ராஜ்தீப் சர்தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: te:రాజ్‍దీప్ సర్దేశాయ్
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 62: வரிசை 62:
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர்கள்]]


[[en:Rajdeep Sardesai]]
[[hi:राजदीप सरदेसाई]]
[[mr:राजदीप सरदेसाई]]
[[te:రాజ్‍దీప్ సర్దేశాయ్]]
[[te:రాజ్‍దీప్ సర్దేశాయ్]]

23:46, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

Rajdeep Sardesai
பிறப்பு24 மே 1965 (1965-05-24) (அகவை 58)
Gujarat
இருப்பிடம்New Delhi
தேசியம்Indian இந்தியா
பணிJournalist
பணியகம்TV 18
அறியப்படுவதுAnchoring and Reporting
சொந்த ஊர்New Delhi
சமயம்Hindu
வாழ்க்கைத்
துணை
Sagarika Ghose
பிள்ளைகள்2

ராஜ்தீப் சர்தேசாய் (Rajdeep Sardesai, இந்தி: राजदीप सरदेसाई) (24 மே, 1965ம் ஆண்டு பிறந்தார்), இந்திய பத்திரிகையாளர், அரசியல் பார்வையாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்.

வாழ்க்கை வரலாறு

ராஜ்தீப் சர்தேசாய் அகமதாபாத், குஜராத் மாநிலத்தில் பிறந்தார், இவரது தந்தை கோவாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாய், இவரது தாயார் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நந்தினி சர்தேசாய், இவர் மும்பையில் சமூக சேவகியாக தொண்டாற்றியதுடன், மும்பை, புனித சேவியர் கல்லூரியில் சமூகவியல் துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்வி

ராஜ்தீப், மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கன்னான் பள்ளி மற்றும் காம்பியன் பள்ளியில் படித்தார், அதன் பின் இளங்கலை பொருளாதார பட்டத்தை மும்பை, புனித சேவியர் கல்லூரியில் பெற்றார். அதன் பின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், கலைப் படிப்பில் இளங்கலை, கலைப் படிப்பில் முதுகலை மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் இளங்கலை பட்டங்களைப் பெற்றார்.[1]

வேலை

2007ம் ஆண்டு, இந்திய பத்திரிகைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக பத்மஸ்ரீ விருதை ராஜ்தீப் பெற்றார். புகழ்பெற்ற "தி பிக் ஃபைட்" என்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியை நடத்தினார். ஜிபிஎன் நிறுவுவதற்கு முன்னர், என்டிடிவி/24X7 மற்றும் என்டிடிவி/இந்தியா ஆகிய சேனல்களுக்கு நிர்வாக ஆசிரியராக பணிபுரிந்துள்ளார், இவை இரண்டுக்கும் செய்தி கோட்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தொலைக்காட்சி ஊடகத்துக்குள் 1994ம் ஆண்டு நுழைந்தார். நியூடெல்லி டெலிவிஷன் (என்டிடிவி) தொலைக்காட்சியில் அரசியல் ஆசிரியாக பணியைத் தொடங்கினார். குஜராத் கலவரங்கள் குறுத்த செய்திகளை உலகுக்கு வெளிக்கொண்டு வந்ததில் இவர் பிரபலமானார். பின்னர் என்டிடிவி பணியிலிருந்து விலகி, சொந்தமாக குளோபல் பிராட்கேஸ்ட் நியூஸ் (GBN) என்ற சேனலை அமெரிக்காவின் மிகப் பெரிய சேனலான சிஎன்என் மற்றும் ராகவ் பாஹ்லின் டிவி18 ஆகியவற்றுடன் கூட்டிணைந்து தொடங்கினார். இதன் பின்னர் சிஎன்பிசியின் இந்திய பதிப்பு, சிஎன்பிசி-டிவி18 எனவும், ஹிந்தி நுகர்வோர் சேனல் சிஎன்பிசி ஆவாஸ் எனவும், சர்வதேச சேனல் எஸ்ஏடபிள்யூ எனவும் அழைக்கப்பட்டது. ராஜ்தீப்பை தலைமை ஆசிரியராகக் கொண்ட சேனல் சிஎன்என்-ஐபிஎன் என்றழைக்கப்பட்டது. இது டிசம்பர் மாதம் 17ம் தேதி, 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சேனல் 7 தொலைக்காட்சியின 46 சதவீத பங்குகளை ராஜ்தீப்பின் நிறுவனம் வாங்கியதால், இந்நிறுவனமும் ஒரே குடையின் கீழ் வந்தது. சேனல் 7 பின்னர் ஐபிஎன்-7 என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பொறுப்புகள்

ராஜ்தீப் சர்தேசாய் தற்போது எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவராக உள்ளார். மக்கள்தொகை ஆட்சிக் குழு மற்றும் இந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினராக பதவி வகிக்கிறார். முன்னணி ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்.

குடும்பம்

ராஜ்தீப்பின் மனைவி பெயர் சாகரிகா கோஸ். பத்திரிகையாளரான இவர், சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் மூத்த செய்தி ஆசிரியராகவும், அறிவிப்பாளராகவும் செயலாற்றுகிறார். இவர்கள் இருவரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்துக் கொண்டனர். டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணிபுரியும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது, இதைத்தொடர்ந்து 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்௯௯௪. இவர்களுக்கு இஷான் (14) என்ற மகனும், தாரிணி (12) என்ற மகளும் உள்ளனர்.

பரிந்துரைகள்

  1. இண்டஸ் வியூ 2.1 (ஜனவரி 2006) கிடைத்த பதிப்பு சட்ட இளங்கலைப் பட்டப் படிப்பு (LLB), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படுவதல்ல, இங்கு இளங்கலை சிவில் சட்டப் படிப்பில் (BCL) தவறு நடந்துள்ளது, அது சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம். அனைத்து கலை மற்றும் கவின்கலைக்கான இளங்கலைப் படிப்பும், மெட்ரிகுலேஷனின் இருபத்தி ஓன்றாம் பிரிவின் படி தொடங்குகிறது, இது கலைக்கான முதுகலை பட்டப்படிப்பைக் கோரும் ராஜ்தீப் குப்தா]

வெளிபுற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்தீப்_சர்தேசாய்&oldid=1354498" இலிருந்து மீள்விக்கப்பட்டது