவர் புது தில்லியில் உள்ள பால பாரதி விமானப் படை பள்ளியில் கல்வி கற்றார். தில்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் வர்த்தகப் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

ராஜேஷ் பைலட் 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் இந்தியா திரும்பிய போது தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தௌசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்கு (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அஜ்மீர் தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 இல் இவர் பாரதீய ஜனதா கட்சியின் கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1]

26 ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களை கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்படுகிறார். பைலட் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் பதவியை வகிக்கிறார்.

சொந்த வாழ்க்கை

சச்சின் பைலட் சாரா அப்துல்லாவை (தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவரும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவின் மகள்) 2004 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி டெல்லி யில் மணந்தார்.[2]

வெளியான புத்தகங்கள்

  • ராஜேஷ் பைலட் : இன் ஸ்பிரிட் ஃபாரெவர் : ஜனவரி 2001

குறிப்புதவிகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_பைலட்&oldid=1355362" இலிருந்து மீள்விக்கப்பட்டது