பிரிஸ்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

13:43, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பிரிஸ்டல்
ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி
A view from above of office blocks and church spires adjacent to a river which is crossed by a road bridge. In the right foreground a city park and a ruined church. A small boat is moving on the river and a larger barge is moored against a wooded quay. In the distance on the right wooded hills and on the left a mass of predominantly red brick housing.
பிரிஸ்டல் நகரக் காட்சிகள்
A coat of arms, with a shield showing a sailing ship and a castle with maned lions on either side, surmounted by the helmet from a suit of arms and two hands holding a snake and scales of justice. The motto at the bottom is "Virtute et Industria"
நகர மன்றத்தின் மரபுவழி மேலங்கிச் சின்னம்
குறிக்கோளுரை: "Virtute et Industria" "பண்பாலும் உழைப்பாலும்"
A map showing the location of Bristol in England.
இங்கிலாந்தில் பிரிஸ்டலின் அமைவிடம்
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்தென் மேற்கு இங்கிலாந்து
நிர்வாக கௌன்ட்டிபிரிஸ்டல்
(தனியான கௌன்ட்டி)
நிர்வாகத் தலைமையிடம்பிரிஸ்டல்
அரச கட்டளை1155
கௌன்ட்டி தகுதி1373
அரசு
 • வகைஒற்றை ஆட்புலம், கதீட்ரல் உள்ள நகரம்
 • ஆட்சி அமைப்புபிரிஸ்டல் நகர மன்றம்
 • தலைமைமேயரும் ஆய அவையும்
 • மேயர்ஜார்ஜ் பெர்குசன்
பரப்பளவு
 • ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி110 km2 (40 sq mi)
ஏற்றம்[1]11 m (36 ft)
மக்கள்தொகை (2011)
 • ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி4,28,100
 • அடர்த்தி3,639/km2 (9,420/sq mi)
 • நகர்ப்புறம்587,400 (2,006 மதிப்பீடு)
 • பெருநகர்1,006,600
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே0)
இணையதளம்bristol.gov.uk/

பிரிஸ்டல் Bristol (Bristol, /ˈbrɪstəl/ (கேட்க)) ஐக்கிய இராச்சியத்தில் சிட்டி எனப்படும் கதீட்ரல் உள்ள நகரம் ஆகும். மேலும் இது ஒற்றை ஆட்புலமாகவும் நிர்வாக கௌன்ட்டியாகவும் விளங்குகிறது. இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2009ஆம் ஆண்டு நிலவரப்படி 433,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் அடக்கிய பெரிய ஊரக வலயத்தில் (LUZ) 2007ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 1,070,000 ஆகும்.[3] இது மக்கள்தொகைப்படி இங்கிலாந்தில் ஆறாவதும் ஐக்கிய இராச்சியத்தில் எட்டாவதுமான நகரம் ஆகும்.[4]

இந்த நகரத்திற்கு அரசர் அங்கீகாரம் 1155இலேயே வழங்கப்பட்டது; 1373இல் தனியான கௌன்ட்டி தகுதி வழங்கப்பட்டது. 13வது நூற்றாண்டில் இருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி வருமானத்தில் மூன்றாம் நிலையில் இருந்தது.[5] தொழிற் புரட்சிக்குப் பின்னர் லிவர்ப்பூல், பர்மிங்காம், மான்செஸ்டர் போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது. இந்த நகரம் ஏவான் ஆற்றையொட்டி அமைந்துள்ளது. இதன் பெயர் தொன்மை ஆங்கிலத்தில் பாலம் உள்ளவிடம் எனப் பொருள்படும். இது 800 ஆண்டுகளாக துறைமுகமாக இருந்து வந்தது. தற்போது உள்ள பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்தை அணுகுவது கடினமாக உள்ளது. ஏவான்மௌத் எனப்படும் ஏவான் ஆற்று கழிமுகத்தில் புதிய துறைமுகம் கட்டமைக்கபட்டுள்ளது.

மிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. கிளிஃப்டன் தொங்கு பாலம் ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் உள்ளது.

பிரிஸ்டல் அடிமை வணிகத்திற்கு மையமாக இருந்தது.[6]

இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது இந்த நகரம் வெகுவாக சேதமடைந்தது. தற்போது இங்கு பல புதிய தொழிற்சாலைகளும் அலுவலகக் கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. கான்கோர்டு மீயொலி வானூர்தி இங்குதான் உருவாக்கப்பட்டது.

டிரிப் ஹாப் எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.[7]

உலகில் 34 இடங்கள் பிரிஸ்டல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்

  1. "Historical Weather for Bristol, England, United Kingdom". Weatherbase. Canty & Associates. June 2011. பார்க்கப்பட்ட நாள் 3 August 2007.
  2. "Population estimates for UK, England and Wales, Scotland and Northern Ireland – current datasets". National Statistics Online. Office for National Statistics. Archived from the original (ZIP) on 29 June 2011. பார்க்கப்பட்ட நாள் 27 June 2010.
  3. "Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ) (tgs00080)". Eurostat. European Commission. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.
  4. "Bristol Facts". University of the West of England. பார்க்கப்பட்ட நாள் 12 June 2011.
  5. Manco, Jean (25 July 2009). "The Ranking of Provincial Towns in England 1066–1861". Delving into building history. Jean Manco. பார்க்கப்பட்ட நாள் 13 January 2010.
  6. "Colston's slave trade legacy". thisisbristol.co.uk. பார்க்கப்பட்ட நாள் 18 December 2010. {{cite web}}: Text "Bristol News" ignored (help); Text "This is Bristol" ignored (help)
  7. Maine, Samatha. "Trip-Hop in Bristol – a brief history - 1994 rises". 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸ்டல்&oldid=1343689" இலிருந்து மீள்விக்கப்பட்டது